|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 January, 2013

தமிழ் லைவ் டிவி...

Yupp tv apps டவுன்லோட்  
செய்து அதில் Free யாக ராஜ் மியூசிக்,ராஜ் செய்திகள், கலைஞர் செய்திகள். தற்பொழுது ஒளிபரப்பாகின்றன மற்றும்  தெலுங்கு,இந்தி,கன்னடம்,மலையாளம்,என அணைத்து இந்தியன் சேனல்களும் ஒளிபரப்பாகின்றன. பணம் கட்டி பார்த்தால் தமிழிழ் அணைத்து சேனல்களும் பார்க்கலாம்.

Pizza Movie


Sattam oru iruttarai 2012 Movie


Saattai DVD


Samar Movie Good Quality



Open pongal style


எல்லாமே ஏழு!

பாம்புக்கு 3 அறிவு மட்டுமே!

பாம்புக்கு 3 அறிவு மட்டுமே! பிடிபட்ட பாம்பை கொல்லாமல் விட்டால், மீண்டும் வந்து கடிக்கும் என்பது மூட நம்பிக்கையாகும். பாம்புக்கு 3 அறிவு மட்டுமே உள்ளதால் ஞாபசக்தி கிடையாது. பாம்பு மனிதனிடமிருந்து வெளியேறும் வியர்வை நாற்றத்தின் மூலம் பழகும். ஆண் பாம்பு தலை முதல் வால் வரை ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும். பெண் பாம்பிற்கு வால் பகுதியில் சிறிய மாற்றம் இருக்கும். பாம்பு முட்புதர், மறைவிடங்கள், கற்குவியல், மரக்கட்டைகள் உள்ள பகுதிகளில் தங்குகிறது. திடீரென வழிதவறி வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் வெள்ளப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அரைத்து தண்ணீரில் கலந்து தெளித்தால் பாம்பு வீட்டில் இருந்து வெளியேறிவிடும். பாம்பு கடிக்கு விஷக்கடி மருந்து பலன் அளிக்காது. மாறாக  பாம்பு கடிக்கு "ஏ.எஸ்.வி., என்ற மருந்தை உடலில் செலுத்தினால் மட்டுமே பயன் கிடைக்கும்.   பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும். பொதுவாக ஒருவரது கனவில் வரும் பாம்பு அவரைத் துரத்துவது போல் கண்டால் அந்த நபருக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். ஏதாவது ஒரு பிரச்சனை வரும் என்றும், அதே பாம்பு அவரை கனவில் கொத்தி விட்டாலோ அல்லது அவரைத் துரத்தாமல் சாதுவாகச் சென்று விட்டாலோ பிரச்சனை இல்லை என்றும் கூறுகின்றனர்.

பாம்புகள் அனைத்தும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையை சேர்ந்ததாகும்.  பாம்பு பிறக்கும் போதே பல்லோடு பிறப்பதால், பிறந்த சில மணி நேரத்திலேயே வேட்டையாடும் குணம் அதற்கு தானாக உருவாகிறது. பாம்பின் விஷத்தில் 75 சதவீத புரோட்டீனும், 25 சதவீதம் விஷ தன்மை கொண்ட எண்சைம்களும் உள்ளன. பாம்பின் விஷத்தில் இருந்து பாம்பு கடிக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. சுமார் 25 விஷ பாம்புகளில் இருந்து ஒரு மில்லி கிராம் விஷம் மட்டுமே எடுக்க முடியும் என்பதால், அதன் விலை அதிகமாகும். பாம்பிற்கு 3 அறிவு மட்டுமே உள்ளதால், பாம்பிற்கு நினைவு சக்தி கிடையாது. ஒரு சில பாம்புகள் முட்டை சாப்பிடுகின்றன. எந்த பாம்பும் பால் சாப்பிடுவதில்லை. பாம்பு கடித்து சாப்பிடக்கூடிய பொருட்கள் மட்டுமே செரிக்கிறது. பாலின் அடர்த்தி அதிகம் என்பதால் செரிக்காமல் பாம்பு இறந்து விடும். உலகில் 2 தலை பாம்பு உள்ளதே தவிர 5 தலை பாம்பு கிடையாது. ஒரு சில பாம்பிடம் நாகரத்தினம் இருப்பதாக கூறுவது மூட நம்பிக்கையாகும். நாகரத்தினம் இயற்கையாக கிடைக்கும் பொருளாகும். வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளிடையே சண்டை ஏற்படுவது இயற்கையாகும். அதுபோல் பாம்பு-கிரி சண்டையும் இயற்கையானத தவிர, பரம்பரை எதிரிகள் கிடையாது. 

பாம்புகள் கடித்து இறப்பவர்களை விட, பயத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என பாளை.,யில் நடந்த கருத்தரங்கில் நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் தெரிவித்தார். பாளை.,யில் விஷப் பாம்புகளை கண்டறிவது எப்படி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் உசிலம்பட்டி ஸ்நேக் டிரஸ்ட் தலைவர் ரமேஷ் பாம்புகளை கையில் ஏந்தி, அதன் குணாதிசயங்கள், மக்கள் மத்தியில் பாம்பு பற்றிய தவறான தகவல்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பேசியதாவது; பாம்பு விஷமுள்ளது, விஷமற்ற என இரண்டு விதமாக உள்ளது. பாம்பில் விஷமுள்ளவைகளின் கருவிழிகள் நீளமாக இருப்பதோடு, செதில் சிறியதாகவும், தலை முக்கோண வடிவில் பெரிதாக இருக்கும். விஷமற்ற பாம்புகள் இதிலிருந்து வேறுபட்டிருக்கும். பாம்பு பெரும்பாலும் மனிதர்களை கடிக்காது. நாம் அதை மிதித்தாலோ அல்லது ஆபத்து நேரத்திலோ அல்லது உணவுக்காக கடிக்கும் பழக்கம் கொண்டுள்ளது. பாம்பு நம் அருகில் செல்லும் போது அசையாமல் இருந்தால் கடிக்காது.

பாம்பு கடிக்கும் பட்சத்தில் பதட்டப்படாமல், முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும். பாம்பு கடித்து இறப்பவர்களை விட, பாம்பு கடித்த பயத்தில் இறப்பவர்கள் தான் அதிகம். பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். மனிதனில் எந்த உடல் உறுப்பில் கடித்ததோ அந்த பகுதியில் கயிறு அல்லது ரப்பர் டியூப் மூலம் தளர்வாக கட்ட வேண்டும். கடிபட்ட பகுதியில் சுத்தாமான நீரை கொண்டு உப்பு சோப்பு மூலம் கழுவலாம். கடித்த பாம்பு எது என்பதை தெரிந்தால் ஆஸ்பத்திரியில் விரைவாக சிகிச்சை பெற முடியும். பாம்பு இனத்தில் பச்சபாம்பு, மண்ணுளி பாம்பு, இருதலைபாம்பு போன்றவை மட்டுமே குட்டி ஈன்று எடுக்கும். மற்ற பாம்புகள் அனைத்தும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையை சேர்ந்ததாகும்.

மார்பக புற்றுநோய் 2வது இடத்தில்!

பெண்களை தாக்கும் மார்பக புற்று நோய்களின் வரிசையில் இந்தியா 2 வது இடத்தை பிடிக்கிறது. குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களை இந்நோய் தாக்குகிறது. முக்கிய காரணத்தை இன் னும் கண்டறிய முடியவில்லை.குறைந்த வயதிலேயே வயதுக்கு வந்தோர், கால தாமத்தில் கர்ப்பிணி யானோர், குழந்தையில்லாத சிலரை இந்த நோய் தாக்குகிறது.நோயின் வீரியத்தால் நிணநீர் முடிச்சு, நுரையீரல், கல்லீரல் பாதிக்கிறது. பரிசோதனை மூலமே இவற்றை கண்டறிய முடியும்’’.

நகை,புடவை விசாரிக்கும்போது தொகுதியையும் விசாரியுங்கள்?

தமிழக தேர்தல் ஆணையர் அய்யர்தேசிய வாக்காளர் தின விழாவை, சென்னை காயிதே மில்லத் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி யில் துவக்கி வைத்து அவர் பேசியபோது,  ‘’ஒவ்வோர் ஆண்டும், ஜனவரி, 1ம் தேதியை அடிப்படை நாளாகக் கருதி, புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தும் பணிகள் நடக்கிறது. ஆனால், வாக்காளராக சேர வில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை போன்ற குறைகளை, பொதுமக்கள் சொல்லிக் கொண்டே உள்ளனர். இந்நிலை மாற வேண்டும்.

திருமண விழா, குடும்ப விழா, பொது விழாக்களில் பிறரை சந்திக்கும்போது, "நகை, புடவை நன்றாக உள்ளது. எந்த கடையில் வாங்கினீர்கள்?' என, பெண்கள் விசாரிக் கின்றனர்.இதோடு சேர்த்து, "எந்த தொகுதியில் வாக்காளராக உள்ளீர்கள்? வாக்காளர் பட்டியிலில் பெயர் உள்ளதா? வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளீர்களா?' என விசாரிப் பதையும், வழக்கமாகக் கொள்ள வேண்டும். வாக்காளர்கள் விழிப்பாகவும், நேர்மையாகவும் இருந்தால் தான், நேர்மையான பிரதிநிதிகளை தேர்வு செய்ய முடியும். கையூட்டு பெற்று ஓட்டளித்தால், நேர்மையற்ற பிரதிநிதி களைத் தான் தேர்வு செய்யமுடியும். நம்மிடம் குறைகளை வைத்துக் கொண்டு, பிரதிநிதிகளை குறை சொல்வதில் பயனில்லை. தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.அதேபோல், சென்னையில் உள்ள, 16 சட்டசபை தொகுகளில், 11 சட்டசபை தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். பெண்கள் சரியான முடிவை, நேர்மையான முடிவுகளை எடுப்பவர்கள். எனவே, பெண் வாக்காளர்கள் அதிகரித்து உள்ளது, சமூக, அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது‘’என்று பேசினார்.

குடும்பம்...


நிறம் மாறும் பூக்கள் இடம் மாறும் பொழுது
நிலையற்ற வாழ்கையில் தடம் மாறும் ஒழுக்கம்
பாதிப்பது செடி மட்டுமல்ல அதன் வேர்களுமே!


கம்ப்யூட்டரை வேகமாக்க...


நம் வீடு அல்லது அலுவலகங்களில் கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறோம். பெரும்பாலான நேரங்களில் கம்ப்யூட்ரானது வேலை செய்யாது. அப்படியே நின்றுவிடும். இது எதனால் தெரியுமா? கம்ப்யூட்டருக்கு அதிகப்படியான வேலை தருவதாலோ அல்லது கேம்கள் விளையாடுவதாலோ கூட ஏற்படலாம். வைரஸ்கள் கூட உங்கள் கணினியின் வேகத்தை குறைத்திருக்கலாம்.கணினியானது வேகமாக இல்லையென்றாலே நம்மால் வேலைகளை எளிதில் முடிக்கவே முடியாது. அல்லது ‘கேம்கள்’ கூட நிம்மதியாகவே விளையாட முடியாது. இதற்கு என்னதான் வழி?  கம்ப்யூட்டரை வேகமாக்க எளிதான பல வழிகள் உள்ளன. எப்படி உங்கள் கணினியை வேகமாக்க  தகவல்கள்.
கம்ப்யூட்டரை ஆன் செய்தால் சிறிது நேரத்திற்குப்பிறகு தான் கணினியானது தொடங்கப்படும். இதை ‘ஸ்டார்ட்-அப்’ என சொல்கிறார்கள். இந்த  ‘ஸ்டார்ட்-அப்பானது’ விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இல்லை என்பதை நினைவில்கொள்க.இந்த  ‘ஸ்டார்ட்-அப்’களில்  உள்ள தானாக இயங்கும் சில அப்ளிகேசன்களை நீக்குங்கள். இதை செய்வதற்கு “msconfig” என ரன்னில் தட்டச்சு செய்து, வரும் திரையில் ‘ஸ்டார்ட்-அப்’ என்பதை தெரிவுசெய்யுங்கள்.இதில் எந்தெந்த அப்ளிகேசன்கள் இருக்கவேண்டும், எவற்றையெல்லாம் நீக்கவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். இதை சரிசெய்தாலே உங்கள் கணினியானது சற்றே வேகமாகும்.கணினியை சுத்தம் செய்வதும் வீட்டை சுத்தம் செய்வதைப்போன்றதே. அதாவது தேவையில்லாத குப்பைகளை நீக்குவோமல்லவா? அதேபோல கணினியில் உள்ள தேவையற்ற குப்பை தரவுகளையும் நீக்கவேண்டும்.

இங்கே குப்பைகள் எனப்படுவது,
  1. டெம்பரரி தரவுகள்,
  2. சேமிக்கப்பட்ட இணைய பக்கங்கள்,
  3. கணினியில் படியும் இன்டர்நெட் தரவுகள்,
  4. கடைசியாக உபயோகித்த கணினியின் இடங்கள்,
இவைகளை நீக்கினாலே உங்கள் கணினியானது மேலும் அதிகமான வேகத்தில் செயல்படும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக நீக்குவது சற்றே கடினம். மேற்ச்சொன்னவற்றை ஒரே அழுததில் நீக்கவேண்டுமா? அப்படியானால் சிசிகிளினர் என்ற அப்ளிகேசன் பயன்படுகிறது.

நமது கணினியில் பயன்படுத்தும் சாதாரண அப்ளிகேசன்களின் எண்ணிக்கையையும், ‘சைசையும்’ குறைக்கவேண்டும். உதாரணமாக திரைப்படங்கள் பார்க்க நீங்கள் ‘விண்டோஸ் மீடியா பிளேயர்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக VLC போன்ற பிளேயர்  பயன்படுத்திப்பாருங்கள்.ஏனினில் விண்டோஸ் மீடியா பிளேயரானது அதிக அளவு ரேம் பகுதியை பயன்படுத்தும். இதனால் கணினியின் வேகம் குறையும். அதேபோல நீங்கள் டாகுமென்ட்களை படிப்பதற்காக ‘மைக்ரோசாப்ட் ஆபீஸ்’ பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக ‘ஓபன் சோர்ஸ்’ அப்ளிகேசன்கள் சிலவற்றை பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் கணினியானது வேகம்பெரும்.

இதற்கான ஓபன் சோர்ஸ் அப்ளிகேசன்கள் சில, பாக்ஸ் இட் ரீடர், அபிவேர்ட்,  ஓபன் ஆபீஸ். நமது கணினி அவ்வப்போது அதை அப்டேட் செய்யவா? இதை அப்டேட் செய்யவா? என கேட்டுக்கொண்டே இருக்கும். நாமும் அதை ‘நாளை’தள்ளிவைத்து விடுவோம். இது பெரிய வேலைகூட இல்லை. நாம் இப்படிச்செய்வதால் கணினியின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் இதன் வேகமும் குறையும். எனவே my computer -> properties -> Automatic updates என்றவரிசையில் தேர்வுசெய்து உடனுக்குடன் உங்கள் கணினியை அப்டேட் செய்யுங்கள். அல்லது அப்டேட் செக்கர். என்ற அப்ளிகேஷனை உங்கள் கணினியில் நிறுவினால் அதுவே அப்டேட் செய்துகொள்ளும்.கண்டிப்பாக இந்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றினால் உங்களது கணினியானது வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். வித்யாசத்தை நீங்களே உணருங்கள் நண்பர்களே!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...