டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள
நிலையில் 'டெல்லி-கற்பழிப்புக்கு தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக
சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிவரம்
ஒன்று! டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி
ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு
திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை
தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்னர் அவர்கள்
இருவரையும் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசி எறிந்துவிட்டு தப்பிச்
சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் டெல்லிவாசிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்,மகளிர் தேசிய ஆணையம் முதல் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வரை இவ்விவகாரத்தில் தலையிட்டதால், காவல்துறை முழு வீச்சில் குற்றவாளிகளை பிடிக்க களமிறங்கியது.பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அம்மாணவியின் நண்பர் குற்றவாளிகளின் அடையாளம் குறித்து தெரிவித்த சில தகவலின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 24 மணி நேரத்தில் வ்ளைககப்பட்ட குற்றவாளிகள்
தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியோடு, அந்த பேருந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள பேருந்துகள் நிறுத்துமிடத்தில் சோதனை செய்ததில், அந்த பேருந்து கண்டறியப்பட்டது. அதன் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தியதில், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல அந்த பேருந்து பயன்படுத்தப்பட்டு வந்ததும், அதன் ஓட்டுநர் ராம் சிங் என்ற விவரமும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர்களின் செல்போன்களை குற்றவாளிகளை பிடுங்கி வைததிருந்தனர். அந்த செல்போன்களுக்கு காவல்துறையினர் எஸ்எம்எஸ் அனுப்பிய போது, அதில் ஒன்று செயல்பாட்டில் இருந்ததால், அந்த இடத்தை தொலைத்தொடர்பு உதவியோடு கண்டறிந்த காவல்துறையினர், அதன் மூலம் இரண்டாவது குற்றவாளியையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் 2 குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு, மேலும் 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.டெல்லியில் செய்தியாளர்களிடம் இது தொடர்பான விவரங்களை தெரிவித்த டெல்லி காவல்துறை ஆணையர் நீரஜ் குமார், கைது செய்யப்பட்ட 4 பேர்களும் அப்பேருந்தின் டிரைவர் ராம் சிங், அவனது சகோதரன் முகேஷ், உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் வினய் ஷர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர் என்றும், தப்பி ஓடிய இரண்டு பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, தற்போது ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், அவரது அடிவயிற்றுப் பகுதி சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.மாணவ, மாணவிகள் போராட்டம் இந்நிலையில் இந்த சம்பவம் டெல்லி மாணவ,மாணவியர்களிடையேயும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்கள் இன்று டெல்லியின் வீதியில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் மாணவிகள் கூறினர்.
அதிர்ந்த நாடாளுமன்றம் இதுஒருபுறம் இருக்க டெல்லி மாணவி பலாதகார நிகழ்வு நாடாளுமன்றத்திலும் இன்று எதிரொலித்தது. மக்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய பா.ஜனதாவினர் கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு இந்த சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் வலியுறுத்தியதோடு, உள்துளை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரினர். இப்பிரச்னை தொடர்பாக பேசிய மக்களவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத் தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறினார்.
நாட்டின் தலைநகரில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது என்று கூறிய அவர், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.மேலும் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இப்பிரச்னை குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தினர். இந்நிலையில்,நாடாளுமன்றத்தின் முன்பாக புதன்கிழமையன்று தர்ணா போராட்டம் நடத்தவும் பா.ஜனதா எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளனர்.
டெல்லிக்கு முதலிடம் இதனிடையே பாலியல் பலாத்கார நிகழ்வில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள், விஷமிகளால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளனர்.டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 239 பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்துள்ளது.
இத்தனைக்கும் டெல்லியைவிட மும்பையில் சுமார் 2 மில்லியன் மக்கள் அதிகமாக உள்ளபோதிலும்,பாதுகாப்பு அதிகம் உள்ளதாக கூறப்படும் டெல்லியை ஒப்பிடுகையில் மும்பையில் பாதி அளவே இக்குற்றங்கள் நிகழ்வதாகவும் அது தெரிவிக்கிறது. தவிர கடந்த ஆண்டு கொல்கத்தாவில் 47 கற்பழிப்பு குற்றங்களும், சென்னையில் 76 மற்றும் பெங்களூரில் 96 கற்பழிப்பு குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த தகவல் கூறுகிறது.
அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கற்பழிப்பு குற்றங்களில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் டெல்லிதான் என்கிறது அந்த அறிக்கை. நாட்டின் தலைநகராக இருப்பதில்தான் டெல்லிக்கு பெருமையே தவிர,கற்பழிப்புக்கு தலைநகராக இருப்பதில் அல்ல...!