|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

நின்றுகொண்டே பயணம் செய்த குண்டுமனிதர்...


உடற்பருமன் கொண்ட தன்னை, அமெரிக்க விமான நிலையம் தொடர்ந்து 7 மணிநேரம் நிற்க வைத்தே பயணம் செய்ய வைத்துவிட்டதாக தொழிலதிபர் கூறிய புகார், அமெரிக்காவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, தன்னை அவமானப்படுத்துவதாக உள்ளதாக அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி ‌தொழிலதிபரான ஆர்தர் பெர்கோவிட்ஜ், சமீபத்தில் ஆன்கரேஜ் நகரிலிருந்து பிலடெல்பியா நகருக்கு வருவதற்காக யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தை நாடியுள்ளார். பெர்கோவிட்ஜ், 181 கிலோ உடற்எடை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளைட் 901 விமானத்தில் ஏறிய அவருக்‌கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இருக்கை அவருக்கு போதுமானதாக இல்லை. எனவே, அவரை விமான ஊழியர்கள், கடைசியில் உள்ள இருக்கைக்கு சென்று அமருமாறு கேட்டுக் கொண்டனர். அவருக்கு அந்த இருக்கையும் போதுமானதாக இல்லை. அவர் உட்கார்ந்தால், பக்கத்து இருக்கையையும் அடைத்துக் கொள்கிறார் என்று மற்ற பயணிகள் புகார் தெரிவிக்கவே, விமான ஊழியர்கள் அவரை நி்ன்று கொண்டே வருமாறு ‌கூறியுள்ளனர். இதனையடுத்து, அவர் தொடர்ந்து 7 மணிநேரமாக நின்று கொண்டே பயணம் செய்து பிலடெல்பியா வந்தடைந்துள்ளார்.

இதுகுறித்து, பெர்கோவிட்ஜ் தனது உறவினரிடம் கூறியிருப்பதாவது, இந்த பயணம், எனக்கு மறக்கமுடியா‌த சோகத்தை அளித்துள்ளது. தான் இப்படி நடத்தப்பட்டதன் மூலம் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் நான் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். என்னால், சீட்பெல்ட் அணியமுடியாது என்பது தெரிந்தபோதிலும், என்னிடம், அவர்கள் சோதனை மேற்கொண்டது மிகுந்த அதிர்ச்சியளித்தது. இதற்காக, யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 800 டாலர் நஷ்ட ஈடு கேட்டு புகார் செய்திருந்தேன். ஆனால், அவர் பிச்சைக்காரத்தனமாக 200 டாலருக்கான வவுச்சர் மட்டுமே தந்தனர். இதன்காரணமாக, பெர்கோவிட்ஜ், அலாஸ்காவிலிருந்து பில‌டெல்பியாவிற்கு விமான பயணத்தை தவிர்த்ததாக அவரது வக்கீல் கிறிஸ்டோபர் ஏலியாட் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக, யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனம், பெர்கோவிட்ஜிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...