|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

பஸ் பாஸ் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு!


 பஸ் கட்டண உயர்வைத் தொடர்ந்து பஸ் பாஸ்களின் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ரூ.30 கட்டணத்தில் ஒரு நாள் பாஸும், ஒரு வார பயன்பாட்டுக்கான ரூ.160-க்கான பாஸும், ஒரு மாத (30 நாள்கள்) பயன்பாட்டுக்கான ரூ. 600-க்கான பாஸும் வழங்கப்பட்டுவந்தது. இந்த ரூ.30-க்கான ஒரு நாள் பாஸ் வாங்குபவர்கள், குறிப்பிட்ட பஸ்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக் கொள்ளலாம். இதுபோல் மற்ற பாஸ்களையும், அந்தந்த கால அளவுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பாஸ்களின் விலை இப்போது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாள் பாஸ் ரூ.60-ஆகவும், ஒரு வாரத்துக்கான பாஸ் ரூ.300-ஆகவும், ஒரு மாதத்துக்கான பாஸ் ரூ.1,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டண உயர்வு பயணிகளின் பார்வைக்காக அனைத்து பஸ் டெப்போக்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், ஏற்கெனவே பாஸ் வைத்துள்ளவர்கள் கட்டண உயர்வுக்கான கூடுதல் கட்டணத்தை, ஞாயிற்றுக்கிழமைக்குள் செலுத்திவிடவேண்டும் என மாநகர போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...