|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

வண்டி எண் 15906 குமரி திப்ருகர் எக்ஸ்பிரஸ்! நாட்டிலேயே NO- 1 தொலைதூர ரயில்!

திப்ருகர் கன்னியாகுமரி வாராந்திர ரயில் சேவை நாளை (நவ. 19) முதல் துவங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் நாளை காலை 10.30 மணிக்கு, அசாம் மாநிலம் திப்ருகரிலிருந்து புறப்பட்டு, நவம்பர் 22ம் தேதி இரவு 8 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும். வாராந்திர சேவைகள் நவம்பர் 26ம் தேதி முதல் துவங்கும். வண்டி எண் 15906 திப்ருகரிலிருந்து சனிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமைகளில் காலை 10.25 கன்னியாகுமரி வந்து சேரும். தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில், இந்த ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.


நாட்டிலேயே NO- 1 தொலைதூர ரயில் 

நாட்டிலேயே வெகு தூரம் பயணிகளை சுமந்து செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் நாளை துவக்கி வைக்கப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் ரயில்வே பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்தது. இதன்படி படிப்படியாக புதிய ரயில்கள் இயக்கும் பணி நடந்து வருகிறது. இதன்படி வாரம் ஒரு முறை இயங்க கூடிய விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை அசாம் மாநிலத்தில் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த ரயில் இங்குள்ள திப்ரூகார் என்ற பகுதியில் இருந்து புறப்படும் ரயில் கோல்கட்டா, கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பகுதியை தொட்டு கன்னியாகுமரியை சேர்ந்தடையும். வட கிழக்கு வளர்ச்சி பகுதி இணை அமைச்சர் பபன்சிங்கத்தோவார் கொடியசைத்து துவக்கி வைத்தார். வட கிழக்கு எல்லை ரயில்வே செய்தி தொடர்பாளர் எஸ். கஜோங் தெரிவித்தார். 4 ஆயிரத்து 286 கி.மீட்டர் தொலைவு பயணிக்கும் இந்த ரயில் 82 மணி நேரம் எடுத்து கொள்ளும். வாரம் தோறும் சனிக்கிழமை இரவு 11. 45 க்கு புறப்படும். குமரிக்கு புதன்கிழமை காலை 10 மணிக்கு வந்து சேரும். பின்னர் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3. 30 மணிக்கு சென்றடையும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...