|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

மாவீரர் தினத்தில் கலந்து கொள்ள திருமாவளவன் அழைப்பு!


 மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்கள், கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களைப் போற்றும் வீரவணக்க நாளாக நவம்பர் 27ம் நாள் உலகம் முழுக்க தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை நவம்பர் 27 ந் தேதி என்பதால் மாவீரர்களைப் போற்றும் வீரவணக்க நாளாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் கொண்டாட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு வீரநங்கை செங்கொடி அரங்கில் மாவீரர் நாள் நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...