|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 November, 2011

அக்னி 5 ஏவுகணை பிப்ரவரியில் சோதனை!

அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை பிப்ரவரி மாதம் சோதனை செய்யப்படும் என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சரஸ்வத் கூறியுள்ளார். அக்னி என்ற பெயரில் ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது. அக்னி 1, அக்னி 2 மற்றும் 3 ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. 3,000 கி.மீ. தூரத்தில் உள்ள எதிரியின் இலக்கை குறிதவறாமல் தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்தது.

அந்த அமைப்பின் தலைவர் சரஸ்வத் நேற்று பெங்களூரில் அளித்த பேட்டியில், ‘‘அக்னி 4 ஏவுகணை சோதனையின் வெற்றி நமக்கு மேலும் ஊக்கத்தை அளித்துள்ளது. அக்னி 5 ஏவுகணை தயாரிப்பில் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 5,000 கி.மீ. தூரத்தில் இலக்கை கூட குறிதவறாமல் சென்று தாக்கும். பிப்ரிவரி மாதத்தில் அக்னி 5 ஏவுகணை சோதித்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...