|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 November, 2011

காங்.கில் இணைந்த சிரஞ்சீவி அமைச்சராகிறார்!


பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் கட்சி நடத்தி வந்த நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸில் வந்து இணைந்து விட்டதைத் தொடர்ந்து தற்போது அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியைக் கொடுக்க சோனியா காந்தி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இந்தப் பதவிக்காகத்தான் இத்தனை நாட்களாக ஆவலுடன் காத்திருந்தார் சிரஞ்சீவி. இந்தப் பதவியே முன்பே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இடையில் தெலுங்கானா பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததாலும், சோனியாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதாலும் அவரால் மத்திய அமைச்சர் பதவியை உடனே அடைய முடியவில்லை.

இந்த நிலையில், தற்போது சிரஞ்சீவிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க சோனியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிரஜா ராஜ்ஜியத்தைக் கலைத்து விட்டு காங்கிரஸில் சேர்ந்தபோது சோனியா காந்தி அப்போது டெல்லிலேயே இல்லை. மாறாக ராகுல் முன்னிலையில்தான் அவர் கட்சியில் சேர்ந்தார்.இந்த நிலையில் முதல் முறையாக சோனியாவை நேற்று சந்தித்தார் சிரஞ்சீவி. காங்கிரஸில் சேர்ந்த பிறகு அவர் சோனியாவை சந்தித்தது இதுவே முதல் முறையாகும். அப்போது உரிய கெளரவம் தரப்படும் என சிரஞ்சீவிக்கு உறுதியளித்தாராம் சோனியா. அவருக்கு விரைவில் மத்தியஇணை அமைச்சர் பதவி தரப்படும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதற்கு முன்பாக சிரஞ்சீவி எம்.பியாக வேண்டும். ராஜ்யசபா மூலமாகவோ அல்லது லோக்சபா எம்பியாகவோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியும். இதற்காக அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் சிரஞ்சீவியை நிற்க வைக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அப்போது 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ராஜ்யசபா தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே சிரஞ்சீவி அமைசச்ராகி விடுவார் என்று கூறப்படுகிறது. அமைச்சரான பின்னர் அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவாராம்.

அனேகமாக அடுதத மாத வாக்கில் சிரஞ்சீவி அமைச்சராக்கப்படலாம் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாத வாக்கில் உ.பியில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்குள்ளாக சிரஞ்சீவி விவகாரத்தை முடித்து விட காங்கிரஸ் தலைமை தீர்மானித்துள்ளது. நேற்று சோனியாவை சந்தித்த பின்னர் வெளியே வந்த சிரஞ்சீவி படு உற்சாகமாக காணப்பட்டார். அவர் கூறுகையில், எனக்கு உரிய கெளரவம் அளிக்கப்படும் என்று மேடம் உறுதியளித்துள்ளார். மேலும் எனது கட்சியிலிருந்து காங்கிரஸில் இணைந்த எம்.எல்.ஏக்களுக்கும், பிற தலைவர்களுக்கும் கூட உரிய மரியாதை தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...