- ரப்பர் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டது(1845)
- இத்தாலிய பேரரசு அமைக்கப்பட்டது(1861)
- ரெளலட் சட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்(1919)
- கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர்(1950)
- அமெரிக்கா, வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது(1958)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
16 March, 2011
17.03.2011 இதே நாள்
ஜப்பான் நிலநடுக்கத்தால் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு
How the Japan Earthquake Shortened Earth’s Day
The 8.9-magnitude earthquake in Japan shortened Earth's day by 1.8 millionths of a second. While this might sound striking, perhaps even scary, don't panic: Earth is shifting slightly all the time, owing mostly to atmospheric and ocean currents.
The 8.9-magnitude earthquake in Japan on March 11 shortened Earth's day by 1.8 millionths of a second, according to NASA scientists. Earth still tilts on its axis by 23.5 degrees, as before. But, since the March 11 earthquake, Earth is spinning faster than before, and our day is ever so slightly shorter from sunrise to sunset.
ப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம், பூமி சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால், ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்' என்று, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் கடந்த 11ம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி ஏற்பட்டது. அந்நாட்டின் மூன்று மாகாணங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. மேலும், இரண்டு மாகாணங்கள் ஓரளவு பாதிக்கப்பட்டன. ஜப்பான் பல தீவுக் கூட்டங்களால் ஆன நாடு. எனினும், ஹொக்கைடோ, ஹோன்ஷூ, ஷிகோக்கு, கியூஷூ என்ற நான்கு பெரிய தீவுகள் தான் முக்கியமானவை. இவற்றிலும், ஹோன்ஷூ தான் மிகப் பெரியது. இதில் தான், தலைநகர் டோக்கியோ உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹோன்ஷூ தீவு, 8 அடி நகர்ந்துள்ளதாகவும், பூமியின் அச்சு 17 செ.மீ., நகர்ந்துள்ளதாகவும் அமெரிக்க நிலவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் மேலும் கூறியதாவது:தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பூமியின் எடையில் சிறிது மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது சுற்றும் வேகம் சிறிது அதிகரித்துள்ளது. இதனால், ஒரு நாளில் மொத்த வினாடிகளில் 1.8 மைக்ரோ வினாடிகள் குறையும். ஒரு நாள் என்பது 86,400 வினாடிகள் கொண்டது.
இந்த மாற்றத்தால், பாதிப்பு எதுவும் ஏற்படாது. இதுபோன்ற அச்சு மாற்றங்கள் பூமியின் வரலாற்றில் சகஜம் தான். கடந்த 2010ல் சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கத்தால், ஒரு நாளில் 1.26 மைக்ரோ வினாடிகளும், 2004ல் சுமத்ராவில் நிகழ்ந்த 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் 6.8 மைக்ரோ வினாடிகளும் குறைந்துள்ளன.இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்தனர்.
நேற்று ஒரே நாளில் ரூ. 1,32,80,000 தமிழ்நாடுதாங்க
தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாகன சோதனையில் நேற்று ஒரு நாள் மட்டும் சிக்கிய தொகை ரூ.ஒரு கோடியே 32 லட்சத்து 80 ஆயிரம். தேர்தல் வந்து விட்டால் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்து ஓட்டை வாங்க வேண்டும் என்ற கால்குலேஷனில் ஒரு சில கட்சிகள் இறங்கி விடுகின்றன. பதுக்கி வைத்திருக்கும் கருப்பு நோட்டுகள் எல்லாம் ஓட்டுகளாக மாறும் என்ற வியூகம் அரசியல் கட்சிகள் மத்தியில் இருப்பதுதான் இந்த பார்முலாவின் அடிப்படை.
ஆனால் இந்த முறை தேர்தல் கமிஷன் போட்டுள்ள கிடுக்கிப்பிடியால் , தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவை அனைத்து வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணமா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஈரோட்டில் 7 லட்சம் : கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 47,000 பணத்தை ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் அலுவலருமான மீனா பிரியதர்ஷினி பறிமுதல் செய்தார். காரில் இருந்த ஜவுளி வியாபாரி முஸ்தபாவிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ. 1 லட்சத்து 47,000 பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் சிக்கிய தொகை ரூ. 7 லட்சமாகும்.
இளையான்குடியில் 26 லட்சம் : இளையாங்குடியில் சாலைகிராமம் விலக்கு பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழக்கரைக்குச் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ரூபாய் 26 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
வேலூரில் உச்சம் : வேலூரில் வெயில் மட்டும் உச்சமில்லை, பிடிபட்ட பணமும் உச்சம் தான். நேற்று ஒரே நாளில் ரூ.40 லட்சத்து 15 ஆயிரம் பணம் சிக்கியது.
மதுராந்தகம் தொழுப்பேடு செக்போஸ்டில் வாகன தணிக்கையில் ரூ. 4 லட்சத்து 50,000 ஆயிரம் பணம் சிக்கியது. சென்னை தாம்பரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
50 கிலோ தங்கம் ! காரைக்குடி சாக்கோட்டை செக்போஸ்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகள் ரூ. 92 லட்சத்து 15,000 மதிப்பிலான 50 கிலோ தங்க நகைகளும், ரூ. 24 லட்சம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகளும் பறிமுதல் செய்தனர்.
பலவீனமாகும் பலம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கருத்துத் தெரிவித்த முன்னாள், இந்நாள் பிரபலங்கள் எல்லோருமே "இந்தியாவுக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளதே அதற்குக் காரணம்' எனக் கூறினர். 1983-ல் கோப்பையை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த கபில்தேவ் கூட, அன்றைய அணியைவிட இன்றைய அணியே மிகச்சிறந்த அணி என்று குறிப்பிட்டார். போட்டி தொடங்குவதற்கு முன் இந்தியாவின் பேட்டிங் வரிசையும் அப்படித்தான் தோற்றமளித்தது. அதை நிரூபிக்கும் வகையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே இந்திய அணி 370 ரன்களைக் குவித்தது. அதில் பெரும்பகுதி இரு தனிப்பட்ட வீரர்களால் (சேவாக் 175, கோலி 100) எடுக்கப்பட்டதாகும். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் 120 ரன்களை குவித்தார். அந்த ஆட்டத்தில் இந்தியா 338 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்டினாலும், நடுவரிசை பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் கடைசி 7 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்தது. இதனால் அந்த ஆட்டம் டையில் முடிந்தது. நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியிருப்பார்களானால் வலுவான ஸ்கோர் மட்டுமின்றி, ஆட்டத்தின்போக்கும் இந்தியாவுக்கு சாதகமாக மாறியிருக்கக்கூடும். அதன்பிறகு கத்துக்குட்டிகளான அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்திய அணி, குறைந்தபட்ச ஸ்கோரை எடுப்பதற்கும்கூட தடுமாறியது. இறுதியில் போராடியே வென்றது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக் 73, சச்சின் 111, கம்பீர் 69 ரன்கள் குவித்து வலுவான ஸ்கோரை எட்ட உதவியபோதும்கூட, கடைசிக் கட்ட ஓவர்களில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட வேண்டிய முன்னணி பேட்ஸ்மேன்கள் வருவதும், பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். இதன் விளைவு பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 29 ரன்களுக்கு மட்டும் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. 296 ரன்கள் என்பது வெற்றிக்குப் போதுமான ஸ்கோர் என்றாலும், இந்திய பந்துவீச்சின் பலவீனத்தை சரியாகப் பயன்படுத்திய தென் ஆப்பிரிக்காவின் கடைநிலை வீரர்கள் அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தனர். எதிரணியின் பின்வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடிய அதேசமயம், இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பில்லாமல் ஆடியது இந்திய அணியின் பலவீனத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணியின் பீல்டிங் மோசமாக உள்ளதாகக் கூறப்பட்டது. பின்னர் பந்துவீச்சு மோசமானது. இப்போது பலமான பேட்டிங்கும் பலவீனமாகத் தொடங்கியுள்ளது. சச்சினும், சேவாக்குமே தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருகின்றனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் களமிறங்கிய பாகிஸ்தான், தொடர் தோல்விகளுக்குப் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணிகள் கூட அற்புதமாக விளையாடி அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பல அணிகளில் சிறப்பான தொடக்க வீரர்கள் இல்லாதபோதும் கூட, தனி ஒரு வீரரை நம்பியில்லை. முக்கிய வீரர்கள் சரியாக விளையாடாதபோதும் பின்வரிசையில் வரும் வீரர்கள் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தந்து வருகின்றனர். ஆனால் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதை பயன்படுத்திக் கொள்ள தவறிவிடுகின்றனர். இப்போதைய இந்திய அணி தனியொரு சச்சினையும், சேவாக்கையும் நம்பித்தான் உள்ளதோ என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ள நிலையில், சோதனை அடிப்படையில் பந்துவீச்சாளர்களை மாற்ற கேப்டன் தோனி தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை. பியூஷ் சாவ்லாவுக்கு மாற்று பந்துவீச்சாளராக அஸ்வின் இருந்தபோதும் கூட அவருக்கு இதுவரை தோனி வாய்ப்பு அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் நீங்கலாக வேறு எந்த ஆட்டத்திலும் பியூஷ் சாவ்லா ஜொலிக்கவில்லை. மாறாக ரன்களை வாரி வழங்கினார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் மோசமாக பந்துவீசினார் என்பதற்காக இதுவரை அவருக்கு அடுத்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2007-ல் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அந்த அணி வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தபோது, தொடக்க வீரர்கள் கில்கிறிஸ்ட், ஹேடன் ஆகியோரை வெளியேற்றி திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஸ்ரீசாந்த் என்பது தோனிக்கு தெரியாததல்ல. கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடி வரும் சுரேஷ் ரெய்னாவும் தற்போது ஓரம் கட்டப்பட்டுள்ளார். அவர் மிடில் ஆர்டரில் மட்டுமின்றி எந்த நிலையிலும் ஆடக்கூடியவர். இப்போதுள்ள இக்கட்டான சூழலில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே கண்டிப்பாக சில மாற்றங்களை செய்வதே புத்திசாலித்தானம். இல்லையென்றால் இந்திய அணி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். காலிறுதிச்சுற்று நாக் அவுட் சுற்று என்பதால் ஒவ்வோர் ஆட்டத்திலும் வென்றால் மட்டுமே அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேற முடியும். இனியாவது இந்திய அணி எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
நன்றி : தினமணி
பக்ரைனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் எகிப்தின் மக்கள் புரட்சி, அடக்குமுறையில் இருக்கும் மற்ற சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட தாக்கத்தால் எழுச்சி கண்டுள்ளனர் பக்ரைன் மக்கள். அந்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால் அறவழியில் போராட முயன்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் பலியாகினர்.
பக்ரைனில் கலவரம் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருப்பதால் அங்கு 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மன்னர் பிறப்பித்தார். மக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக மன்னர் தெரிவித்தார்.
3 மாத கால அவசர நிலையின் போது பக்ரைன் படைகளுக்கு உதவுவதற்காக ஓமன் மற்றும் கத்தார் படைகள் அங்கு விரைந்துள்ளன. இதற்கிடையில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் கலவரத்தில் குதித்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் இறந்தனர், பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுகிறது.
கலைஞர் டிவியின் கவர்ச்சி ஸ்டண்ட்!
தமிழக முதல்வர் கலைஞரின் குடும்ப ஆதிக்கம் தமிழ்சினிமாவில் தலையெடுத்த பிறகு சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது குதிரைக் கொம்பானது. காரணம் தமிழ்நாட்டில் உள்ள 99% தியேட்டர்கள் சன் பிக்சர்ஸ், துரை தயாநிதி. உதயநிதி ஆகிய முன்று பேரிடமே குத்தகை அடிப்படையில் குவிந்திருக்கிறது என்கிறார்கள். இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் கடந்து நான்கு வருடங்களாக 140 சிறுமுதலீட்டு படங்களை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார்கள் பழைய, புதிய தயாரிப்பாளர்கள். இந்தப்படங்களுக்கெல்லாம் தேர்தல் நேரத்து சலுகையாக தற்போது ஒரு அதிரடி சலுகையை தர இருக்கிறது கலைஞர் அரசு. நேற்று முன்தினம் சென்னை 4 ஃபிரேம்ஸ் பிரிவ்யூ தியேட்டரில் திமுக காரரான தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் இராமநாராயனன், குஷ்பூ ஆகியோர் தலைமையில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் படங்களின் தயாரிப்பாளர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் வெளிவராத 140 படங்களில் இருந்து முதல் தொகுப்பாக 50 படங்களை கலைஞர் தொலைக்காட்சி சார்பில் அடக்க விலையோடு பதினைந்து லட்சம் கூடுதலாகக் கொடுத்து வாங்கிக்கொள்ள சம்மதித்து இருக்கிறார்களாம். இதை ஒரு பெரிய விழாவாக எடுத்து 'கலை உலகை காப்பாற்றிய கலைத்தாயின் தலைமகனே' என்று போஸ்டர் அடித்து பாராட்ட இருக்கிறார்களாம். எப்படியோ தேர்தல் நேரத்தில் திரையுலகமே தன்பக்கம் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு ஓட்டுவாங்க நினைக்கும் திமுக அரசின் காஸ்ட்லி ஸ்டண்ட் இது என்றாலும், வெளிவராத படங்களின் ஒரு பகுதிக்கு இப்படியொரு விடிவு காலம் வந்ததே என்று குதூகலிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் நைந்துபோன தயாரிப்பாளர்கள். தேர்தலுக்கான அடிஷனல் போனஸ்ஸா........?
பெற்ற குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்வது மாதிரி : நாஞ்சில் சம்பத்
ஜெயலலிதாவின் நடவடிக்கை பெற்ற குழந்தையை விஷம் கொடுத்து கொல்வது மாதிரியானதாகும் என நாஞ்சில் சம்பத் கூறினார்.அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட ம.தி.மு.க.,விற்கு சீட்கள் தராமல் அ.தி.மு.க.,தன்னிச்சையாக பட்டியல் வெளியிட்டது.இது ம.தி.மு.க.,தொண்டர்களையும் கூட்டணியை எதிர்பார்த்து காத்திருந்த அ.தி.மு.க.,தொண்டர்களையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக உள்ளது. இதுகுறித்து ம.தி.மு.க.,கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது: அ.தி.மு.க.,வின் வாக்கு வங்கி மட்டுமே அவர்களுக்கு வெற்றியை தேடி தராது. இதுவரையிலும் அரசு செய்த தவறுகளை அச்சப்படாமல் சுட்டிக்காட்டிவந்தோம். அ.தி.மு.க.,அறிக்கை மட்டும்தான் வெளியிடுவார்கள். அத்திப்பூ பூப்பது போலவும், ஆடிப்பிறை தெரிவது மாதிரியும்தான் அவர்களது சந்திப்பு. ம.தி.மு.க.,வினர் மறியல் வரை சென்றோம். சிறை சென்றோம். எங்கள் உழைப்பும் வியர்வையும் அவர்களுக்கு போய்சேர்ந்தது. ஆனால் எங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் தராதது ஏன் என புரியவில்லை. எங்களை அலட்சியப்படுத்துகிற அம்மையாரின் முடிவை அ.தி.மு.க.,தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாங்கள் அ.தி.மு.க.,கூட்டணியில் தொடர்வோம் என்ற நம்பிக்கை இழந்துவிட்டோம். அதற்காக கவலைப்படபோவதில்லை. எங்களுக்கு இழைக்கப்படுகிற அவமானங்கள் எங்களுக்கு உரமாகும். வைகோவை பொடா சட்டத்தில் 19 மாத சிறையில் வைத்ததால்தான் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா தோற்கடிப்பட்டார். வரலாறு தருகிற படிப்பினில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டேன் என அடம்பிடிப்பவர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எது நடந்தாலும் எதிர்கொள்கிற ஆண்மையும், ஆன்மபலமும் வைகோவிற்கும் வைகோவின் சகாக்களுக்கும் உண்டு. நிலத்தை நிராகரித்துவிட்டு நதி நடக்கமுடியாது. காற்றை கைது செய்துவிட்டு கால்மணி நேரம் கூட
உயிர்வாழ முடியாது. நீலவானத்தை அலட்சியப்படுத்திவிட்டு நிலவு சிரிக்கமுடியாது எனவே ம.தி.மு.க.,வையும் வைகோவையும் அலட்சியப்படுத்திவிட்டு அ.தி.மு.க.,வெற்றிபெற முடியாது. இத்தகைய முடிவால் அ.தி.மு.க.,.தொண்டன் உற்சாகத்தை இழந்துவிட்டான். பெற்ற பிள்ளைக்கு விஷம் கொடுத்து கொல்வது மாதிரியாகிவிட்டது. ம.தி.மு.க.,ஒரு வெங்கலபானை. கீழே விழுந்தால் சத்தம் கேட்கும் ஆனால் உடையாது. ஆனால் அ.தி.மு.க.,என்ன குடம் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். பொதுமக்கள் மத்தியில் எங்கள் மீது ஏற்பட்டிருக்கிற அனுதாபமும், அ.தி.மு.க.,தொண்டர்கள் எங்கள் மீது காட்டுகிற பரிவும் இந்த அம்மையார் திருந்தமாட்டார் என நடுநிலையாளர்கள் வைத்திருக்கிற விமர்சனமும் இப்போது எங்களுக்கு அனுதாபத்தை தருகிறது. 2006 தேர்தலில் 22 தொகுதிகள் தருவதாக கருணாநிதி தெரிவித்தார். ஒரு தொகுதி அதிகம் கேட்டதற்கு முடியாது என கருணாநிதி வெறுப்பை கக்கினார். அப்போது தி.மு.க.,கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அ.தி.மு.க.,கூட்டணியில் 35 சீட்கள் கொடுத்தார். அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் 23 சீட்கள் கேட்டோம்.7 சீட், 8 சீட் என பேரம் பேசுவது எங்கள் தரத்தையும் தகுதியையும் கொச்சைப்படுத்துவதாகும். இதனை கடைசி தொண்டன் கூட பொறுத்துக்கொள்ளமாட்டான். 50 தொகுதிகளில் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கிற சக்தி நாங்கள். எங்கள் முடிவை வரும் 19ம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள்கூட்டத்தில் வைகோ அறிவிப்பார் இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
ராயபுரம் திமுகவினரின் மனதில் நிரந்தர இடம் பிடித்த ஒரு இடமாகும். இந்த பகுதியில் உள்ள ராபின்சன் பூங்காவில் வைத்துதான் திமுக என்ற மாபெரும் இயக்கத்தை தோற்றுவித்தார் பேரறிஞர் அண்ணா. அதுவும் காங்கிரஸை எதிர்த்து தோற்றுவிக்கப்பட்ட இயக்கமான திமுக, தனது பிறப்பிடத்தை அதே காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது வருத்தம் தருவதாக திமுகவினர் மத்தியில் அபிப்பிராயம் நிலவுகிறது.
தற்போது ராயபுரம் தொகுதி அதிமுக வசம் உள்ளது. இங்கு அதிமுகவின் ஹெவிவெயிட் தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமார் உறுப்பினராக உள்ளார். மீண்டும் ஜெயக்குமாரே இங்கு போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் பெரிய ஆட்கள் யாரும் இல்லை. எனவேதான் இந்தத் தொகுதியை காங்கிரஸ் வசம் திமுக தள்ளி விட்டுள்ளதாக ஒரு பேச்சு நிலவுகிறது.
எப்படி இருப்பினும், திமுக உதயமான பகுதியை உள்ளடக்கிய ராயபுரம் தொகுதியை காங்கிரஸுக்குக் கொடுத்ததால் திமுகவினர் அதிருப்தியுடன் உள்ளனர் என்பது மட்டும் உண்மை

பணியாளர் மாற்றம்: ஜப்பானியரை நெகிழ வைத்த விப்ரோ முடிவு!
IT firms set to pull back Japan staff; but Wipro differs
ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணுஉலைகள் வெடிப்பு மற்றும் கதிர்வீச்சு நெருக்கடி காரணமாக அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை திரும்ப அழைத்து வரும் சூழலில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் ஒரு உத்தரவு ஜப்பானிய பணியாளர்களை நெகிழ வைத்துள்ளது.
விப்ரோவுக்கு ஜப்பானில் 400 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 115 பேர் இந்தியர்கள். இந்திய நிறுவனமான விப்ரோ, இந்தியர்களை மட்டும் திருப்பி அழைத்துக் கொள்ளும் என்றுதான் அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால் விப்ரோ தனது அறிவிப்பில், இந்தியர்கள் மட்டுமல்ல, ஜப்பானிய பணியாளர்களும் சேர்ந்து வரட்டும். அல்லது ஜப்பானின் துயரத்தில் பங்கெடுக்கும் வகையில் அவர்களுக்கு உறுதுணையாக பிற ஊழியர்கள் செயல்படட்டும் என்று கூறியுள்ளது.
இதுதொடர்பாக விப்ரோ சிஇஓ டி கே குரியன் கூறுகையில், "ஜப்பான் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. இந்த நேரத்தில் இந்தியப் பணியாளர்களை மட்டும் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு மற்றவர்களை அப்படியே விட்டுவிடுவது சரிதானா? எல்லோரும் மனிதர்கள்தான். இந்தியப் பணியாளர்களுக்கு வந்த கஷ்டம்தான் ஜப்பானிய பணியாளருக்கும் வந்துள்ளது. எனவே அனைவரும் சமமாகத்தான் நடத்தப்பட வேண்டும்.
Wikileaks: Politicians Openly Give Cash To Voters During TN Polls, Says US Diplomat
வாக்காளர்களுக்கு அழகிரி, கார்த்தி சிதம்பரம் பணம் கொடுத்தனர்
2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுத்தாக ஆந்திரா மற்றும் தமிழக அரசியல்வாதிகளும், அவர்கள் உதவியாளர்களும் ஒப்புக் கொண்டதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பிரடரிக் கப்லான் அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரக குழுவிடம் கார்த்தி சிதம்பரம், ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரியின் நம்பிக்கைக்குரிய முன்னாள் மதுரை மேயர் எம். பட்டுராஜன், ஆந்திராவைச் சேர்ந்த மஜ்லிஸ் இ இத்தன்ஹதுல் முஸ்லிமீனைச் சேர்ந்த எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்களும், தங்கள் உதவியாளர்களும் வாக்களர்களுக்கு எவ்வாறு பண பட்டுவாடா செய்தார்கள் என்று ஒளிவுமறைவின்றி பேசியுள்ளனர்.
13-5-2009 அன்று அனுப்பப்பட்டுள்ள கேபிளில் கப்லான் தேர்தல் பணிகளை பண பலம் எவ்வாறு ஆட்டி படைக்கிறது என்று இந்த துறையில் உள்ள பலரிடம் சேகரித்த தகவல்களை அனுப்பியுள்ளார்.
வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம், பொருள் முதலியவை கொடுப்பது என்பது தென் இந்தியாவில் சாதாரணமான ஒன்று. ஏழை வாக்காளர்கள் வேட்பாளர்கள் ஏதாவது கொடுக்க மாட்டார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.
அவர்களும் வாக்களர்களின் எதிர்பார்ப்புகளை எப்படியாவது பூர்த்தி செய்கின்றனர். கிணறு வெட்ட பணம் கொடுப்பதில் இருந்து, காலையில் செய்தித்தாள் கொடுக்கும்போது அதற்குள் பணத்தை வைத்து கொடுத்து வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பது வரை செய்தவற்றை எல்லாம் அரசியல்வாதிகளும், அவர்கள் ஆட்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதற்கான பணம் கட்சி நிதி திரட்டுவதன் மூலம் கிடைக்கிறது. இவ்வாறு பணம் கொடுப்பதால் வாக்காளர்களின் மனம் மாறுகிறதா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும், சில நேரங்களில் நிச்சயம் மனம் மாறத்தான் செய்கிறது.
கப்லானும், அவரது சக ஊழியர்களும் சென்ற இடங்களில் எல்லாம் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், வாக்காளர்கள் லஞ்சம் என்பது தேர்தல் நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றே கூறினர்.
இந்த குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சேரிப் பகுதிகளுக்கு சென்றபோது தேர்தல் நேரத்தில் அங்குள்ள மக்கள் ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்ப்பதை தெரிந்து கொண்டனர்.
அரசியல் வல்லுநர் ஒருவர் அவர்களிடம் கூறுகையில், பிரச்சாரத்திற்கு சேரிப்பகுதிகள் மிகவும் முக்கியமானவை. அங்குள்ள மக்கள் தொகையும், அவர்கள் வறுமையும் லஞ்சம் மூலம் அவர்களை சுலபமாக வாங்கிவிடச் செய்கிறது என்றார்.
சென்னையில் உள்ள ஒரு என்ஜிஓ அமைப்பு கூறுகையில், தமிழகத்தில் வாக்காளர்களைக் கவர அவர்களுக்கு திமுகவும், அதிமுகவும் எப்பொழுதுமே லஞ்சம் கொடுக்கும். அவர்கள் பணப் பட்டுவாடாவுக்கென்று தனி முறை வைத்துள்ளனர்.
தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் அரிசி மூட்டையில் பணத்தை கொண்டு வருவார்கள். அவர்களிடம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களின் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்வர். ஏஜென்டகள் வழக்கமாக தேர்தல் ஆணையம் தூங்கும்போது நடுராத்திரியில் குறிப்பாக 2 முதல் 4 மணிக்குள் தான் வருவார்கள்.
இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா?:
இதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு அரசியலில் பணப்புழக்கத்தை விட்டவர் அழகிரி என்பது கப்லானின் கருத்து. அழகிரியின் நம்பிக்ககைக்கு பாத்திரமான பட்டுராஜன் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்களை இடைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஒப்புக் கொண்டார். இது ஒன்றும் பெரிய ரகசியம் எல்லாம் கிடையாது. அழகிரி திருமங்கலத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ. 5 ஆயிரம் கொடுத்தார் என்று பட்டுராஜன் கேபிளில் கூறியுள்ளார்.
Sex with 33 women in two months?
17 வயதான கரீமா எல் மஹரோக் என்கிற ரூபி என்ற மாடல் அழகியுடன் 13 முறை உறவு வைத்துக் கொண்டார் இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி என்று தகவல் வெளியாகியுள்ளது.
74 வயதாகும் பெர்லுஸ்கோனி, காதல் மாமன்னனாவார். இவரையும், இவரது செக்ஸ் சேட்டைகளையும் பற்றிப் பேசுவதென்றால், பல திண்ணைகள் மாறி மாறி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். அந்த அளவுக்கு பெர்லுஸ்கோனியைப் பற்றிக் கிளற கிளற, கிளுகிளுப்பூட்டும், திகிலூட்டும் செக்ஸ் கதைகள் ஏராளமாக உள்ளன.
இந்த நிலையில் தற்போது 17 வயது சிறுமியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக பெர்லுஸ்கோனி சிக்கலில் மாட்டியுள்ளார். இத்தாலி நாட்டுச் சட்டப்படி 18 வயதுக்குட்பட்ட யாருடனும் உறவு வைத்துக் கொண்டால் அது சட்டப்படி குற்றமாகும். எனவேதான் பெர்லுஸ்கோனி மாட்டிக் கொண்டுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயர் கரிமா எல் மெஹ்ரூக் என்றற ரூபி. இவர் மொராக்கோவைச் சேர்ந்த பெல்லி டான்சர். இவருடன் கடந்த ஆண்டு 13 முறை உறவு வைத்துக் கொண்டாராம் பெர்லுஸ்கோனி.
ரூபி உள்பட 33 பெண்களுக்கு பெர்லுஸ்கோனியுடன் செக்ஸ் தொடர்பு இருந்ததையும் பெர்லுஸ்கோனிக்கு பெண்களை ஏற்பாடு செய்து கொடுத்த அவரது நெருங்கிய கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.
ரூபியுடன் பெர்லுஸ்கோனி உறவு வைத்துக் கொண்டது ஒரு வழக்காக உள்ள நிலையில், இந்த குற்றத்தை மறைக்க ரூபிக்கு பெர்லுஸ்கோனி பணம் கொடுத்தது புதிய வழக்காகியுள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
வி.சிறுத்தைகள் போட்டி-தொகுதிப் பட்டியல்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 பொதுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றவை தனித் தொகுதிகளாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகள் விவரம்:
தொகுதி மறு சீரமைப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி சோழிங்கநல்லூர். தற்போது தமிழகத்திலேயே மிகப் பெரிய தொகுதி இதுதான். இந்தப் பெருமையைப் பெற்றுள்ள தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடவுள்ள தொகுதிகள் விவரம்:
- அரக்கோணம் (தனி)
- கள்ளக்குறிச்சி (தனி)
- சீர்காழி (தனி)
- திட்டக்குடி (தனி)
- ஊத்தங்கரை (தனி)
- அரூர் (தனி)
- காட்டுமன்னார்கோயில் (தனி)
- செய்யூர் (தனி)
- சோழிங்கநல்லூர்
- உளுந்தூர்பேட்டை
தொகுதி மறு சீரமைப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி சோழிங்கநல்லூர். தற்போது தமிழகத்திலேயே மிகப் பெரிய தொகுதி இதுதான். இந்தப் பெருமையைப் பெற்றுள்ள தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
பாமக தொகுதிப் பட்டியல் அறிவிப்பு-திண்டுக்கல், சோழவந்தானிலும் போட்டி!
பாமகவுக்கு சென்னையில் வேளச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். முன்னதாக இங்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடலாம் என்ற பேச்சு நிலவி வந்தது நினைவிருக்கலாம்.
அதேபோல பாமகவுக்கு சம்பந்தமே இல்லாத சோழவந்தான் (தனி), திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதிகளும் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பாமக தொகுதிகள் விவரம்:
அதேபோல பாமகவுக்கு சம்பந்தமே இல்லாத சோழவந்தான் (தனி), திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதிகளும் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பாமக தொகுதிகள் விவரம்:
- வேளச்சேரி
- ஆலங்குடி
- கும்மிடிப்பூண்டி
- பாலக்கோடு
- திருப்போரூர்
- ஜோலார் பேட்டை
- எடப்பாடி
- மதுரவாயல்
- அணைக்கட்டு
- புவனகிரி
- திண்டிவனம்
- வேதாரண்யம்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- ஓமலூர்
- பூம்புகார்
- பவானி
- ஜெயங்கொண்டான்
- பரமத்திவேலூர்
- நெய்வேலி
- தர்மபுரி
- மேட்டூர்.
- ஆற்காடு
- போளூர்
- செஞ்சி
- மயிலம்
- பர்கூர்
- திண்டுக்கல்
- சோழவந்தான் (தனி)
- கோவில்பட்டி
சிவில் சர்வீஸ் தேர்வு மொழிப் பிரச்சினைக்கு கமிட்டி அமைப்பு
சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வின்போதான மொழி பிரச்சினைக்கு தீர்வுகாண, ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
|
ஐபேட் 2 அறிமுகத்தை தாமதப்படுத்துகிறது ஆப்பிள் நிறுவனம்
Japan certainly has other things on its mind right now, and so as not to trivialize the recent natural disaster there, Apple has decided to push back the release of the iPad 2 in that country.
The tablet had been expected to go on sale in Japan on March 25. That date has been removed with no official new date yet to announce.
"Our hearts go out to the people of Japan, including our employees and their families who have been impacted by this terrible tragedy," said Apple spokesperson Natalie Kerris in a statement.
The company further noted that all Apple employees in Japan were accounted for and are safe.
Over here in the US, the iPad 2 has been a runaway success, selling more than a million units during its first few days on the market in the United States.
கடந்த வாரம் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதல் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் 2 அறிமுகத்தை தாமதப்படுத்தி உள்ளது. மார்ச் 2ம் தேதியன்று அறிமுகம் செய்யப்படுவதாக இருந்த ஐபேட் 2, தற்போது மார்ச் 25ம் தேதி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் அமெரிக்க தலைவர் ஸ்டீவ் ஜோப்ஸ் தெரிவித்துள்ளார். மாத்திரை வடிவிலான கம்ப்யூட்டரை மார்ச் 25ம் தேதி முதல் நியூசிலாந்து, ஸ்பெயின், மெக்சிகோ உள்ளிட்ட 26 நாடுகளில் விற்பனை துவக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Microsoft launches Internet Explorer 9 for Africa Business,
The global software giant, Microsoft Corp, today, announced the launch of the latest version of the world’s most-used browser, Internet Explorer 9 in 39 languages around the world, including English, French, and Portuguese for Africa.
Internet Explorer 9, according to Microsoft, has a robust set of built-in security, privacy and reliability technologies that keep customers safer online.
மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தின் புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோயர் தனது புதிய பிரவுசிங் சாப்ட்வேரை அறிமுகப்படுத்தி உள்ளது. டெக்சாசில் நடைபெற்ற தொழில்நுட்ப விழா ஒன்றில் பங்கேற்ற மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேடிவ் துணை தலைவர் டியன் ஹசாமோவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோயர் 9, தற்போது 39 மொழிகளில் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது.

Vodafone wins HP supplier of the year award
வோடஃபோன் குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அதன் மொபைல் போன் சேவையை பாராட்டி இந்த ஆண்டிற்காக ஹச்.பி., விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் தொலைத்தொடர்பு சேவையை வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக வோடஃபோன் நிறுவன சி.இ.ஓ., நிக் ஜெஃபரி தெரிவித்துள்ளார்
British rescuers say red tape blocked Japan mission
A BRITISH rescue team hoping to help with the disaster effort in Japan said on Wednesday they had been forced to return home after the British embassy in Tokyo denied them the necessary paperwork.
Willie McMartin, of the Scotland-based charity the International Rescue Corps, told the BBC a team of 12 volunteers had been granted permission by the Japanese embassy in London to travel to the quake- and tsunami-hit region of the country.
But when they arrived, the British embassy refused to give them the authorisation letter needed to obtain a permit to travel to the disaster area, he said.
'The UK embassy in Tokyo refused to issue that letter, in spite of having talked to the Japanese embassy in London, because they said they would then become responsible for the team,' he told the BBC.
தானாக உதவ முன் வந்த பிரிட்டிஷ் நாட்டினரை டோக்யோவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் அனுமதி மறுத்தது.
Russia to dispatch first humanitarian aid to Japan
Today the Japanese side asked Russia for 10,000 blankets and 10,000 mattresses. Russian Emergencies Ministry flights will deliver the required humanitarian cargo to Japan," she said.
Large parts of eastern Japan were left devastated after a 9.0-magnitude earthquake struck off the coast on Friday, sparking a powerful tsunami. It was followed by aftershocks that have since caused blasts at the Fukushima nuclear power plant in the country's east, raising fears of a nuclear meltdown.
Over 10,000 people are reported dead or missing in Japan following the disasters. A death toll of 2,500 has so far been confirmed.

ஜப்பான் முதன் முதலாக உதவியை நாடியது .பத்தாயிரம் கம்பளிகள் மற்றும் பத்தாயிரம் மெத்தைகள் வழங்க கோரி ரஷ்யா விடம் கேட்டுகொண்டது. உடனடியாக ரஷ்யா அனுப்பியது.
Korean Peninsula moves up to 5 cm east due to Japan quake
The Korean Peninsula has moved a 5 centimetres to the east due to the massive quake that rocked Japan last week, a state-run astronomical institute said today.
The Korea Astronomy and Space Science Institute (KASI) said that based on detailed global positioning system (GPS) data, the peninsula moved between 1 cm to 5 cm depending on the location, with Ulleung Island and nearby Dokdo islets in the East Sea being most affected.
The south-western part of the country and Jeju Island off the peninsula’s southern coast moved far less.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக கொரிய தீபகற்பம் 5 செ.மீ., நகர்ந்துள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பயங்கர நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டது.
Bahrain sweeps into protest camp; 6 dead
முற்றியது கலவரம், அவசரநிலை பிரகடனம்
30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் எகிப்தின் மக்கள் புரட்சி, அடக்குமுறையில் இருக்கும் மற்ற சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட தாக்கத்தால் எழுச்சி கண்டுள்ளனர் பஹ்ரைன் மக்கள். அந்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால் அறவழியில் போராட முயன்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் பலியாகினர்.
அவசரநிலை : பஹ்ரைனில் கலவரம் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருப்பதால் அங்கு 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மன்னர் பிறப்பித்தார். மக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக மன்னர் தெரிவித்தார்.
பாதுகாப்புக்கு சவுதி படைகள் : 3 மாத கால அவசர நிலையின் போது பஹ்ரைன் படைகளுக்கு உதவுவதற்காக ஓமன் மற்றும் கத்தார் படைகள் அங்கு விரைந்துள்ளன. இதற்கிடையில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் கலவரத்தில் குதித்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் இறந்தனர், பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுகிறது
2G scam: Raja aide Sadiq Batcha found hanging in Chennai residence
ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் (தற்)கொலை?
2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் மனைவியும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
தூக்கில் தொங்கிய சாதிக்: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உறவினர்கள் கண்ணீர் : தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடலைப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
நெருக்கடி ! சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த சாதிக்? : தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)