|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 November, 2011

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகி கலாநிதி மாறன் மனைவி!


இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகள் பட்டியலில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறன் முதலிடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு சம்பளம் ரூ. 64.4 கோடியாகும். ஆண் நிர்வாகிகளில் முதலிடத்தில் இருப்பவர் நவீன் ஜின்டால். 2வது இடத்தில் கலாநிதி மாறன் இருக்கிறார். பார்ச்சூன் இதழ், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்கள், நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் நவீன் ஜின்டாலும், பெண்கள் பிரிவில் காவேரி கலாநிதி மாறனும் முதலிடத்தில் உள்ளனர். 


காவேரியின் சம்பளம் ரூ. 64.4 கோடி: காவேரி கலாநிதி மாறன் இந்தியாவின் பத்து அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகள் பிரிவில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் சன் டிவியின் இணை நிர்வாக இயக்குநர் ஆவர். இவரது வருடாந்திர சம்பளம் ரூ. 64.4 கோடியாகும். 2வது இடத்தில் இருப்பவர் பெனின்சுலா லேன்ட் நிறுவனத்தின் தலைவர் ஊர்வி பிரமாள். 3வது இடத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரீத்தா ரெட்டி இருக்கிறார். 4வது இடத்தில் பிரிட்டானியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினீதா பாலி இருக்கிறார். ஆண்கள் பிரிவில் முதலிடத்தில் இருப்பவர் நவீன் ஜின்டால். இவரது ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ. 69.7 கோடியாகும்.

கலாநிதிக்கு 2வது இடம்: 2வது இடம் கலாநிதி மாறனுக்குக் கிடைத்துள்ளது. கலாநிதி மாறனின் ஆண்டு வருமானம், 64.4 கோடியாகும். அதாவது இவரும் மனைவி காவேரியும் ஒரே சம்பளம் வாங்குகின்றனர். கடந்த 2010-11ல் கலாநிதியின் சம்பளம் 73.68 சதவீதம் அதிகரித்துள்ளது. டிவி சானல்கள், ஸ்பைஸ்ஜெட் விமான சேவை உள்ளிட்ட பல பிசினஸ்களில் ஈடுபட்டுள்ளார் கலாநிதி மாறன். இவரை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை தென்னிந்தியாவின் தொலைக்காட்சி ராஜா என்று வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கலாநிதிக்கு 2, காவேரிக்கு 3 ஒட்டுமொத்த இந்திய சிஇஓக்கள் பட்டியலில் அதிக சம்பளம் வாங்குவோரில் கலாநிதி மாறன் 2வது இடத்திலும், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் 3வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள்: இந்தியாவின் அதிக சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் அல்லது நிர்வாகிகள் பட்டியலையும் பார்ச்சூன் வெளியிட்டுள்ளது. அதில், முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி சந்தா கோச்சார். 2வது இடத்தில் ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவான ஷிகா சர்மாவும், 3வது இடத்தில் டபே தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசனும் உள்ளனர். 4வது இடத்தில் காக்னிசன்ட் தலைமை செயல் அதிகாரி அருணா ஜெயந்தி உள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...