|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 March, 2011

சிவில் சர்வீஸ் தேர்வு மொழிப் பிரச்சினைக்கு கமிட்டி அமைப்பு

சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வின்போதான மொழி பிரச்சினைக்கு தீர்வுகாண, ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் எழுத்து தேர்வின்போது ஒருவர் என்ன மொழியை தேர்வு செய்கிறாரோ, அதே மொழியில்தான் நேர்முகத் தேர்விலும் பதிலளிக்க வேண்டும் என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விதியை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததை அடுத்து, யு.பி.எஸ்.சி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த விதியைப் பற்றி ஆராய ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இந்த விதியை ஆராய்ந்து தனது பரிந்துரையை 3 மாதத்தில் சமர்ப்பிக்கும்" என்றார். இதையடுத்து இந்த வழக்கு ஜூன் 23 ம் தேதி அடுத்த விசாரணைக்கு வருகிறது.

ஒருவர் எழுத்துத் தேர்வுகளை எந்த மொழியில் எழுதுகிறாரோ, அந்த மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோதான் நேர்முகத் தேர்வையும் நிறைவுசெய்ய வேண்டும். வேறு மொழியில் மாற்றிக்கொள்ள முடியாது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் முன்னதாக அபிடவிட் தாக்கல் செய்த யு.பி.எஸ்.சி., "விரிவான முறையில் 7 தாள்கள் வரை ஆங்கிலத்தில் எழுதி தேர்ச்சி பெற்று, இறுதியாக நேர்முகத் தேர்வுக்கு வரும் ஒருவரால் நிச்சயம் ஆங்கிலத்தில் தன் கருத்துக்களை வெளியிட முடியும்" என்று கூறியிருந்தது.

ஆனால் மனுதாரர் தரப்போ, "யு.பி.எஸ்.சி -இன் இந்த கருத்து சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ். போன்ற நிலைகளில் தங்களின் படிப்பை மேற்கொண்டவர்கள் மற்றும் சமூகத்தின் உயர்தர மக்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது" என்று கூறுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...