|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

இறுதி சடங்கிற்கு பணம் வைத்து விட்டு தற்கொலை!

இறுதி சடங்கிற்கு சட்டை பையில் பணத்தை வைத்து விட்டு, விஷம் குடித்து முதியவர் ஒருவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை மேலூர் தெற்குதெரு ஜனா ஜான்சன் மில்லின் எதிர்புறம் உள்ள வயல் வெளியில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. நான்கு வழிச் சாலை ரோட்டை ஒட்டி உள்ள அவ்விடத்தில், கவிழ்ந்த நிலையில் 60 வயது மதிக்கதக்க முதியவர் உடல் கிடந்தது. அவரின் சட்டை பையில், 3 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு கடிதம் இருந்தது. கடிதத்தில், "காவல் துறை அதிகாரிக்கு, நான் ஒரு அனாதை. என் இறப்புக்கு நானே காரணம். இந்த பணத்தை வைத்து என்னை எரித்து விடுங்கள். எனது சாவு குறித்து பொதுமக்களை எந்த  தொந்தரவும் செய்ய வேண்டாம்' என இருந்தது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...