|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 November, 2011

பெண் குளிப்பதை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்!


சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள திருமங்கலம் கிராமம் பஜனைகோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சுதா வயது 21. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது வீட்டில் கீற்றுக்கொட்டகையால் அமைக்கப்பட்ட குளியல் அறையில் குளிப்பது வழக்கம்.


அவர் குளிப்பதை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் நீலகண்டன், வெங்கடேசன் ஆகியோர் செல்போனில் படம் பிடித்தனர். சுதா குளிப்பதற்கு முன்பே செல்போன் கேமிராவை ஆன் செய்து கீற்றில் மறைத்து வைத்துவிடுவார்கள். இவ்வாறு பலமுறை செய்து அதில் எடுக்கப்பட்ட ஆபாச படத்தை சுதாவிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டினர். சுதாவும் அவர்கள் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்தார். இப்படி 15 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சுதாவிடம் வாலிபர்கள் 2 பேரும் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தர வேண்டும் என்று மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா, தனது கணவரிடம் நடந்ததை கூறியுள்ளார். சுதா கணவர் நடந்த சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப் பதிவு செய்து வாலிபர்கள் நீலகண்டன், வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தார். அதில் ஆபாச படங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். கைதான இரண்டு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...