|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வளர்ந்து வரும் ஆபத்துக்கள் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் லியோன் பனெட்டா !

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வளர்ந்து வரும் ஆபத்துக்கள் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியிலுள்ள அமெரிக்க கடற்படை வீரர்களிடையே உரையாற்றிய அவர், வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து ஆபத்தை அமெரிக்கா எதிர்நோக்கியிருப்பதாகவும், இதுகுறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பாலித்தீவுகளில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் உலகளாவிய இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த பேசிய நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலரின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பனெட்டாவின் பேச்சு குறித்து உடனடியாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க நிர்வாகம், இந்தியாவுடன் அமெரிக்க நெருங்கிய உறவுகளை மேம்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...