|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 April, 2011

குதிரையைபோல் மாட்டை ஜெர்மன் பெண் !


லிபியா இன்று


நியூயார்க்பீச்சில் கண்டெடுக்கப்பட்ட 3 பெண் உடல்கள் !


Radioactive leak into ocean 'stopped' ஜப்பான்!


ஆம்னி பஸ்சில் கடத்திய ரூ.5 கோடி பறிமுதல்


நான் பெரிய கவிஞன் இல்ல தலைவா - சிம்பு!!


வாலி, வைரமுத்து மாதிரி நான் பெரிய கவிஞன் இல்ல தலைவா. அவங்களை மாதிரி எனக்கு அழகாக பாட்டெழுதத் தெரியாது. ஆனால் இன்னிக்கு இருக்குற இளசுகளுக்கு அவங்களோட வார்த்தைகள்ல, ஸ்டைலில் சிம்பிளாக பாட்டெழுதணுங்கிறதுதான் என்னோட ஐடியா" என்று தனது பாடல்கள் உருவான விதத்தைச் சொல்கிறார்.
"முன்பெல்லாம் காதலிக்கும்போது பொதுவா எல்லோரும் 'அமுதே, முத்தே, நிலாவே'ன்னுதான் தன்னோட லவ்வரை சொல்லியிருப்பாங்க. ஆனால் இன்னிக்கு ட்ரெண்ட்டே மாறிடுச்சு. 'லூசு மாதிரி பண்ணாதே..லூசு மாதிரி பேசாதே'ன்னுதான் இன்னிக்குள்ள யூத் அதிகம் பேசிக்கிறாங்க. பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் மத்தியில லூசுங்கிறது ஒரு பொதுவான வார்த்தையாக மாறிடுச்சு. இதுதான் 'லூசுப் பெண்ணே..' பாட்டுக்கு இன்ஸ்பிரேஷன்.

இப்ப ஊர்ல நிறையப்பேர் பார்ட்டி பண்றாங்க. வீடு மாறினா, பிறந்த நாள் வந்தா, லவ் ஃபெயிலியர் ஆனா, ஃபிகர் சிரிச்சா கூட பார்ட்டிதான்றாங்க. ஆனால் இப்படி பார்ட்டி பண்றதுக்கு தமிழ்ல ஒரு பாட்டு கூட இல்லையேன்னு தோணுச்சு. அப்படித்தான் வந்துச்சு 'வேர் இஸ் த பார்ட்டி' பாட்டு. உண்மையில அது ஒரு டப்பாங்குத்துப் பாட்டாக இருக்கவேண்டியது. அதுக்கு  மாடர்னாக மியூஸிக் பண்ணுவோம்னு ட்யூன் போட்டோம். அந்தப் பாட்டோட கலர், ட்யூன், ஸ்டைல் எல்லாமே மாடர்ன்.  ஆனால், பாட்டு பக்கா லோக்கல். இதுதான் அதனோட வெற்றிக்குக் காரணம். இந்தப் பாட்டை ரிக்கார்டிங் பண்ணதும் ஒரு கிளப்ல போட்டோம். அப்பவே ஹிட்டாயிடுச்சு. எப்பவுமே நான் இப்படி பாட்டை ரிலீஸ் பண்றதுக்கு முன்னால டெஸ்ட் பண்ணுவேன்.
'
எவன்டி உன்ன பெத்தான்' பாட்டு பசங்களை விட பொண்ணுங்களுக்குதான் ரொம்ப பிடிச்சிருக்கு. பொதுவா ஒரு காதல் பாட்டு ஹிட்டானால், அதை க்ளப்ல போடுறதுக்கு ஏத்த மாதிரி தடதடக்கிற மாதிரி ரீமிக்ஸ் பண்ணுவாங்க. நாம ஏன் நேரடியாகவே ஒரு க்ளப் சாங் மாதிரி காதல் பாட்டு

பண்ணக்கூடாதுன்னு உல்டாவாக யோசிச்சோம். அதான் இந்தப் பாட்டு.
'எவன்டி உன்ன பெத்தான்..' பாட்டுக்கு எதிர்ப்புக் கிளம்பியதாக சொன்னாங்க. ஒரு பாட்டெழுத எனக்கு எவ்வளவு உரிமை இருக்குதோ, அதே அளவுக்கு அதை விமர்சனம் பண்றதுக்கும் மத்தவங்களுக்கு உரிமை இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா நான் எந்தவிதமான தவறான எண்ணத்திலயும் அப்படி எழுதல. அவங்க முழுப்பாட்டையும் கேட்டாங்களான்னு எனக்கு தெரியல. 'என் அப்பாவும் நீதான்..என் அம்மாவும் நீதான்..கடவுளும் நீதான்..'னு எழுதியிருக்கேன். 'உன் மானம் காக்கிற மேலாடையும் நான்தான்'னு சொல்ற அளவுக்கு அவன் அந்தப் பெண்ணை மதிக்கிறான்னு எழுதியிருக்கேன்.

யுவன் என்னோட மெகா ப்ளஸ். அவரோட சேர்ந்து வொர்க் பண்றது ஃப்ரெஷ்ஷா இருக்கும். ஒரு ட்யூன் போட்டால், அதுவே போதும்னு விட்டுட மாட்டோம். மியூஸிக் பத்தலைன்னாலோ, ஏதோ குறையுற மாதிரி தோணுச்சின்னாலோ திரும்பவும் வொர்க் பண்ணுவோம். 'எவன்டி உன்ன பெத்தான்' பாட்டுக்குக்கூட ஆறாவதாகப் போட்ட ட்யூனைத்தான் நீங்க இப்ப கேட்கிறீங்க. அதனால நீங்க நினைக்கிற மாதிரி நாங்க சும்மா ட்யூன் போடல. எங்களோட கடின உழைப்பும் அதுல இருக்குன்றத புரிஞ்சுக்கணும்" என்கிறார் சிம்பு என்ற எஸ்.டி.ஆர்.

தமிழருவிமணியன் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டி!


யுத்த களத்தில் நிற்கிறேன்: சீமான் !


காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இயக்குனர் சீமான் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரத்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினார்.

அப்போது அவர்,    ‘’தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகள் நிற்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி யுத்த களத்தில் நிற்கிறது. காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற உறுதியுடன் தமிழக மக்கள் முன் நம்பிக்கையுடன் நிற்கிறோம்

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை போன காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காமல் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். காங்கிரசுக்கு துணைபோன ஆட்சி மாற வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு செய்த வஞ்சகத்திற்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வஞ்சிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். காங்கிரசுக்கு துணைபோன ஆட்சி தமிழகத்தில் மாற்றப்பட வேண்டும்.காங்கிரஸ் அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை தோற்கடிக்க வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிக்கு வாக்களியுங்கள்’’என்று பேசினார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...