|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

தட்கல் முன்பதிவு முறையில் மாற்றம்!

ரயில் டிக்கெட் முன்பதிவு 3 மாதங்களுக்கு முன்னதாக பதிவு செய்து கொள்ளலாம் என்றாலும், கடைசி நேரத்தில் அவசர வேலையாக செல்பவர்களுக்கு வசதியாக, கூடுதல் கட்டணத்துடன் தட்கல் முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி ரயிலில் பயணம் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக தட்கல் முன்பதிவு தொடங்கப்பட்டது. ஆனால் தட்கல் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு,  தட்கல் முன்பதிவு ஒரு நாளுக்கு முன்பு தான் செய்ய முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை ரெயில்வே அறிவித்தது. இந்த நிலையில் வரும் 21-ந் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...