|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

வை-கியர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்!


உலக கணினி சந்தையில் ஆன்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் ஆப்பிள் நிறுவனம் தனக்கென்று தனி முத்திரையை பதித்து வருகிறது. தற்போது வை-கியர் என்ற ப்ளூடூத் ஹெட்செட் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துகிறது. மேக், மேக்புக், ஐபோன் மற்றும் ஐபாட் ஆகியவை ஆப்பிள் நிறுவனத்துக்கு அபாரமான வெற்றியைத் தேடித் தந்துள்ளன. ஆனால் ஆப்பிள் தனது பிரபல ஐஒஎஸ் இயங்கு தளத்திற்கு தேவையான சரியான புளூடூத் ஹெட்செட்டுகளை கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.
வை-கியர் நிறுவனம் தரமான புளூடுத் ஹெட்செட்டுகளை வழங்கி வந்தது. குறிப்பாக ஐஒஎஸ் இயங்கு தளத்திற்கு தேவையான ஹெட்செட்டுகளை வை-கியர் வழங்கி வந்தது. தற்போது இந்த நிறுவனம் ஆப்பிளுக்கு சொந்தமாகிவிட்டது. தனது புளூடூத் ஹெட்போன்களை வழங்குவதற்காகவே இந்த நிறுவனத்தை ஆப்பிள் வாங்கி இருக்கிறது.
வை-கியர் வழங்கும் இந்த ஸ்டீரியோ புளூடூத் ஹெட்போன்கள் ஆப்பிளின் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் சாதனங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே ஆப்பிள் ஒரு புளூடூத் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த ஹெட்செட் தரமாக இல்லாததால் ஆப்பிள் அதை கைவிட்டு விட்டது.
இப்போது ஆப்பிள் ஏ2டிபி தொழில் நுட்பத்துடன் கூடிய உயர்தர புளூடூத் ஸ்டீரியோ ஹெட்போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஹெட்போன்கள் ஐமஃப்ஸ் என்று அழைக்கப்படும். இந்த ஐமஃப் ஹெட்போன்கள் மிகத் துல்லியமான இசையை வழங்குவதோடு வெளிப்புறத்திலிருந்து வரும் இரைச்சலை தடுத்துவிடும். மேலும் மிக மென்மையான இயர் பட்சுக்களைக் கொண்டிருக்கும். இதன் இசை 40 அடி தொலைவிற்கு அருமையாக கேட்கும்.
இந்த புதிய ஹெட்போன் உரையாடலை மிகத் தெளிவாக வழங்கும். அதுபோல் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே இந்த ஹெட்போனில் போன் அழைப்புகளையும் எளிதாக பேச முடியும். உரையாடல் முடிந்தவுடன் இந்த ஹெட்போன் மியூசிக் மோடுக்கு மாறிவிடும். மேலும் இந்த ஐமஃப்ஸ் ஹெட்போனைப் பற்றி வேறு தகவல்கள் இன்னும் வரவில்லை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...