|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!


 மும்பை தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபின் பெயர் அந்த தாக்குதல்களில் காயம் அடைந்து நிதியுதவி பெற்றோர் பட்டியலில் இருந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் பல இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். 

பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. அவ்வாறு நிதியுதவி பெற்றவர்களின் பட்டியல் மும்பை கலெக்டர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் தாக்குதல்கள் நடத்திய தீவிரவாதி அஜ்மல் கசாபின் பெயரும் இருந்துள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் ஒரு முன்னணி செய்தித்தாள் இதைக் கண்டுபிடித்து அதிகாரிகளிடம் தெரிவித்தது. அதன் பிறகு பட்டியலைத் திருத்தியுள்ளனர். இது குறித்து மும்பை கலெக்டர் சந்திரசேகர் ஓக் கூறுகையில், "இந்த பட்டியல் தயாரித்தவர் செய்த தவறால் கசாப் பெயர் காயமைடந்து நிதியுதவி பெற்றவர்கள் பட்டியலில் வந்துள்ளது. அந்த தவறைத் திருத்தி தற்போது புது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது," என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...