புதுச்சேரியில் ஆயிரம் பேரில் நான்கு பேருக்கு பக்கவாத நோய் உள்ளது என, உலக
பக்கவாத தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையின்
நரம்பியல் மற்றும் மருந்தியல் துறைகள், புதுச்சேரி நரம்பியல் கழகத்துடன்
இணைந்து, உலக பக்கவாத தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஜிப்மர்
சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில்,
நரம்பியல் துறைத் தலைவர் சுனில் நாராயணன் வரவேற்றார். டாக்டர்
அர்ச்சனா நோக்கவுரையாற்றினார். மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக்குமார்
தாஸ், டீன் கே.எஸ்.ரெட்டி, இந்திய பக்கவாத கழகத் தலைவர் சிவக்குமார்
வாழ்த்திப் பேசினர். டாக்டர்கள் சந்தோஷ் ஜோசப், சுனில் நாராயணன்,
ஸ்ரீஜிதேஷ் ஆகியோர், பக்கவாத நோய் தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
ஜிப்மர்
இயக்குனர் சுப்பாராவ் தலைமை தாங்கி பேசுகையில், "ஜிப்மரில்,
பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்கத் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளும்,
திறமையான டாக்டர்களும் உள்ளனர்' எனக் குறிப்பிட்டார். ஜிப்மர்
நரம்பியல் துறைத் தலைவர் சுனில் நாராயணன் கூறுகையில்,"பக்கவாதத்தைக்
குணப்படுத்த நவீன சிகிச்சைகள் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. உலக
அளவில், தற்போது 6 பேரில் ஒருவருக்கு இந்த நோய் உள்ளது. 2005ம் ஆண்டு
எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, புதுச்சேரியில் ஆயிரத்தில் நான்கு
பேருக்கு இந்த நோய் உள்ளது' என்றார்
No comments:
Post a Comment