|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 November, 2011

ஆவின் பால் இனி லிட்டர் 24 ரூபாய்!


தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6.25 உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுவரை 1 லிட்டர் ரூ.17.75க்கு விற்கப்பட்ட ஆவின் பால் இனி 24 ரூபாய்க்கு விற்கப்படும். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள விலை உயர்வு பட்டியலில்  கூறப்பட்டுள்ளதாவது: பால் உற்பத்தியாளர்களுக்கு பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தவும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தவும் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் ஏற்கெனவே பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதையும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதையும் கருத்தில் கொண்டு, அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 6.25 உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...