|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

3 மாதங்களில் இந்திய வேலைவாய்ப்பு 2.15 லட்சமாக அதிகரிப்பு!

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு 2.15 லட்சம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இவற்றில் ஐடி மற்றும் பிபிஓ துறைகளில் அதிக வேலைவாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஐடி மற்றும் பிபிஓ துறையில் 1.64 லட்சம் வேலைவாய்ப்புக்களும், உலோகத்துறையில் 0.53 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதே போன்று ஆட்டோமொபைல் துறையில் 0.18 லட்சமும், கற்கள் மற்றும் நகை தயாரிப்பு தொழிலில் 0.13 லட்சமும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்றுமதி துறையில் 0.67 லட்சமும், ஏற்றுமதி அல்லாத துறைகளில் 1.48 லட்சமும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...