|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் 2000 பேர் மீது வழக்கு!


கூடன்குளம் அணு உலையை மூடக்கோரி அந்தப்பகுதி சுற்று வட்டார மக்கள், அணு உலை எதிர்ப்பாளர் குழு அமைப்பாளர் உதயகுமார் தலைமையில் கடந்த மூன்று மாதங்களாக உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.


இதனிடையே மீனவர் தினமான 21.11.2011 அன்று 800க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடல் வழியாகச் சென்று கூடன்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டார்கள். மேலும் கறுப்பு கொடி ஏந்தி அணு உலைக்கு எதிரான கோவுங்களையும் எழுப்பினர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரம் பேர்கள் மீது கூடன்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் தலைமையிலான பெயர் தெரிந்த 15 பேர் உள்பட 2ஆயிரம் பேர் மீது இந்திய அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து .மக்களிடையே இன, மொழி மதம் சம்பந்தமாக விரோதத்தைத் தூண்டுவது சட்டவிரேதமாகக் கூடுவது. தடைசெய்யப்பட்ட கூடன்குளம் அணு மின் நிலைய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது, மத்திய அரசு ஊழியர்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்தது உள்பட பல்வேறு பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...