|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

பாலசிங்கத்தை ஓரங்கட்ட நினைத்ததா விடுதலைப் புலி விக்கிலீக்ஸ்!



விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான ஆன்டன் பாலசிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமாதான நகர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன என்று இலங்கை அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார் என்று 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய அமெரிக்கத் தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பியுள்ள கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அச்செய்திக் குறிப்பில் சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாக ஆன்டன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதுகின்றனர். கிழக்கில் கடும் போக்குடைய கருணா, கரிகாலன் ஆகியோருக்கும் வடக்கில் இருந்த புலிகளுக்கும் இடையேயான உறவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தத் தகவலை புலிகளின் தொடர்பாடலை ஊடறுத்துக் கேட்ட போது தெரியவந்துள்ளதாக மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். எனினும் அத்தகவலின் உறுதித் தன்மை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. சமாதான நடவடிக்கைகள் புலிகளின் ராணுவ தயார் நிலையை மோசமாகப் பாதித்திருப்பதாக புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் பானு உட்பட பலர் கருதினர். எந்த முடிவுகளையும் இறுதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனே எடுப்பார். எனினும் அவரின் முடிவுகளில் அதிக தாக்கம் செலுத்துவோராக கடும் போக்குடைய புலித்தலைவர்களே இருந்தனர். அத்தகைய கடும்போக்குடைய புலிகள் சமாதான நடவடிக்கைகளில் இருந்து பாலசிங்கத்தை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறு அமெரிக்கத் தூதர் கேபிள் தகவல் அனுப்பியதை விக்கிலீக்ஸ் இப்போது வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...