- உலக வானிலை தினம்
- கேமரூன் தேசிய தினம்
- புளூடூத் வெளியிடப்பட்டது(1999)
- உலகின் முதலாவது நவீன நிலவரையை (அட்லஸ்) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்(1570)
- எய்ட்ஸ் நோய் கிருமி கண்டுபிடிக்கப்பட்ட செய்திகள் முதல் முறையாக வெளியிடப்பட்டன(1983)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
19 May, 2011
இதே நாள்
அல்-குவைதா தற்காலிக தலைவர்
எகிப்தைச் சேர்ந்த பயங்கரவாதி சயீப் அல் ஏடல் என்பவர், அல்- குவைதாவின் தற்காலிகத் தலைவராகவும், முஸ்தபா அல் ஏமனி என்பவர், நடவடிக்கைகளுக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 1990களில், சூடான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அல்-குவைதா முகாம்களைப் பயிற்சி முகாம்களை அமைத்தவர் இந்த சயீப் அல் ஏடல். 2001ல் ஆப்கனில் அமெரிக்கப்படைகள் நுழைந்த போது, அவர், அங்கிருந்து ஈரானுக்குத் தப்பிச் சென்றார்.ஈரானில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மீண்டும் ஆப்கன்-பாக்., எல்லைப் பகுதிக்கு திரும்பினார் என்று கூறப்படுகிறது.
14 தேசிய விருதுகளை வாரிச் சுருட்டிய தமிழ்!
58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்.
தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.
சிறந்த இயக்குநர் வெற்றி மாறன்
சிறந்த திரைக்கதை - வெற்றி மாறன்
சிறந்த துணை நடிகர் தம்பி ராமையா
தம்பி ராமையா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த படம் மைனா. இந்தப் படத்துக்காக தம்பி ராமையா, சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.சிறந்த துணை நடிகை சுகுமாரி
றந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. நம் கிராமம் என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.
சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து
சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது
சிறந்த தமிழ்ப் படம்
சிறந்த நடன அமைப்பு திணேஷ்
ஆடுகளம் படத்தில் நடன வடிவமைப்பு செய்திருந்த திணேஷுக்கு சிறந்த நடன அமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.
எந்திரனுக்கு 2 விருதுகள்
சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ்மோகன் விருது பெறுகிறார்.
சிறந்த கலை-தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.
ஆடுகளத்திற்கு 6 விருதுகள்
சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடன வடிவமைப்பு, சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது ஆகியவை ஆடுகளம் படத்துக்குக் கிடைத்துள்ளது. அதேபோல சிறந்த எடிட்டிங்குக்கான விருதும் ஆடுகளம் படத்திற்காக கிஷோருக்குக் கிடைத்துள்ளது.
ஈழக் கவிஞருக்கு சிறப்பு விருது
ஆடுகளத்தில் தனுஷின் குருவாக நடித்தவரான ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலனுக்கு சிறப்பு விருது
வைரமுத்துவுக்கு 6 வது முறையாக தேசிய விருது!
58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தென்மேற்கு பருவக்காற்று படத்தில் பாடல் எழுதியதற்காக சிறந்த பாடலாசியர் விருதை பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து.
பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், வைரமுத்து, நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.
வைரமுத்து - சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்)
1. முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)
2.ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)
3.கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)
4.சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)
5.கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)
6.தென்மேற்கு பருவக்காற்று
ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம்
மத்திய அரசின் உயரிய விருதான, "தொல்காப்பியர்' விருது பெற்ற அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்த ஆய்வு கட்டுரை எழுத, 2.50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
கடந்த, 2005-06ம் ஆண்டுக்கான, "தொல்காப்பியர்' தேசிய விருதுக்கு, ஆத்தூர் அடுத்த தலைவாசல், கூகையூரில் வசிக்கும், 102 வயது பேராசிரியர் அடிகளாசிரியர் தேர்வு செய்யப்பட்டார். கடந்த, 6ம் தேதி, டில்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் அவ்விருதை வழங்கினர்.
அடிகளாசிரியரின், 102வது பிறந்த நாள் விழாவை, குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி கூகையூர் கிராம மக்கள் நேற்று(மே-11)விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். அதில், ஆத்தூர், தலைவாசல் பகுதி தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு அடிகளாசிரியரிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
தொடர்ந்து, அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையம், "தொல்காப்பியம்' குறித்து எளிதான முறையில் ஆய்வு கட்டுரை எழுதுவதற்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கி கவுரவித்துள்ளது.

Subscribe to:
Posts (Atom)