|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

சபரிமலைக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கேரளா உயர்நீதிமன்றம்!


 சபரிமலைக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலின் சிறப்பு ஆணையர் அளித்த அறிக்கையின் படி உயர்நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டலகால பூஜைகள் நடை பெற்று வருகிறது. இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களுக்கு பம்பை அருகே சாலக்கயம் என்ற இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த டோல்கேட்டில் பேருந்துகள் உள்ளிட்ட பெரிய வாகனங்களுக்கு ரூ.100ம், மினிபஸ்களுக்கு ரூ.75ம், வேன்களுக்கு ரூ.50ம், கார்களுக்கு ரூ.30ம், ஆட்டோக்களுக்கு ரூ.15ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சபரிமலை வரும் பக்தர்கள் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடந்த வருடம் உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும் பார்க்கிங் கட்டணம் எனக்கூறி மீண்டும் தேவசம்போர்டு பணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலை தொடர்பாக கோவிலின் சிறப்பு ஆணையாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கொச்சி ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ராதாகிருஷ்ணன், சி.டி.ரவிக்குமார் அடங்கிய பெஞ்ச் "சபரிமலைக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது. மலைப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். வாகனங்கள் நுழையும் எந்த பகுதியிலும் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதற்கான அதிகாரமும் தேவசம் போர்டுக்கு கிடையாது'' என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...