|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

பணக்கார ராஜ்யசபா எம்.பி. முதலிடத்தில் விஜய் மல்லையா!

ராஜ்யசபா எம்.பி.,க்களிலேயே பணக்கார எம்.பி.,யாக தொழிலதிபர் விஜய் மல்லையா உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. எம்.பி.,க்கள் தங்களது வர்த்தகம் மற்றும் நிதிக் கணக்கை தாக்கல் செய்யுமாறு கோரி, 2 ஆண்டுகளுக்கு முன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி,. மொத்தமுள்ள 232 ராஜ்யசபா எம்.பி.,க்களில் 140 பேர் இதுவரை தங்களது வர்த்தகம் மற்றும் நிதிக் கணக்கை வெளியிடவில்லை. 92 எம்.பி.,க்கள் தங்களது வர்த்தகம் மற்றும் நிதிக் கணக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி, முதலிடத்தில் மதுபான வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பவரும் மற்றும் முன்னணி தொழிலதிபருமான விஜய் மல்லையா உள்ளார். 19 நிறுவனங்களின் இயக்குனர் பதவிகளையும் மற்றும் 12 நிறுவனங்களின் ஷேர்ஹோல்டிங் உரிமையையும் விஜய் மல்லையா பெற்றுள்ளார். விஜய் மல்லையா, தனது வர்த்தக மற்றும் நிதிக் கணக்காக ரூ. 39.45 கோடியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்களின் மகனும், பஞ்சாப் சிரோன்மணி அகாலிதள ராஜ்யசபா எம்.பி.,யுமான நரேஷ் குஜ்ராலும் ( ரூ. 4.54 கோடி), காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா எம்.பி., விஜய் தர்தாவும் (ரூ. 4.54 கோடி) உள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...