|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 November, 2011

கார் ஏற்றி எல்ஐசி அதிகாரி கொலைகள்ளக் காதலனுடன், மனைவி கைது! (கலிகாலம்)


அம்பை அருகே கார் ஏற்றி எல்ஐசி அதிகாரி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டனர்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி விநாயகர் காலனியைச் சேர்ந்தவர் விசுவநாதன். அவரது மனைவி ஆதிலெட்சுமி. அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். விசுவநாதன் மார்த்தாண்டத்தில் எல்ஐசி உயர் நிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். தினமும் அவர் நெல்லை வரை பைக்கில் சென்று பின்னர் அங்கிருந்து பஸ்சில் மார்த்தாண்டம் செல்வது வழக்கம்.

கடந்த 10ம் தேதி அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது அம்பை கல்சுண்டு காலனி அருகே பைக் மீது பின்னால் வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த விசுவநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து விகேபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே விசுவநாதன் சிகிச்சை பலனின்றி கடந்த 13ம் தேதி இறந்தார். இறப்பதற்கு முன்பு அவர் போலீசாரிடம் மரண வாக்குமுலம் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் விகேபுரம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், அம்பை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் விசுவநாதன் மனைவி ஆதிலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆதிலட்சுமி நேற்று மாலை விஏஓ முன்பு சரணடைந்தார்.

அப்போது அவர் அளித்துள்ள வாக்குமுலத்தில் கூறியிருப்பதாவது,எனக்கும், அம்பை எல்ஐசி காலனியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் குமார் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. ஆட்டோ டிரைவரான குமார் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றபோது எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்து எனது கணவர் கண்டித்தார். இது பற்றி குமாரிடம் தெரிவித்தேன்.

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக் கட்ட இருவரும் முடிவு செய்தோம். கடந்த 1 மாதத்துக்கு முன்பாக ரூ.1 லட்சம் குமாரிடம் கொடுத்தேன். அந்த பணத்தில் தான் குமார் கார் வாங்கினார். கடந்த 10ம் தேதி வேலைக்கு சென்ற விசுவநாதனை கார் ஏற்றிக் கொன்றோம். இதற்கு குமாரின் நண்பர்கள் இருவரும் உதவினர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி குமாரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. குமாரின் நண்பர்களை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...