|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

தேசியக்கொடி அவமதிப்பு மபி முதல்வர், சுஷ்மாவுக்கு பிடிவாரண்ட்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நஸ்ருல்லாகஞ்ச் நீதிமன்றம் தேசியக் கொடியை அவமதித்த குற்றத்திற்காக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான், பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் 2 பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில இளைஞர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் துவாரகா பிரசாத் ஜாட் என்பவர் நஸ்ருல்லாகஞ்ச் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, 31-3-2010 அன்று செஹோர் மாவட்டத்தில் உள்ள நஸ்ருல்லாகஞ்சில் பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜுக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது பாரத மாதா போன்று ஒரு சிறுமியை அலங்கரித்து அவள் கையில் தேசியக் கொடி கொடுத்து ஊர்வலமாக கூட்டி வந்தனர். அந்த சிறுமி கையில் இருந்த தேசியக் கொடி தலைகீழாக இருந்தது. அப்போது நடந்த பேரணியில் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் வாகனங்களுக்கு முன்பு சிறுமி இருந்த வாகனம் சென்றது. ஆனால் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, இந்த விழா மற்றும் பேரணியில் கலந்து கொண்ட சுஷ்மா ஸ்வராஜ், சிவ்ராஜ் சிங் சவ்ஹான், அப்போதைய செஹோர் கலெக்டர் சந்தீப் யாதவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜாபர் இக்பால் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுஷ்மா ஸ்வராஜ், சிவ்ராஜ் சிங் சவ்ஹான், சந்தீப் யாதவ் மற்றும் செஹோர் மாவட்ட பாஜக தலைவர் ரகுநாத் சிங் பாட்டி ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த 4 பேர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி விஜய் மால்வியா பிடிவாரண்ட் மீது தடை உத்தரவு பிறப்பித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...