|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

2012ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பகுதியில் மொபைல் இணைப்பு 3 பில்லியனை எட்டுமாம்!

2012ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆசிய-பசிபிக் பகுதியில் மொபைல் இணைப்பு பெற்றோரின் எண்ணிக்கை 3 பில்லியனை எட்டும் எனவும், இது தொடர்பான தொழில்களின் வளர்ச்சிக்காக இப்பகுதி ஆப்பரேட்டர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக தொழில்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த மாத இறுதியில் உலக அளவில் மொபைல் போன் இணைப்புக்களின் எண்ணிக்கை 6 பில்லியன் என்ற மைக்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய-பசிபிக் பகுதியில் 3 பில்லியன் மொபைல் இணைப்புக்கள் என்ற இலக்கு அடுத்த 2 ஆண்டுகள் கழித்தே எட்டப்படும் என முன்பு எதிர்பார்க்கப்பட்டு வந்தது. 2015ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பகுதியில் 4.1 பில்லியன் மொபைல் இணைப்புக்கள் இருக்கும் என ஜி.எஸ்.எம்., கழகம் தெரிவித்துள்ளது. இது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை விட 3 மடங்கும், உலக அளவில் 40 சதவீதமும் அதிகமான வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் மட்டும் 940 மில்லியன் மொபைல் இணைப்புக்கள் உள்ளதாக ஜி.எஸ்.எம்., கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...