ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
08 June, 2011
இதே நாள்
விளையாட்டில் கலக்கி வரும் Wii தனது அடுத்த தயாரிப்பை விரைவில்!
The Nintendo prototype consists of a remote control that allows gamers to play on two screens at the same time
1919 ஆம் ஆண்டில் ஹிட்லர் எழுதிய கடிதம்!
A letter written by Adolf Hitler in 1919, over a decade before he became the future Chancellor of Germany , has been revealed to the public for the first time in New York. According to BBC, the letter was displayed briefly at the Museum of Tolerance in New York, before being purchased by the Simon Wiesenthal Center, which will place it on permanent display at their Los Angeles location.
The statement by the then 30-year-old soldier is regarded as a key historical document from the period because it demonstrates how early the future Nazi leader was forming his views. The document suggests that Hitler already believed, more than two decades before the Holocaust, that Jews should be removed from society.
“To begin with, Judaism is definitely a racial and not a religious group,” writes Hitler in the four page document that is also known as the “Gemlich letter.” Rabbi Marvin Hier of the Simon Wiesenthal Center in LA explained that his organization purchased the letter- originally found at the end of WWII by an American soilder- for $150,000 from a private dealer. When questioned on the reasoning behind the purchase, the Rabbi explained: “It does not belong in private hands. It has too much to say to history. It belongs in public hands, and it has found its home at the Museum of Tolerance.” “This is the first document of its kind that deals with the Jews exclusively and postulates the solution,” Hier went on to say. “We have 50,000 archives, and this is the most important archive I’ve ever seen.”
JUNE 8 WORLD IPv6 Day
About World IPv6 Day
On 8 June, 2011, Google, Facebook, Yahoo!, Akamai and Limelight Networks will be amongst some of the major organisations that will offer their content over IPv6 for a 24-hour “test flight”. The goal of the Test Flight Day is to motivate organizations across the industry – Internet service providers, hardware makers, operating system vendors and web companies – to prepare their services for IPv6 to ensure a successful transition as IPv4 addresses run out.Please join us for this test drive and help accelerate the momentum of IPv6 deployment.
How To Take Part: Interested in joining the other organisations that are taking part in this initiative? Select your type of organisation below and you’ll find everything you need to participate in World IPv6 Day:
Test your IPv6 Connectivity: Want to find out your IPv6 readiness? Use this test.
Other IPv6 Day Events: Heise.de held a similar event on 16 September 2010. As a result of their prior tests and experiences they now operate dual stack IPv6 and IPv4 on their website. You can read about their experiences in the following links:
On Oct 26, 2010, two of the top-5 websites in Norway, A-pressen Digitale Medier and VG Multimedia, both made their websites available over IPv6 for 24 hours. Thanks to the positive results that day, the change was made permanent shortly after.- A-pressen Digitale Medier (Norwegian version)
- A-pressen Digitale Medier (Norwegian version)
- VG Multimedia (Norwegian version)
The Internet Society thanks Limelight Networks for their generous support of distributed content delivery for World IPv6 Day.
மைசூர் நகருக்குள் புகுந்து 2 காட்டு யானைகள் அட்டகாசம்!
Two wild elephants have gone on a rampage in the Indian state of Karnataka, crushing one person to death. One of the animals ran into a local college compound, causing panic
மைசூர் நகருக்குள் புதன்கிழமை காலை புகுந்த 2 காட்டு யானைகள், வங்கி காவலாளியையும், ரோட்டோரம் கட்டியிருந்த பசு மாட்டையும் குத்திக் கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். மைசூர் நகரவாசிகளுக்கு புதன்கிழமை காலைப்பொழுது யானைகளின் அட்டகாசத்துடன் விடிந்தது. எச்.டி.கோட்டை காட்டில் இருந்து பன்னூர் வழியாக மைசூர் நகருக்குள் காலை 5 மணிக்கு ஒரு பெண் யானையும், அதன் ஆண் யானைக்குட்டியும் புகுந்தன.இவை இரண்டும் பம்பு பஜார், சரஸ்வதிபுரம், மகாராணி கல்லூரி, ஆட்சியர் அலுவகங்கம் ஆகியப் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை மிதித்து துவம்சம் செய்தன.தலைதெறிக்க ஓடிய மக்கள்: ஒரு யானை, சயோஜிராவ் சாலையோரம் கட்டியிருந்த பசு மாட்டை தந்தங்களால் குத்திக் கொன்றது. பின்னர், ஆயுர்வேதக் கல்லூரி சந்திப்பு வழியாக சிவராம் பேட்டைக்குள் அந்த யானை நுழைந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், சாலைகளில் தலைத்தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
வங்கி காவலாளி சாவு: அப்போது, என்.எஸ்.சாலையில் உள்ள பேங்க் ஆப் மகாராஸ்ட்ராவில் காவலாளியாக பணிபுரியும் ரேணுகாபிரசாத் (58) என்பவரை யானை தும்பிக்கையால் வளைத்து பிடித்துக் கொண்டு, தந்தங்களால் குத்திக் கொன்றது. பின்னர் எதிரே வந்த வாகனங்களை மிதித்து, நொறுக்கியபடி ஒரு யானை நாராயணபுரா சாலை வழியாக ஜே.எஸ்.எஸ் பெண்கள் கல்லூரிக்குச் சென்றது. மற்றொறு யானை சுபாஷ் நகர், குச்சடஹள்ளி டோபிகாட்டில் உள்ள நாயுடு பண்ணைக்குள் நுழைந்தது. யானையைப் பிடிக்க மயக்க மருந்து: ஜே.எஸ்.எஸ்.பெண்கள் கல்லூரிக்கு வந்த வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து யானையைப் பிடித்தனர். பழகிய யானைகளான அர்ஜுன், அபிமன்யூ, கஜேந்திரா, ஸ்ரீராமா மூலம் நாயுடு பண்ணைக்குள் புகுந்த மற்றொரு யானையை வனத்துறையினர் பிடித்தனர்.
பொதுமக்கள் பீதி: யானைகளின் தொடர் அட்டகாசத்தால் 3 பேர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊருக்குள் யானைகள் புகுந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால், அனைத்து தெருக்களிலும் கடைகள், அலுவலகங்கள் அவசர அவசரமாக மூடப்பட்டன. மைசூர் நகரம் முழுவதும் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதுபோல மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இச்சம்பவத்தால் மைசூர் நகர மக்கள் பீதியடைந்தனர்.
ரூ.5 லட்சம் நிவாரணம்: யானையால் கொல்லப்பட்ட ரேணுகாபிரசாத்தின் கண்களை தானம் செய்வதாக அவருடைய மனைவி வாணி, மகன்கள் தேவராஜ், ராஜு அறிவித்தனர். இதையடுத்து அவரது கண்களை கே.ஆர்.புரம் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். இறந்த ரேணுகாபிரசாத்தின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதிவழங்கியுள்ளது.
Katrina tops sexiest woman poll for 3rd time - உலகின் செக்ஸியான பெண்ணாக காத்ரீனா கைப் தேர்வு!
The poll results also illustrated that this sexy actress didn’t seem to have hard-hitting competition from the 2010’s sexiest title winner Deepika Padukone, as Kat quite easily hopped into the first place this time.Katrina, who earlier won the title in 2008 and 2009, had apparently charmed the audiences for the third time with the item number 'Sheila Ki Jawani’ last year.
Katrina is the only actress to have won thrice: Katrina, who has supposedly won the title through the online poll and SMS conducted by FHM, had the response of 35,000 entries. Speaking about Katrina’s sexiest title, Kabeer Sharma, Executive Editor of FHM India stated, "We'd love to say 2011 was a close contest, only Sheila made sure it was far from. A feat that becomes even more significant because no woman in the world across all 28 editions of FHM has ever won the Sexiest Woman in the World title three times in the last 17 years that we've been making the list.
"Her average is higher than Sachin Tendulkar's and she replaces Deepika Padukone who won the crown in 2010.”
Katrina and Ranbir are coming together: Katrina, after several nagging thoughts to work with her ex-beau Ranbir, has finally decided to act with him in the ‘Wake Up Sid’ fame director Ayan Mukherjee’s next. Earlier it was rumored that Ayan was initially planning to bring in Deepika for the project, but he always preferred Katrina to be the leading lady and she was his first choice. However, the director didn’t approach Kat after her spilt with Ranbir. But finally, Ayan seems to have managed to convince Katrina to pair up with Ranbir for his film.
உலகின் செக்ஸியான பெண்ணாக காத்ரீனா கைப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை லண்டனைச் சேர்ந்த எப்எச்எம் பத்திரிகை தனது இணையதளம் மூலம் நடத்திய சர்வேக்குப் பின்னர் அறிவித்துள்ளது.
ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் இந்த சர்வே நடத்தப்பட்டது. தீபிகா படுகோனை வீழ்த்தி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார் காத்ரீனா. கடந்த ஆண்டு தீபிகாதான் செக்ஸியான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளிலும் உலகின் செக்ஸியான பெண்ணாக காத்ரீனா தேர்வாகியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். மேலும் 3 முறை இந்தப் பெருமையை அடைந்த ஒரே பெண் காத்ரீனாதான் என்பதும் குறிப்பிடத்தக்தது.
1984ம் ஆண்டு காஷ்மீரி தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் பிறந்தவர் காத்ரீனா. ஹாங்காங்கில் இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்ரீனா டர்கோட். காத்ரீனா இளம் வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர் பிரிந்து விட்டனர். காத்ரீனாவின் தாயார் சூஸன் டர்கோட் ஹார்வார்டில் படித்தவர். வக்கீலாக பணியாற்றினார். பின்னர் சமூக சேவையில் இறங்கினார்.
காத்ரீனாவுடன் உடன் பிறந்தவர்கள் 7 பேர். அனைவரும் ஹவாயில் வளர்ந்தவர்கள். பின்னர் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தனர். இவரது சகோதரி இசபெல், சமீபத்தில் நிர்வாண கோலத்தில் ஒருவருடன் உடலுறவு கொள்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
இலங்கை நாட்டிற்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தும் “சுயாட்சி அந்தஸ்து”, “தனி ஈழம்” உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980-களில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பி போராடியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதிமுக உட்பட தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்கள். இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களுடைய தார்மீக ஆதரவினையும் அளித்தனர். இந்தச் சூழ்நிலையில், தமிழீழம் என்ற போர்வையில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்து இதன் காரணமாக தமிழ்ச் சகோதரர்களே படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் எல்லாம், நடந்தேறின. இதன் உச்சகட்டமாக இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991 ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த அனுதாபம் கடுமையான எதிர்ப்பாக மாறிவிட்டது.
1992-ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது என்னுடைய வற்புறுத்தலின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்து, அந்தத் தடை உத்தரவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் முதல் குற்றவாளி பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 2002-ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக திரு. மஹிந்தா ராஜபக்ஷே பொறுப்பேற்றுக் கொண்டார். 2006-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழகத்திலும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைனாரிட்டி தி.மு.க. அரசிற்கு திரு. மு. கருணாநிதி தலைமை வகித்தார். மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 2004-முதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது. 2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும்; இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும்; இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த திரு. கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும். இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும்; இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன். ஆனால், அப்போது மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியோ, அதைச் செய்யவில்லை. மாறாக, “அனைத்துக் கட்சிக் கூட்டம்”, “சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்”; “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்”, “மனிதச் சங்கிலி போராட்டம்” “பிரதமருக்கு தந்தி”; “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு”; “ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது”; “இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு” என பல்வேறு வகையான நாடகங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியால் நடத்தப்பட்டன. இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று “போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்” என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் கருணாநிதி. மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் “விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது” என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். இதன் மூலம் “உண்ணாவிரதம்” என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டார் முன்னாள் முதலமைச்சர். “போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேச்சைக் கேட்டு பாதுகாப்பாக பதுங்குக் குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளி வந்தனர். இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்களில் கம்பிகளால் ஆன வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும்; முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும்; தமிழர்கள் குடியிருந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் குடியேறி இருப்பதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால், கனிமொழி உட்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் சிரித்துப் பேசி; விருந்துண்டு; பரிசுப் பொருட்களை பெற்று சென்னை திரும்பிய நாடாளுமன்றக் குழுவோ, “இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்” என்று ஒரு உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது. உண்மை நிலை என்னவென்றால், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு பெறாமல் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். “போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. "தமிழினப் பாதுகாவலர்" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு “தமிழினப் படுகொலை”-க்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது “உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது” என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. இவற்றை எல்லாம் நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சரை குற்றம் சாட்ட வேண்டும்; முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிர் இழப்பதற்கு முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆற்றாமையால் தான் இவற்றை நான் இங்கே குறிப்பிடுகிறேன்.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் சுயநலப் போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகி இருக்கிறார்கள்; குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்து இருக்கிறது; மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது; உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்; மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இங்கே பேசிய மாண்புமிகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு. சௌந்தரராஜன் அவர்கள், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார். இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான். இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம். இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து பேசிய இன்னும் சில மாண்புமிகு உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படியில்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் திரு. பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார். அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை – ராஜபக்ஷேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை. அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். எனவே, மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

சென்னையிலிருந்து திருப்பூர் சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து 23 உயிரிலந்த்தனர் பேர்
சென்னையிலிருந்து திருப்பூருக்குச் சென்ற கேபிஎன் ஆம்னி பேருந்து, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பாலத்தின் மீது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 23 பேர் உயிரோடு கருகி உருக்குலைந்து போய் பரிதாபமாக பலியானார்கள். பேருந்தின் டிரைவர் மட்டும் உயிருடன் தப்பினார். அதேபோல பயணிகளில் ஒருவர் மட்டும் உயிருடன் தப்பியுள்ளார். மற்ற அனைவருமே பலியாகி எலும்புக் கூடுகளாக காட்சி அளித்தது பார்க்கவே படு கோரமாக இருந்தது.
உயிரிழந்த 23 பேரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகிப் போய் விட்டனர்.நேற்று இரவு சென்னையிலிருந்து இந்தப் பேருந்து திருப்பூருக்குக் கிளம்பியது. இரவு 11.30 மணியளவில் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள காவேரிப்பாக்கம் என்ற இடத்திற்கு அருகே அவலூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த லாரி மீது பேருந்து திடீரென மோதியது. இதனால் தடுமாறிய பேருந்து, சாலையோரம் உள்ள பாலத்தின் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இதைத் தொடர்ந்து பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. அப்போது பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்ததால் என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது.
பேருந்தின் ஒரு கதவு மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாலும், அதை உடைத்துக் கொண்டு வர பயணிகளுக்கு முடியாததாலும் அனைவரும் தீயில் சிக்கி கதறி அழுதனர். இந்த நிலையில் ஆம்னி பஸ் ஒன்று தீப்பிடித்து எரிவதைப் பார்த்த அந்த சாலையில் வந்து கொண்டிருந்த வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. அக்கம் பக்கத்து மக்களும் ஓடி வந்தனர். போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும், ஆம்புன்லன்ஸ்களுக்கும் தகவல் போனது.
அனைவரும் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் பேருந்தின் டிரைவர் மற்றும் ஒரு பயணியை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மற்ற அனைவரும் எரிந்து கருகிப் போய் விட்டனர். பேருந்தின் டிரைவர் நாகராஜ் மட்டும் எப்படியோ உயிர் தப்பி விட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல பயணிகளில் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவரும் உயிர் தப்பினார். அதேசமயம் இவருடைய மனைவி ஸ்மிதா விபத்தில் உயிரிழந்து விட்டார். இவர்கள் கடைசி இருக்கையில் பயணித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சின்னையா ஆகியோர் விரைந்து வந்தனர்.மீட்பு நடவடிக்கைகளை அங்கேயே இருந்து முடுக்கி விட்டனர். பேருந்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியை கூடவே இருந்து கண்காணித்தனர். அமைச்சர்களும், பொதுமக்களும் சேர்ந்து உடல்களை ஆம்புலன்ஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று அசாமில் 2 பஸ்களில் நடந்த விபத்தில் 27 பேர் உயரிலந்தனர்!
At least 27 people have been killed, 40 people are trapped and many more are said to have suffered serious burn injuries in two separate bus accidents in Assam today. The first accident happened when a bus carrying a wedding party fell into a gorge in Hajo in Kamrup district.
கண்ணீர் விட்டு அழுத ராஜாத்தி அம்மாள்!
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது என டில்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவிற்கு அடுத்தபடியாக ரூ.214 கோடி முறைகேடு செய்ததாக திமுக எம்.பி., கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் முக்கிய குற்றவாளிகளாக 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, தனது கணவர் வேலை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதால் தனது மகனை கவனித்து கொள்வதற்காக தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க கூடாது என சிபிஐ தரப்பில் பலமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இம்மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், கனிமொழிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
கண்ணீர் விட்ட ராஜாத்தி அம்மாள்: மகளின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை கேட்ட கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், கோர்ட் வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.
Kanimozhi's mother, Rajathi Ammal, was in tears in court after her daughter's application for bail was rejected by the Delhi High Court in the 2G scam case."Considering the political and financial clout of the accused, the possibility of them tampering with evidence and influencing witnesses, the magnitude of the offence they've been charged with, their bail pleas are dismissed," said the judge. He also refused bail to Sharad Kumar, who co-owns a TV channel with Kanimozhi in Chennai.
The young MP from the DMK has been accused of accepting a Rs. 214-crore bribe along with former Telecom Minister A Raja, who is also from her party, and is now in jail. She was arrested in May by the CBI, which is investigating the 2G scam, described as India's largest-ever swindle. The judge today said, "There's prima facie evidence to suggest they were beneficiaries and received illegal gratification."
Kanimozhi's lawyer had applied for bail on the grounds that she needs to look after her young son, since her husband travels abroad frequently for work. DMK leader TR Baalu, who was present in court today, said they would approach the Supreme Court soon against the High Court verdict.

Subscribe to:
Posts (Atom)