ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
09 February, 2012
இதே நாள்...
- வில்லியம் மார்கன், வாலிபாலை கண்டுபிடித்தார்(1895)
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது(1900)
- அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது(1942)
- பொதுநலவாய அமைப்பினுள் ஜமைக்கா விடுதலை பெற்றது(1962)
அமைச்சர்கள் பார்த்த ஆபாசப் படத்துக்கு ஏக கிராக்கி!
டாஸ்மாக் வருமானத்தைவிட குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம் உயர் நீதிமன்றம்!
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோல்டன் என்க்ளேவ் என்ற அடுக்குமாடி வணிக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அலுவலகங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.ஏராளமான அலுவலகங்கள் செயல்பட்டு வரும் எங்கள் வளாகத்தின் கீழ்த் தளத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படுகிறது. அங்கு பொது இடத்தை சட்ட விரோதமாக அடைத்து உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இந்த டாஸ்மாக் கடை காரணமாக எங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் தினமும் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். மதுபானக் கடைக்கு அருகிலேயே ஐந்து பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பயிலும் மாணவர்கள் பலர் எழுதுபொருள்களை வாங்கவும், நகல் (ஜெராக்ஸ்) எடுக்கவும் எங்கள் வணிக வளாகத்தினுள் வந்து செல்கின்றனர். இங்கு செயல்படும் நடனப் பள்ளிக்கும் தினமும் பல மாணவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் வளாகத்தின் உள்ளே செயல்படும் டாஸ்மாக் கடை காரணமாக இந்த மாணவர்களுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இது தவிர வளாகத்துக்கு எதிரேயுள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்களுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் என, பலரும் குடிகாரர்களால் பலவேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே எங்கள் வளாகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
"டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தைவிட, நாட்டிலுள்ள குழந்தைகளின் எதிர்காலமும், அவர்களின் பாதுகாப்பும்தான் மிகவும் முக்கியம். ஒரு டாஸ்மாக் கடையை மூடுவதால் யாரும் கண்ணீர் வடிக்கப் போவதில்லை.ஆண்டுக்கு ரூ.16 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த ஒரு கடையை மூடுவதால் அரசுக்கு எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை.ஆகவே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை பிப்ரவரி 20 ம் தேதிக்குள் அரசு மூட வேண்டும். அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப்ரவரி 20 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இந்த டாஸ்மாக் கடை காரணமாக எங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் தினமும் ஏராளமான பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். மதுபானக் கடைக்கு அருகிலேயே ஐந்து பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பயிலும் மாணவர்கள் பலர் எழுதுபொருள்களை வாங்கவும், நகல் (ஜெராக்ஸ்) எடுக்கவும் எங்கள் வணிக வளாகத்தினுள் வந்து செல்கின்றனர். இங்கு செயல்படும் நடனப் பள்ளிக்கும் தினமும் பல மாணவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் வளாகத்தின் உள்ளே செயல்படும் டாஸ்மாக் கடை காரணமாக இந்த மாணவர்களுக்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இது தவிர வளாகத்துக்கு எதிரேயுள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்களுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் என, பலரும் குடிகாரர்களால் பலவேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே எங்கள் வளாகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
"டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தைவிட, நாட்டிலுள்ள குழந்தைகளின் எதிர்காலமும், அவர்களின் பாதுகாப்பும்தான் மிகவும் முக்கியம். ஒரு டாஸ்மாக் கடையை மூடுவதால் யாரும் கண்ணீர் வடிக்கப் போவதில்லை.ஆண்டுக்கு ரூ.16 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த ஒரு கடையை மூடுவதால் அரசுக்கு எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை.ஆகவே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை பிப்ரவரி 20 ம் தேதிக்குள் அரசு மூட வேண்டும். அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப்ரவரி 20 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
காதலியை நண்பர்களுக்கு...?
பல்லாவரத்தை அடுத்த சங்கர் நகர் அருகே உள்ள அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் அகல்யா (19). இவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்ற கல்லூரி மாணவருக்கும் இடையே காதல் இருந்து வந்தது. அகல்யா, சிவானந்தத்தை உயிருக்கு உயிராக காதலித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 5-ந்தேதி மாலை சிவானந்தம், அகல்யாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர் அரவிந்த் சந்தோஷ், விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். அவரை பார்த்து விட்டு வருவோம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அகல்யா, சிவானந்தத்துடன் சென்றார்.
அரவிந்த் சந்தோசின் வீட்டில் சிவனாந்தத்தின் மற்ற நண்பர்களான சந்தோஷ் (19), ஹரிகரன் (19), தீபன்குமார் (18), நவீன் (19) ஆகியோரும் இருந்தனர். இவர்களை பார்த்ததும் அகல்யா அதிர்ச் சியடைந்தார். சந்தோசம் எந்தவித காயங்களுமின்றி நலமுடன் காணப் பட்டார். இதனால் பயந்துபோன அகல்யா, ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டார்.உடனே அங்கிருந்து தப்புவதற்கு முயன்றார். ஆனால் சிவானந்தமும் அவரது நண்பர்களும் அகல்யாவை விடவில்லை. அரவிந்த் சந்தோசின் வீடு மதுபார் ஆக மாறியிருந்தது. அகல்யாவை 2 பேர் பிடித்துக் கொள்ள தீபன் குமார் அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளார். இதனால் அகல்யா சிறிது நேரத்திலேயே மயக்கமானார். பின்னர் சிவானந்தம் அகல்யாவை கற்பழித்தார்.
இதன் பிறகு காதலி என்றும் பாராமல் தனது நண்பர்கள் 4 பேருக்கும் அவரை விருந்தாக்கினார். அன்று இரவு முழுவதும் 5 பேரும் சேர்ந்து அகல்யாவை மாறிமாறி கற்பழித்துள்ளனர். மறுநாள் காலையில் லேசாக மயக்கம் தெளிந்த அகல்யாதான் நாசமாக்கப்பட்டதை அறிந்து கதறி துடித்தார். சிவானந்தமும் மற்ற நண்பர்களும் அவரை சமாதானப்படுத்தி நைசாக அகல்யாவை வீட்டு அருகே கொண்டு வந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.பின்னர் வீட்டுக்கு சென்ற அகல்யா மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அவரை அழைத்துச் சென்றனர். அகல்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பதாக கூறினர். இதையடுத்து அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் ஆஸ்பத்திரியில் அகல்யா அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் விரைந்து சென்று அகல்யாவிடம் விசாரணை நடத்தினார்.
சிவானந்தம் உள்பட மாணவர்கள் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவர் நவீன் மட்டும் தலைமறைவாகிவிட்டார். மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 4 மாணவர்களும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிவானந்தம் தனியார் கல்லூரி ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சந்தோசும், நவீனும் என் ஜினீயரிங் மாணவர்கள். ஹரிகரன் பாலிடெக்னிக் படித்து வருகிறார். தீபன் குமார் பி.டெக் படிக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் விலகுமாறு கர்நாடக அரசு வற்புறுத்தியது ஆச்சார்யா!
கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகியது ஏன் என்று ஆச்சார்யா பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வரும் ஆச்சார்யா, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அரசு தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து, ஆச்சார்யா நேற்று (08.02.2012) ராஜினாமா செய்தார். பதவி விலகியது ஏன் என்று ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது. இந்த வழக்கு விசாரணையை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, பாஜகவின் டெல்லி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே கர்நாடக அரசு எனக்கு நெருக்கடி கொடுத்தது. பாஜக மேலிடத்தின் இந்த நெருக்கடி எடியூரப்பா முதல் அமைச்சராக இருக்கும் வரை எடுபடவில்லை. தற்போது முதல் அமைச்சர் சதானந்த கவுடா மூலம் அதனை நிறைவேற்ற பாஜக மேலிடம் முயற்சி செய்கிறது. அந்த நேரத்தில் ஆசை காட்டும் விதமாகவே, அரசு தலைமை வழக்கறிஞர் பதவி கொடுக்கப்பட்டது. அதனை ஏற்று சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிடுவேன் என்று கர்நாடக அரசு தப்புக் கணக்கு போட்டுவிட்டது. அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை விட, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்த சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பே மேலானது என்று கருதிதான், தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார்.
Though Mr. Acharya did not name those in the State government who had asked him to quit as SPP, only the Chief Minister has the authority to do so, as the Advocate-General is appointed by the Governor on the recommendation of the Chief Minister.
“I was appointed SPP in the case against Ms. Jayalalithaa on the recommendation of the then Chief Justice of the Karnataka High Court. The direction for appointment of senior counsel as SPP was given by the Supreme Court while transferring the trial of the disproportionate assets case to Karnataka from Tamil Nadu,” Mr. Acharya said. “I am not willing to give up the responsibility of SPP as I was chosen for that assignment by the then Chief Justice.”
Mr. Acharya said: “There is absolutely no bar [on] or illegality in my continuing … as SPP and as Advocate-General simultaneously.”
He also pointed out that the State government was aware of his assignment as SPP when it appointed him Advocate-General in August 2011.Mr. Acharya was appointed to the post after Chief Minister D.V. Sadanada Gowda assumed office on the resignation of Mr. Yeddyurappa. It was Mr. Acharya's fifth stint as Advocate-General. The 78-year-old Acharya has been SPP since 2004, and he had simultaneously served as Advocate-General during 2007-08 at the time of two spells of President's rule — soon after the fall of the BJP-JD(S) coalition government and the seven-day BJP government.
உண்ணாவிரதம் புற்றுநோயை தடுக்கும்...
உண்ணாவிரதம் புற்றுநோயை தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. சிறியகால அளவிலான உண்ணாவிரதம், புற்றுநோயை தடுப்பது மட்டுமல்லாது, நாம் எடுத்து வரும் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் பலனை விரைந்து கிடைக்கச் செய்யும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறியகால அளவிலான உண்ணாவிரதம், புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது, புற்றுநோய் கட்டிகள் மற்ற இடங்களில் பரவுதலை தடுக்கிறது.
கீமோதெரபி சிகிச்சையின் போது, இந்த சிறிய கால அளவிலான உண்ணாவிரதம் இருத்தல், சில வகை புற்றுநோய்களையும் குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த, மேல் ஆராய்ச்சிக்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாகவும், அதுகுறித்த பணிகள் நடைபெற்று வருவதாக ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி குறித்து, எலியை வைத்துக் கொண்டு சோதனை நடத்தியதாகவும், அதில் இம்முடிவுகள் வெளிப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சாப்பிடாமல் இருக்கும்போது, புற்றுநோய் செல்கள் ஓய்வுநிலை அல்லது உறக்கநிலைக்கு சென்று விடுவதாகவும், இதன்மூலம், அவைகள் பெருக்கமடைவது மற்றும் பிரிந்துசெல்வது தடுக்கப்பட்டு இறுதியில் அழிந்தும் விடுவது கண்டறியப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Lead researcher Professor Valter Longo, from the University of Southern California said: 'The cell is, in fact, committing cellular suicide.'What we're seeing is that the cancer cell tries to compensate for the lack of all these things missing in the blood after fasting. It may be trying to replace them, but it can't.' Professor Longo and his team looked at the impact fasting had on breast, urinary tract and ovarian cancers in mice.Fasting without chemotherapy was shown to slow the growth of breast cancer, melanoma skin cancer, glioma brain cancer and neuroblastoma - a cancer that forms in the nerve tissue.
Scientists found tumour cells responded differently to the stress of fasting compared to normal cells
In every case, combining fasting with chemotherapy made the cancer treatment more effective.Multiple cycles of fasting combined with chemotherapy cured 20 per cent of those with a highly aggressive form of cancer while 40 per cent with
a limited spread of the same cancer were cured.None of the mice survived if they were treated with chemotherapy alone. Researchers are already investigating the effects of fasting on human patients, but only a clinical trial lasting several years will confirm if human cancer patients really can benefit from calorie restriction. However they highlight that fasting could be dangerous for patients who have already lost a lot of weight or are affected by other risk factors, such as diabetes. Results of a preliminary clinical trial will be presented at an annual meeting of the American Society of Cancer Oncologists (Asco) in Chicago this June.Prof Longo points out that the study only tests if patients could tolerate short fasts of two days before and one day after chemotherapy. 'We don't know whether in humans it's effective,' he said. 'It should be off-limits to patients, but a patient should be able to go to their oncologist and say, 'what about fasting with chemotherapy?' or without if chemotherapy was not recommended or considered.' Previous research led by Prof Longo showed that fasting protected normal cells from the effects of chemotherapy but it did not look at cancer cells.It is now though fasting may be one way to make tumour cells weaker and more vulnerable. Prof Longo added: 'A way to beat cancer cells may not be to try to find drugs that kill them specifically but to confuse them by generating extreme environments, such as fasting, that only normal cells can quickly respond to.'
Subscribe to:
Posts (Atom)