|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

இந்தியாவில் பயிற்சி மையங்களை அமைக்கிறது ஆஸ்திரேலியாவின் தொழி்ற்கல்வி பயி்ற்சி நிறுவனமான சவுத்பேங்க் இன்ஸ்ட்டியூட்!


ஆஸ்திரேலியாவின் முன்னணி தொழி்ற்கல்வி பயி்ற்சி நிறுவனமான சவுத்பேங்க் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி, இந்தியாவில் சில்லரை வர்த்தகம், அழகு சாதனம் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த எஸ்பிஐடி நிறுவனத்தின் உயர் அதிகாரி ராபைன் டைலர் கூறியதாவது, இந்தியாவில், பயிற்சி மையங்களை அமைக்கும் பொருட்டு, பிரான்சைஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் லிமிடெட் (ஃஎப்ஐஹெச்எல்) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். தங்கள் நிறுவனம் அளித்து வரும் பயிற்சிகளுக்கு சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்திய மக்களும் விரைவில் தங்கள் நிறுவன பயிற்சியை பெற உள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆஸ்திரேலியாவில், 26 ஆயிரம் மாணவர்களை கொண்டு இயங்கி வரும் தங்கள் நிறுவனம், வியட்நாம், சிங்கப்பூர், அபுதாபி மற்றும் சீன நாடுகளிலும் பயிற்சி மையங்களை நிர்வகி்தது வருகிறது. இந்தியாவில், இந்த பயிற்சி மையங்கள் 2013ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து செயல்பட உள்ளதாகவும், என்ட்ரி-லெவல் மற்றும் மிட் - லெவல் பணிகளுக்கான பயிற்சிகள் இம்மையங்களில் அளிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...