|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 December, 2011

யோசிக்கதெரியாத கோழைப்பெண்கள்!பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், பழக்கம்  ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறி.  செல்போன் மூலமாக தங்களது காதலை வளர்ந்து வந்தனர். இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரியாது.

இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஒருவருக்கும், மாணவிக்கும் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் தான் இன்னொருவரை காதலிப்பதை மாணவி பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்தார். நேற்று காலை திருமணத்தையொட்டி மண்டபம் உறவினர்களால் களை கட்டியது. முகூர்த்த நேரம் நெருங்கியதும், மாணவி திடீரென்று மணமகன் கட்ட வந்த தாலியை தட்டி விட்டார். தான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாகவும், எனவே எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்றும் கூறினார். இதனால் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும், திரு மணத்திற்கு வந்திருந்த உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தால் பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருமண மண்டபம் போர்க்களமானது. இதற்கிடையே மணப்பெண் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரது உறவினர்கள் மணப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் மாப்பிள்ளை, பெண் வீட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் அடைந்து திரும்பி சென்றனர். தற்கொலை செய்ய முயன்றதால், மணப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பெண்னின் முடிவால் இரு வீட்டாரும் இப்பழுது அசிங்கப்பட்டு சரியான காலத்தில் எடுக்காத முடிவு...? 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...