|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

இனி அந்த கண்களும் தெரியாத அளவுக்கு...?


சவூதி அரேபியாவில் உள்ள பெண்கள் கண் தெரியும் வகையில் பர்தா அணிகின்றனர். இனி அந்த கண்களும் தெரியாத அளவுக்கு பர்தா அணியுமாறு உத்தரவு பிறப்பிக்கக்கூடும் என்று தெரிகிறது.சவூதி அரேபியாவில் பெண்கள் பர்தா அணியாமல் வெளியே செல்ல முடியாது. ஆனால் அவர்கள் கண்கள் தெரியும் வகையில் பர்தா அணிவது உண்டு.

காந்தக் கண்களால் மற்றவர்கள் கவனத்தை பெண்கள் கவர்வதாகக் கூறி, அதை தடுக்கும் வகையில் இனி கண்களும் வெளியே தெரியாத வகையில் பர்தா அணியுமாறு உத்தரவு பிறப்பிக்கவிருக்கிறது அந்நாட்டின் நன்னெறி காப்பு மற்றும் தீய எண்ணங்கள் தடுப்புக் குழு.பிக்யா மஸ்ர் என்று இணையதளம் கூறியதாக பாக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது,

பெண்கள் பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் கண்கள் தெரியும்படி பர்தா அணியக்கூடாது என்று உத்தரவிடும் உரிமை இந்த குழுவுக்கு உள்ளது என்று நன்னெறிகளைக் காப்போம், தீய எண்ணங்களை தடுப்போம் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷேக் மோத்லப் அல் நபெத் தெரிவித்துள்ளார். சவூதியில் பெண்கள் பொது இடங்களுக்கு பர்தா இல்லாமல் வரக்கூடாது. அப்படி வந்தால் அபராதம், கசையடி போன்ற தண்டனைகள் விதிக்கப்படும். நன்னெறிகளை காப்போம், தீய எண்ணங்களை தடுப்போம் குழு கடந்த 1940ம் ஆண்டு துவங்கப்பட்டது. சவூதியில் இஸ்லாமியச் சட்டங்கள் மீறப்படாமல் இருக்கிறதா என்று அந்த குழு கண்காணித்து வருகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...