|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

மீண்டும் கமல் தொடங்கிய மய்யம் இணைய இதழ்!ரசிகர்களுக்காக முன்பு கமல்ஹாஸன் மய்யம் என்ற பத்திரிகையை தொடங்கி சில காலம் நடத்தினார். பின்னர் பத்திரிகை நின்றுவிட்டது. கடந்த ஆண்டு மீண்டும் மய்யம் பத்திரிகையை டேப்ளாய்டு வடிவில் நடத்த ஆரம்பித்தார். இலக்கிய அறிஞர்களை இதற்காக பிரத்தியேகமாக சந்தித்து பேட்டிகளும் எடுக்கப்பட்டன. இப்போது மய்யம் பத்திரிகை முழுமையான இணைய இதழாகிறது. ரசிகர்மன்ற நிகழ்ச்சிகள், தனது படங்கள் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள், இலக்கிய கட்டுரைகள் போன்றவற்றை இந்த இணைய தளத்தில் அப்டேட் செய்து வைக்கப்படும். இந்த தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் முடிவு செய்துள்ளார் கமல். அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது பார்வை பற்றிய கருத்துக்களையும் இதில் பதிவு செய்கிறார். மய்யம் இணையதளத்துக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த தகவல்களை சமீபத்தில் நடந்த ஃபிக்கி மாநாட்டு செய்தியாளர் சந்திப்பில் கமல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...