|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 November, 2011

அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடிக்கவில்லை பார்த்திபன்!





தற்போது இந்தபடத்திற்கான நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீசியன்கள் தேர்வு செய்யும் வேலை நடந்து வருகிறது. இதில் புதுமுகங்களுடன் சேர்ந்து நடிகர் பார்த்திபனும் அப்பா, மகன் என இரட்டை வேடம் ஏற்க இருந்தார். இதற்காக தனது உடல எடையை குறைத்தும், ஹேர் ஸ்டைல், மீசை உள்ளிட்டவைகளையும் மாற்றி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் சூட்டிங் மதுரையில் அடுத்த மாதம் துவங்க இருந்தது. படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் சமயத்தில் இன்று (நவம்பர் 10) காலை தனது பேஸ் புக் இணையத்தில் ''அன்னக்கொடியும் கொடிவீரனும்' photos ஏன் போஸ்ட் பண்ணீங்க நீங்க? suspence வேண்டாம்னா? என்று என் கீ(ர்த்தனா) கேட்டார். அவரிடம் மௌனத்தை பதிலாக்கி விட்டு, உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்கிறேன்... அப்படத்தில் நான் பங்கேற்கவில்லை! காரணங்கள் சொல்லலாமே தவிர, சொல்வதெல்லாம் காரணமாகி விடாது! இன்று நான் நம்புவதற்கும் மேலாக, என்னை விரும்பும் ரசிகர்களின் (முதல் சொட்டு மழையாய் விழப்போகும்) கைத்தட்டலுக்காக செவிமடி ஏந்தி காத்திருப்பதை விட்டுவிட்டு....''  இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.வித்தகனை சென்சார் செய்கிறார்கள். சான்றிதல் கிடைத்ததும் nov-18 என்று குறிப்பிட்டு விளம்பரம் வரும். அடுத்து மக்களை அரங்கிற்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செவ்வனே செய்தல் வேண்டும். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...