|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

ஒஸ்திக்கு ரெட் கார்டு...

சன் டிவிக்கு சேட்டிலைட் உரிமையை விற்றதால் சிம்பு நடிப்பில் தரணி இயக்கியுள்ள ஒஸ்தி படத்தை வரும் 8-ம் தேதி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒஸ்தி படத்தை வரும் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமை சன் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை திரையிட தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்து, ஒஸ்திக்கு ரெட் கார்டு போடுவதாக அறிவித்துள்ளது. தங்களின் டெபாசிட் தொகையை திருப்பித் தரும் வரை சன் குழுமத்துடன் தொடர்புள்ள படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று சமீபத்தில்தான் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தது நினைவிருக்கலாம். இந்த நிலையில் ஒஸ்திக்காக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய விநியோகஸ்தர்கள் முயன்றபோது, சன் டிவி பிரச்சினையைக் காட்டி தியேட்டர் தரமறுத்துள்ளனர் உரிமையாளர்கள். சன் டிவி ரூ 2.4 கோடியை கொடுத்து தியேட்டர் உரிமையாளர்களை செட்டில் செய்தால் மட்டுமே ஒஸ்தி ரிலீசாக முடியும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...