|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

நடத்தையில் சந்தேகப்பட்ட காதலன் நடிகை சவுமியாவை 13 முறை கத்தியால் குத்தி...
கன்னட நடிகை சவுமியாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது காதலன் அனில்குமார் அவரை 13 முறை உடல் முழுக்க கத்தியால் குத்தினார். சவுமியாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஹுடுகா ஹுடுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சவுமியா. பெங்களூரைச் சேர்ந்த அனில் குமாரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.ஆனால் அனில்குமார் ஏற்கெனவே ரஜனி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. ரஜனியை விவாகரத்து பெற முயற்சித்து வருகிறார். இந்த விவாகரத்துக்கான வழக்குச் செலவைக்கூட சவுமியாதான் கொடுத்து வந்தாராம். 


இந்த நிலையில் சவுமியா நடத்தையில் அனில்குமாருக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது. சினிமா உலகில் வேறு சிலருடன் சவுமியா தொடர்பு வைத்து இருப்பதாக கருதினார். இதனால் அவரை பின் தொடர்ந்து சென்று கண்காணித்து வந்தார். சவுமியா சில இளைஞர்களுடன் நெருக்கமாக சிரித்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் ஏற்பட்டது. பாய்ந்து சென்று சவுமியாவை கத்தியால் குத்தினார். கழுத்து, வயிறு, வலதுகை போன்ற பகுதிகளில் பலமுறை சர மாரியாகக் குத்தினார். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சவுமியாவை யலஹங்காவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தகவல் அறிந்ததும் போலீசார் அனில்குமார் வீட்டுக்குச் சென்றனர். போலீசை பார்த்ததும் அனில்குமார் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். ஆனால் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.சில தினங்களுக்கு முன் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மனைவியைக் குத்திக் கொல்ல முயன்றது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...