|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

சென்னை ஐகோர்ட்டின் 150வது ஆண்டு விழா ஓராண்டு காலத்திற்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது


சென்னை ஐகோர்ட்டின் 150வது ஆண்டு விழா இன்று முதல் ஓராண்டு காலத்திற்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை பல்கலை., வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே. கங்குலி, முகோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை ஐகோர்ட்: ஒரு பார்வை: சென்னை ஐகோர்ட்டின் முதல் இந்திய நீதிபதி டி.முத்துசாமி அய்யர். ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக டாக்டர் பி.வி.ராஜமன்னார், 13 ஆண்டுகள் (1948 முதல் 1961 வரை) இருந்துள்ளார். இப்போது வரை, 313 நீதிபதிகள் பதவியில் இருந்துள்ளனர். ஐகோர்ட்டில் நீதிபதிகளாக பதவி வகித்த 24 பேர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்த பதஞ்சலி சாஸ்திரி, ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தனர். தற்போது ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இக்பால், 35வது தலைமை நீதிபதி. சென்னை ஐகோர்ட் 1862ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போது, தலைமை நீதிபதி மற்றும் ஐந்து நீதிபதிகள் இருந்தனர். 1911ம் ஆண்டு ஐகோர்ட்டுகள் சட்டம் இயற்றப்பட்ட பின், நீதிபதிகளின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது.

தற்போது சென்னை ஐகோர்ட்டுக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண் ணிக்கை 60. இவர்களில் 42 நிரந்தர நீதிபதிகள், 18 கூடுதல் நீதிபதிகள் இருக்க வேண்டும். மதுரை ஐகோர்ட் கிளை 2004ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி துவங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி லகோத்தி, துவக்கி வைத்தார். விக்டோரியா மகாராணி பிறப்பித்த சாசனத்தின் அடிப்படையில், 1862ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் கோல்கட்டா, சென்னை, மும்பை ஐகோர்ட்டுகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த மூன்று ஐகோர்ட்டுகளும் தான், "சார்ட்டர்டு' ஐகோர்ட்டுகள் என அழைக்கப்படுகின்றன

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...