|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

நிர்வாண படம் வெளியிட்ட பல்கலைக்கழக மாணவி!
எகிப்தில் கருத்துகளை வெளியிடும் உரிமை உள்பட பெண்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கெய்ரோ பல்கலைக்கழக மாணவி அலியா மக்டா எல்மாடி, இன்டர்நெட் ‘பிளாக்’கில் தனது நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு மதவாதிகளும், முற்போக்காளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  எகிப்தில் கலை கண்ணோட்டத்துடன் கூட நிர்வாண படங்கள் வெளிவருவதை விரும்புவதில்லை. பொது இடங்களில் செல்லும் பெண்கள், முகத்தை மறைத்தபடி செல்ல வேண்டும். கைகள், கால்கள் தெரியும்படி ஆடை அணிய கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது. 

இந்நிலையில் மாணவி தனது நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வரும் 28ம் தேதி எகிப்து நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்கிறது. இதில் பழமைவாத கட்சிகளை தோற்கடிக்கும் முயற்சியாகவே நிர்வாண படங்கள் வெளியிடப் பட்டுள்ளது. தேர்தலில் இந்த படங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று முற்போக்காளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், ‘எகிப்தில் வன்முறை, இனமோதல், செக்ஸ் சித்ரவதை, மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நிர்வாண படங்கள் வெளியிட்டேன்’ என்று அலியா தனது பிளாக்கில் விளக்கம் அளித்துள்ளார். ‘பிளாக்’கில் படங்கள் வெளியான ஒரு வாரத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அதை பார்த்து தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...