|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

எய்ட்ஸ் இல்லா சமூதாயம் 'ஹூ'வின் புதிய திட்டம்!எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் உலக அளவில் எய்ட்ஸ் நோய் தாக்குதலை பூஜ்ய நிலைக்கு கொண்டு வர உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. 2011-2015 ஆண்டிற்குள் எய்ட்ஸ் நோய் தாக்குதல் இல்லாத உலகமாக மாற்றும் கருவை கொண்ட திட்டத்தை உருவாக்கியுள்ளது.

உலக அளவில் உள்ள எய்ட்ஸ் நோயளிகள் எண்ணிக்கை எய்ட்ஸ் என்னும் உயிர் கொல்லி நோயினால் உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிது புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தீவிரமாகி ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

பூஜ்ய இலக்கு நிர்ணயம் ஆண்டு தோறும் ஒரு கருவை மையமாக வைத்து எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு அதாவது 2011 – 2015 ஆண்டின் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரமாக ‘கெட்டிங் டூ ஜீரோ’ என்ற இலக்குடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது எய்ட்ஸ் நோய் தாக்குதலில் பூஜ்யம், எய்ட்ஸ் நோயினால் மரணமடைவடைகள் பூஜ்யம், ஹெச்ஐவி பாதிப்பில்லா சமுதாயத்தை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மருந்து கண்டுபிடிப்பு எய்ட்ஸ் நோயை முற்றிலும் அழிக்க அதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்பட வில்லை. அதைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் மட்டுமே கட்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலை, இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து சமீபத்தில் ஆய்வில் உடலில் எச்ஐவி கிருமிகள் பரவுவதை நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன் பொருள் ஒன்றே தடுத்து நிறுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புதிய மைல் கல் இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது : நம் உடலிலேயே இருக்கும் எஸ்ஏஎம்எச்டி1 எனப்படும் புரோட்டீன், எச்ஐவி கிருமிகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுப்பதாக அமெரிக்க, பிரான்ஸ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். எச்ஐவிக்கு சங்கிலி இணைப்பு போன்ற இணைப்பை தந்து அதை பலப்படுத்தும் டீஆக்ஸி நியூக்ளியோடைட் பொருளை எஸ்ஏஎம்எச்டி1 புரோட்டீன் தகர்த்து செயலிழக்க செய்வதை தற்போது கண்டுபிடித்துள்ளோம். இதை மருந்தாக பயன்படுத்தினால், எச்ஐவி பரவாமல் தடுத்துவிடலாம். அதுபற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...