|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 October, 2011

என்றும் இளமையுடன் இருக்க...!


என்றும் இளமையுடன் தோற்றமளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முகத்தில் சுருக்கம் வந்தாலே மனதும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்று அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பவர்கள் பலருண்டு. உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் கூறும் முறைகளை பின்பற்றினாலே போதும் என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்கலாம்.

உணவில் கட்டுப்பாடு:நாம் உண்ணும் உணவே நமக்குள் அதிசயிக்கத்தக்க மாற்றத்தை செய்கிறது. நமது ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். நாளொன்றுக்கு ஐந்து கப் பழச்சாறு அல்லது காய்கறிச் சாறு உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். புருக்கோலி, காரட், ஆரஞ்ச் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ரெட் மீட் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள் தினசரி மீன் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். தாவர எண்ணெய்களில் சமைத்த உணவையே உட்கொள்ள வேண்டும். தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனை.

ஆன்டி ஆக்ஸிடென்டல்: முதுமையை தவிர்ப்பதில் ஆன்டி ஆக்ஸிடென்டலுக்கு முக்கிய பங்குண்டு. நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகள் போன்றவற்றை உண்பதன் மூலம் அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டல் இளமையை தக்கவைக்கின்றன. ஸ்ட்ராபெர்ரி, மாதுளம்பழம் போன்றவை அதிகம் உண்ணவேண்டும். கிரீன் டீயில் அதிக ஆண்டி ஆக்ஸிடென்ட்டல் உள்ளன. இது நன்றாக செயல்வினை புரிந்து முதுமை வராமல் தடுக்கின்றது.

புகை, மது கூடாது: நம்முடைய லைப்ஸ்டைலை மாற்ற வேண்டும். அதிக புகைப் பிடிப்பது. ஆல்கஹால், போதை வஸ்துகள் உபயோகிப்பதும் முகத்தில் அதிக சுருக்கத்தை வரவழைக்கும். இரத்தத்தை விஷத்தன்மையானதாக்கி நிறத்தை மங்கச்செய்கிறது. எனவே இளமையை விரும்புபவர்கள் குடிப்பதை, புகைப்பதை விட்டொழிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி அவசியம்: உடற்பயிற்சியே இளமையை தக்க வைக்கும் இனிய வழி என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து தசைகளை இருக்கமாக்குகிறது. இதனால் முதுமை தோற்றம் ஓடியே போய்விடும் என்பது மருத்துவர்களின் கருத்து.

எளிய சோப், கிரீம்கள்: முகச்சுருக்கத்தை போக்கவும், தோலை பாதுகாக்கவும் எளிய வழிகள் உள்ளன. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் சோப், மற்றும் இளமையை கூட்டும் கிரீம் போன்றவைகளை உபயோகிக்க வேண்டும். கூடுமானவரை சூரிய ஒளியில் நம் உடல் அதிக அளவில் படுவதானாலும் முகச்சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தரமான சன்ஸ்கிரீன் தடவாமல் வெளியில் கால் வைக்க வேண்டாம்.

கவலையை துரத்துங்கள்: கவலையே நமது முகச்சுருக்கத்தை அதிகமாக்கி வயதான தோற்றத்தை தரும். எனவே எதற்கும் கவலை வேண்டாம். மகிழ்ச்சியான நினைவே நமது உடலினுள் நல்ல ஆரோக்கியமான ஹார்மோனை சுரக்கச் செய்யும் என்பது மருத்துவர்களின் அறிவுரை கவலைப்படும்படியாக சம்பவங்கள் நடைபெற்றால் அதை புறந்தள்ளிவிட்டு மனதை அமைதியாக்கும் இசையை கேளுங்கள், நல்ல புத்தகங்களை படியுங்கள். என்கின்றனர் வல்லுநர்கள். இதுவே உங்களின் இளமையை நீட்டிக்கும் வழி.

மூளையை உற்சாகப்படுத்துங்கள்: இளமையை தக்கவைப்பதில் மூளைக்கு முக்கிய பங்குண்டு. எனவே மூளையை சுறுசுறுப்பாக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள். நினைவாற்றலை அதிகரிக்கும் செயல்கள், பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண்பது போன்ற ஆக்டிவான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நமது மூளையை சுறுசுறுப்பாக வைக்கலாம். இதன் மூலம் முதுமை என்பது நம் அருகில் கூட எட்டிப்பார்க்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

நாணயத்தின் இரு பக்கங்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும் என்று கூறியுள்ளதைப் பார்க்கும்போது வைகோ இன்னும் திருந்தவில்லை !


ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும் என்று கூறியுள்ளதைப் பார்க்கும்போது வைகோ இன்னும் திருந்தவில்லை என்று தெரிகிறது. என்ன செய்வது, பூனை இளைத்தால் எலி கூட மச்சான் முறை கொண்டாடும் என்பது பழமொழியாயிற்றே என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அமைச்சரவை மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று திமுக ஆட்சியில் கடைப்பிடித்த முறையைச் செய்தியாளர்களிடம் வைகோ வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். நான் அப்போது செய்ததையும், இப்போது சொன்னதையும் அவர் நினைவூட்டிய போதிலும், என்னையும் ஜெயலலிதாவையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கூறி ஆத்திரத்தைக் கக்கியிருக்கிறார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

திமுகவுக்கு ஆற்றிய பணிக்காக மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக்கி அருகிலேயே வைத்திருந்து பாராட்டிய நானும், கடைசி நிமிடம் வரை காத்திருக்க வைத்து கைவிட்ட ஜெயலலிதாவும் வைகோவுக்கு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத் தெரிகிறார்கள் என்றால் அவர் இன்னமும் திருந்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. பூனை இளைத்தால் எலிகூட மச்சான் முறை கொண்டாடும் என்பது பழமொழி அல்லவா என்று அவர் சாடியுள்ளார்.

எதிர்ப்புகளை சமாளிக்க ஹசாரே ஆலோசனை!


ஊழலுக்கு எதிரான எங்கள் அமைப்பு மிகவும் பலமாக உள்ளது. எந்தவித குற்றச்சாட்டுக்களை கூறினாலும், எங்கள் அமைப்பை உடைக்க முடியாது. இந்த அமைப்புக்கு, சட்ட விதிகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு பின், உயர்மட்டக் குழு மாற்றி அமைக்கப்படும்' என, அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக போராடிவரும் அன்னா ஹசாரே குழுவில் உள்ள முக்கிய நபர்கள் மீது, சமீபகாலமாக தொடர்ந்து புகார் கூறப்பட்டது. பிரசாந்த் பூஷன், காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியதற்காக, தாக்குதலுக்கு ஆளானார்.  விமான பயணத்துக்காக அளிக்கப்பட்ட சலுகையை, முறைகேடாக பயன்படுத்தியதாக, கிரண்பேடி மீது புகார் கூறப்பட்டது. வருமான வரித்துறை சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதைத் தொடர்ந்து, ஹசாரே குழுவைச் சேர்ந்த மேதா பட்கர், குமார் விஸ்வாஸ் ஆகியோர், ஹசாரேயின் உயர்மட்டக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என, வலியுறுத்தினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஹசாரே தரப்பின் உயர்மட்டக் குழு கூட்டம், காஜியாபாத்தில் நேற்று முன்தினம் கூடியது. இதில், உயர்மட்டக் குழுவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என, முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவை, மகாராஷ்டிர மாநிலம், ராலேகான் சித்தியில் மவுனவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேயிடம் தெரிவிப்பதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண்பேடி ஆகியோர், நேற்று அங்கு சென்றனர்.

சந்திப்புக்கு பின், எழுத்து மூலமாக அளித்த பதிலில் ஹசாரே கூறியதாவது:ஊழலுக்கு எதிரான எங்கள் அமைப்பு பலமாக உள்ளது. யாராலும் இந்த அமைப்பை உடைக்க முடியாது. எங்களின் உயர்மட்டக் குழுவை கலைக்கப் போவதாக, தவறான தகவல்கள் வெளியாகின்றன. சிலரின் குற்றச்சாட்டுகளுக்காக, குழுவை கலைத்து விட்டால், ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு விடும். மேலும், எங்கள் அமைப்பின் மீதான நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும். எனவே, குற்றச்சாட்டுகளை கண்டு பயப்பட மாட்டோம்.உயர்மட்டக் குழுவில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, சவாலை சந்திப்போம். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும்வரை, எங்களின் போராட்டம் தொடரும். எதிர்காலத்தில், எங்கள் அமைப்புக்காக, சட்ட விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் உருவாக்குவோம். அதன்பின், இந்த குழுவில் மாற்றம் மேற்கொள்ளப்படும்.


உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்கள் யார், செயற்குழுவில் யார் இடம் பெறுவர் என்பது பற்றிய விவரங்கள், விதிமுறைகளில் இடம் பெற்றிருக்கும். எங்களின் போராட்டம், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எதிரானது அல்ல.
லோக்பால் மசோதாவை பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றாவிட்டால், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும் யாத்திரை நடத்துவேன். ஒரு சிலர், எங்களின் போராட்டத்தை சீர்குலைப்பதற்காக, எங்கள் மீது தவறான புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த புகார்கள், எங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது. எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.


எங்கள் அமைப்புக்கு வந்த நன்கொடை பற்றிய விவரங்கள் முழுவதும், இணையதளத்தில் வெளியிடப்படும். எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. காஷ்மீர் பற்றிய விஷயத்தில், பிரசாந்த் பூஷன், தன் கருத்தை தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் ஒருவர் தெரிவிக்கும் கருத்து, எங்கள் குழுவின் கருத்தாகாது. சுவாமி அக்னிவேஷ் விவகாரம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். எங்கள் அமைப்புக்கு, அறிமுகம் இல்லாத வட்டாரத்தில் இருந்து, வங்கி மூலமாக 40 லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளது. இதுபோன்ற நிதியை, திரும்ப அளிக்க உத்தரவிட்டுள்ளோம். ராம்லீலாவில் நடந்த போராட்டத்துக்கு பின், நன்கொடை வசூலிப்பதையும், காசோலைகள் பெறுவதையும் நிறுத்தி விட்டோம். இதன்மூலம், நாங்கள் பணத்துக்காக போராட்டம் நடத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

பாபா ராம்தேவ், யோகா குரு.:"" தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளால், ஹசாரே குழுவினர், மனம் உடைந்துவிடக் கூடாது. அதிலிருந்து மீண்டு, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எந்தவித சர்ச்சைக்கும் ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஊழல் மற்றும் கறுப்புப் பண பதுக்கலுக்கு எதிரான போராட்டத்துக்கு, நாட்டு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

நாடு முழுவதும் 11 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் மத்திய அரசு!


கடந்த 2010ம் ஆண்டில், 10 ஆயிரத்து 670 குழந்தைகள் கடத்தப்பட்டன. 5,484 குழந்தைகள் கற்பழிக்கப்பட்டன. 1,408 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டன' என, மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை: கடந்த ஆண்டில், நாடு முழுவதும் நடந்த கொடூரமான குற்றங்களில், 33 ஆயிரத்து 908 பேர் கொல்லப்பட்டனர். இதில், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 15 ஆயிரத்து 787 பேர்; 1,408 பேர் அப்பாவி குழந்தைகள். அதிகபட்சமாக, உத்தரப் பிரதேசத்தில் 4,456 மற்றும் பீகாரில் 3,362 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கடுத்த இடங்களில், மகாராஷ்டிரா (2,837), ஆந்திரா (2,538) மற்றும் தமிழகம் (1,875) உள்ளன. அதேபோல, நாடு முழுவதும் நடந்த பல்வேறு கற்பழிப்புச் சம்பவங்களில், 5 ஆயிரத்து 484 குழந்தைகள் கற்பழிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில், 1,182 செக்ஸ் கொடுமைகளுக்கு ஆளாகின. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த ஆண்டில் 10 ஆயிரத்து 670 குழந்தைகள் கடத்தப்பட்டன. குழந்தைகள் கடத்தலில், தலைநகர் டில்லி முதலிடத்தில் உள்ளது. இங்கு, 2,982 குழந்தைகள் கடத்தப்பட்டன. இதற்கு அடுத்ததாக, பீகாரில் 1,359, உ.பி.,யில் 1,225, மகாராஷ்டிராவில் 749, ராஜஸ்தானில் 706, ஆந்திராவில் 581 குழந்தைகளும் கடத்தப்பட்டன. இவ்வாறு, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயிரத்தில் 4 பேருக்கு பக்கவாதம் புதுச்சேரியில்!


புதுச்சேரியில் ஆயிரம் பேரில் நான்கு பேருக்கு பக்கவாத நோய் உள்ளது என, உலக பக்கவாத தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் மருந்தியல் துறைகள், புதுச்சேரி நரம்பியல் கழகத்துடன் இணைந்து, உலக பக்கவாத தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், நரம்பியல் துறைத் தலைவர் சுனில் நாராயணன் வரவேற்றார். டாக்டர் அர்ச்சனா நோக்கவுரையாற்றினார். மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக்குமார் தாஸ், டீன் கே.எஸ்.ரெட்டி, இந்திய பக்கவாத கழகத் தலைவர் சிவக்குமார் வாழ்த்திப் பேசினர். டாக்டர்கள் சந்தோஷ் ஜோசப், சுனில் நாராயணன், ஸ்ரீஜிதேஷ் ஆகியோர், பக்கவாத நோய் தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

ஜிப்மர் இயக்குனர் சுப்பாராவ் தலைமை தாங்கி பேசுகையில், "ஜிப்மரில், பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்கத் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளும், திறமையான டாக்டர்களும் உள்ளனர்' எனக் குறிப்பிட்டார். ஜிப்மர் நரம்பியல் துறைத் தலைவர் சுனில் நாராயணன் கூறுகையில்,"பக்கவாதத்தைக் குணப்படுத்த நவீன சிகிச்சைகள் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. உலக அளவில், தற்போது 6 பேரில் ஒருவருக்கு இந்த நோய் உள்ளது. 2005ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, புதுச்சேரியில் ஆயிரத்தில் நான்கு பேருக்கு இந்த நோய் உள்ளது' என்றார்

இந்திய எதிர்ப்பையும் மீறி காமன்வெல்த்!


காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள பெரும்பாலான நாடுகள், அந்த அமைப்பில் மனித உரிமைகள் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளா விடில், பிரிட்டன் பல நாடுகளுக்கு அளித்து வரும் தனது நிதியுதவியை நிறுத்தப் போவதாக எச்சரித்து உள்ளது.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம், கடந்த 28ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.

நிபுணர்கள் குழு: காமன்வெல்த் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை அந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, 11 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, 2009ம் ஆண்டு நவம்பரில், டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் நியமிக்கப்பட்டது.

இந்தியா எதிர்ப்பு: இக்குழுவின் பரிந்துரைகளில், காமன்வெல்த் நாடுகளுக்கு என தனியாக ஒரு மனித உரிமைகள் கமிஷனர் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று. இலங்கையில் 2009ல் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இரு தரப்பினரும் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் வெளிப்படத் துவங்கியதையடுத்து, கமிஷனர் நியமனம் அவசியம் என காமன்வெல்த் அமைப்பு கருதியது.ஆனால், இதுகுறித்து நாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குறிப்பாக, தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கமிஷனர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கமிஷனர் தேவை: மலேசிய முன்னாள் பிரதமரும், நிபுணர்கள் குழு உறுப்பினருமான அப்துல்லா அகமது படாவி, இது குறித்து நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், "கமிஷனர், ஒரு போலீஸ் அதிகாரியாகச் செயல்பட மாட்டார்; அவருடைய நடவடிக்கைகளும் கடுமையாக இருக்காது. காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் நடவடிக்கை குழு மற்றும் பொதுச் செயலர் ஆகியோரின் நடவடிக்கைகளில் இயல்பாக ஏற்படும் விடுதல்களை நிரப்பவே இந்த பதவி' என்றார்.

106 பரிந்துரைகள்: மனித உரிமைகள், எச்.ஐ.வி., ஒழிப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், வேலையில்லா இளைஞர்கள் விவகாரம், பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளை காமன்வெல்த் நாடுகள் எதிர்கொள்ளும் வகையில், 106 பரிந்துரைகளை நிபுணர் குழு நேற்று முன்தினம் அளித்தது. இந்த பரிந்துரைகளை வெளிப்படையாக அறிவிக்க, காமன்வெல்த் அமைப்பு அனுமதியளிக்கவில்லை.ஒப்புதல்: இந்நிலையில் நேற்று நடந்த இறுதிக் கூட்டத்தில், மனித உரிமைகள் கமிஷனர் நியமனத்திற்கு, பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு கூறுகையில், "இந்த பரிந்துரைகளை ஒப்புக் கொண்டதன் மூலம் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் காமன்வெல்த் செயல்படும் என்பதை நாம் உறுதி செய்துள்ளோம்' என்றார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக, சிறிய தீவு நாடுகளுக்கு உதவுவதாக காமன்வெல்த் உறுதியளித்துள்ளது. அந்த அமைப்பில் பாதிக்கு மேற்பட்ட உறுப்பு நாடுகள் தீவுகளே.இலங்கை விவகாரம் தவிர, குழந்தைத் திருமணம் மற்றும் எச்.ஐ.வி., ஆகிய விவகாரங்களில் இக்கூட்டம் தோல்வியைத் தழுவியுள்ளது.இந்த அமைப்பில் உள்ள 20 நாடுகளில் இன்னும் குழந்தைத் திருமணம் நடைமுறையில் உள்ளது. அவற்றிலும், 12 நாடுகளில் அதிகளவில் உள்ளது. அதேபோல், உலகில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரில் 60 சதவீதம் பேர் காமன்வெல்த் நாடுகளில் உள்ளனர்.

காமன்வெல்த் நாடுகள் 54ல், 41 நாடுகள் ஓரினச் சேர்க்கையை சட்ட விரோதமாகவே இன்னும் வைத்துள்ளன. பிரிட்டனின் நிதியுதவி பெறும் நாடுகள், மனித உரிமைகள், ஓரினச் சேர்க்கை தடை உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவில்லையெனில், இனி அந்த உதவியைப் பெற முடியாது என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரித்துள்ளார். பொதுச் செயலராக தொடர்கிறார் சர்மா: காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலராக கமலேஷ் சர்மா, 70, உகாண்டாவில் 2007ல் நடந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டு காலம் கொண்ட இப்பதவிக்கு அவரே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவரது இரண்டாவது பதவிக் காலம், 2012, ஏப்ரல் மாதம் துவங்குகிறது.

இலங்கை விவகாரத்தில் தோல்வி:மனித உரிமைகள் கமிஷனர் நியமனம் குறித்த காமன்வெல்த் கூட்டமைப்பின் ஒப்புதல் என்பது பெயரளவில் தான் என, நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இந்த கூட்டம், இலங்கை விவகாரத்தில் தோல்வியையே தழுவியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.வரும் 2013ல் இலங்கையில் காமன்வெல்த் கூட்டம் நடந்தால், அதில் பங்கேற்க முடியாது என கனடா தனது எதிர்ப்பை பதிவு செய்த பின் கூட, பரவலான எதிர்ப்பு இலங்கைக்கு எதிராக காமன்வெல்த்தில் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது."மனித உரிமைகள் தொடர்பான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட கையோடு, 2013 கூட்டத்தை இலங்கையில் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்தது காமன்வெல்த் அமைப்பிற்கு அவமானமே' என, சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு கூறியுள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்4,000 ரூபாயில் பி.சி. அறிமுகம் செய்ய திட்டம்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 4,000-5,000 விலையில் 4ஜி தொழில்நுட்பத்திலான டேப்லெட் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம், கனடாவின் டேட்டாவிண்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.டேட்டாவிண்ட் நிறுவனம், உலகிலேயே மிக மலிவான, "ஆகாஷ்' டேப்லெட் கம்ப்யூட்டரை அண்மையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கச்சா எண்ணெய் உற்பத்தி முதல், சில்லறை விற்பனை வரை பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வரும் மு@கஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், நாடு முழுவதும் அகண்ட அலைவரிசை சேவையை வரும் டிசம்பர் மாதம் முதல் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இக்குழுமம், மகேந்திரா நகாதாவின் இன்போடெல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ளது.உலகில் 4ஜி தொழில்நுட்பத்தில் வெகு சில நிறுவனங்கள் மட்டுமேடேப்லெட் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இவற்றின் விலையும் அதிகமாகும். மோட்டரோலா நிறுவனத்தின் "ஜூம்' டேப்லெட் கம்ப்யூட்டர் 599 டாலருக்கும், எச்.டி.சி-யின் "இவோ வியூ' 399 டாலருக்கும், டெல் நிறுவனத்தின் "ஸ்டீரிக்' 355 டாலருக்கும் விற்பனையாகின்றன. இதில் நான்கில் ஒரு பங்கு விலையில் (4,000-5,000 ரூபாய்) ரிலையன்ஸ், டேப்லெட் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது.டேட்டாவிண்ட் நிறுவனம், ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்பத்திலான டேப்லெட் கம்ப்யூட்டரை, 2,999 ரூபாய் என்ற விலையில் வரும் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, 4ஜி தொழில்நுட்பத்தில் டேப்லெட் கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப்படும் என இந்நிறுவனத்தின் தலைமை öவியல் அதிகாரி சுனீத் சிங் தெரிவித்தார்.முகேஷ் மற்று அனில் அம்பானியின் பிரிவிற்கு முன்பு, கடந்த 2002ம் ஆண்டு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 500 ரூபாய்க்கு, சி.டீ.எம்.ஏ., தொழில்நுட்பத்தில் மொபைல் போனுடன், குறிப்பிட்ட அளவிற்கு இலவசமாக தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வவிதியை வழங்கியது. இதன் மூலம், தொலைத்தொடர்பு சந்தையில் குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை இந்நிறுவனம் பிடித்தது.இதே பாணியில், மலிவு விலை டேப்லெட் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தி, பிராட்பேண்ட் சந்தையை கைப்பற்ற மு@கஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இச்சேவைக்கு, மிகக் குறைவாக, அதாவது மாதம் ஒன்றுக்கு 49 ரூபாய் கட்டணம் வ‹லிக்கப்படும் என்ற öவிய்தி, போட்டி நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...