|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 October, 2011

Worth more than its weight in gold...!



An 18-carat gold statue of Kate Moss in a provocative yoga pose has sold for £577,250 at Sotheby's.Mircrocosmos (Siren) was sold to an anonymous Asian telephone bidder.The provocative statue - which features the supermodel posing with her legs behind her back, is a smaller 10kg version of Marc Quinn's 50kg Siren That statue cost £1.5million to make - of which £1million was just the price of the gold.The smaller Microcosmos (Siren) which is one of four identical pieces will have cost about £200,000 just for the gold. It was part of a private collection.Explaining the name, Quinn said 'It's called Siren, because in a sense it represents everything that lures people to wreck themselves on the rocks: money, perfection, unattainable images – all these things 

தோலுக்காக கொள்ளப்படும் (பாம்பு, முதலை ) எதிராக மாடல் Laura Vandervoort




1 பில்லியன் யுரோ கரன்சிக்கு நடுவே மாடல் ஒருவரை நிர்வானமாய் !




While most of us mere mortals barely know what a £50 note feels like, Tamara Ecclestone lies naked surrounded by oodles of them.The model stripped off to pose for iconic photographer Tyler Shields in a series of snaps that ooze filthy rich.As well as writhing around on a bed laden with £1million, the 27-year-old also alludes to her own wealth by pretending to iron the wad of cash - even though she's probably never ironed in her life.


Sheilds' agent told The Sun: 'Tyler asked if she could get hold of £1million and she said she already had it lying around. So he got her to lie in it naked.'Tamara posed for the provocative shoot to coincide with the launch of her new reality series Billion $$$ Girl, which will air on Channel 5.In another scene at her £50million London mansion, she pretends to fry an egg while a pair of expensive Christian Louboutin heels decorate the kitchen surface. She later steps out on to the streets of London while wearing her designer footwear, sweeping the pavements in the middle of the night while dressed up to the nines. 

புதிய ஆல்பத்தில் நிர்வானமாய் பிரட்னி!



  

கலிகாலம் 3 = ஆண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த சகோதரிகள்!



ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர்கள் ரோஸ்மேரி சாக்விசிரா(28), சோபியா(26), நெட்காய் கோக்வாரா(24). இவர்கள் 3 பேரும் சகோதரிகள் ஆவர். அவர்கள் ஆண்களைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் காரில் சென்று கொண்டிருந்த சகோதரிகள் 19 வயது வாலிபருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர். 3 பெண்கள் லிப்ட் கொடுத்ததால் சந்தோஷமாக காரில் ஏறிய வாலிபரை தங்கள் வீட்டுக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து அவரை துன்புறுத்தியுள்ளனர்.

அதேபோல ராணுவ வீரர் ஒருவரைக் கடத்திச் சென்று தங்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரை சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பொது மக்களை காக்கும் பொலிஸ் ஒருவரையே கடத்திச் சென்றுள்ளனர். 
இந்த பெண்கள் ஹரேரே மாஷோலைன்ட் மற்றும் குவேறு ஆகிய நகர்களில் தெருவில் செல்லும் ஆண்களை தமது வாகனத்தில் ஏற்றி அனுமதித்த பின் அவர்களை மயக்க மருந்து கொடுத்து தமது காரியத்தை சாதித்து வந்துள்ளனர். இந்தப் பெண்கள் குறிப்பிட்ட ஆண்கள் மயக்கம் தெளிந்ததும் அவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளனர். அந்த ஆண்களிடமிருந்து விந்தணுக்களை சேகரித்த பின் அந்தப் பெண்கள் அவர்களை தெருவோரத்தில் கைவிட்டுவிட்டு சென்றுள்ளனர். ஆண்களின் விந்தணுக்கள் மூலம் தாம் அதீத மந்திர ஆற்றல்களைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த பெண்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரில் கோபி நகோவரா என்ற 26 வயது பெண்ணும்  உள்ளடங்குகிறார்.ஆண்களைக் கடத்திச் சென்று      ஊறவுக்கு உட்படத்திய குற்றச்சாட்டுக்கும் பாதசாரியொருவரை வாகனத்தால் மோதி அவர் பலியாவதற்கு காரணமாக இருந்ததற்கும்  தொடர்பாக வழக்கும் பதிவாகியுள்ளது.

இதே நாள்...


  • நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)
  •  பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)
  •  டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)
  •  கம்ப்யூட்டரை கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)
  •  அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)
  • ஆன்மிகம் என்பது என்ன? தேவை என்பதை அறிவது அல்ல தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக!

    படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர்.செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவான உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.


    வெய்யில் சுட்டெரிக்கும் போது உடல் எங்கும் வியர்த்து கொட்டுகிறது. வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகயிருக்கிறது. ஆன்மிகத்தால் வியர்வையை போக்கும் ஒரு விசிறி மட்டை கூட செய்து தர முடியவில்லை. மார்கழி மாத கடுங்குளிரில் நடுங்கும் போது விஞ்ஞான கண்டுபிடுப்பான கம்பளி போர்வை தான் காப்பாற்றுகிறது,காலராவை ஒழித்தது விஞ்ஞானம்.  கால் கடுக்க நடந்தவனுக்கு கார்களை தந்தது விஞ்ஞானம். கண்டம் விட்டு கண்டம் தாவும் ஆயுதங்களை படைத்தது விஞ்ஞானம். இத்தனையும் தந்த விஞ்ஞானம், இதை போற்றுவதை விட்டுவிட்டு ஆலகால விஷம் உண்ட ஆண்டவா போற்றி என பாடுவது எந்த வகையில் நியாயமாகும்? என்று கேட்கலாம். அறிவு கலப்பையை அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால் இந்த கேள்விக்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும். வெப்பத்தில் வியர்க்கிறது.  வியர்வையினால் உடம்பில் உள்ளிருக்கும் கழிவு பொருள் எல்லாம் வெளியேறுகிறது. காற்றாடி கொண்டு வீசினால் சுகமாக இருக்கும்.  ஆனால் நாளடைவில் கழிவுகள் உடம்பில் தங்கி நோய்களாக வெளிவரும்.

    குளிரால் நடுங்கும் போது தசைகள் துடித்து முறுக்கேறுகிறது.  நரம்புகள் தாங்கும் திறனை அதிகரித்து கொள்கிறது. கம்பளி குளிரை தடுக்கலாம்.  நோயை தடுக்காது. எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் தருகின்ற கருவிகள் எல்லாம் மனிதர்களுக்கு தற்கால சுகத்தை கொடுத்து நெடுங்கால கஷ்டத்தை தருவதேயாகும். ஆன்மிகம் துயரத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லாது.  அந்த துயரத்தோடு மோதி ஜெயிப்பதற்கு தான் வழிகாட்டும். நிரந்தரமான சந்தோஷமே ஆன்மிகத்தின் இறுதி நோக்கம். நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரலாம் ஆனால் மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கும் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. அதற்காக விஞ்ஞானம் என்பதும் அறிவு தேடல் என்பதும் வேண்டாம் என்பது அர்த்தமல்ல. எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருப்பது தான் சரி என்ற மனோபாவம் தவறு என்பதே. சொல்ல போனால் விஞ்ஞானம் என்பதே ஒரு வகை ஆன்மிகம் தான். மக்கள் கஷ்டம் தீர்க்க புறப்பொருளை நாடுவது விஞ்ஞானம்.  அகப்பொருளை தேடுவது மெய் ஞானம் ஆகும். சக்தி தான் சிவம், சிவன் தான் சக்தி.  இரண்டாக தெரிந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்கிறது ஆன்மிகம். பொருளும் பொருளின் சக்தியும் வேறு வேறானது அல்ல ஒன்று தான் என்கிறது அறிவியல். சொல்லும் முறையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர உள் கருத்து என்னவோ ஒன்று தான்.

    அறிவியல் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வதற்காக!
    ஆன்மிகம் என்பது என்ன தேவை என்பதை அறிவது அல்ல 
    தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக!

    கேட் தேர்விற்கு நேர மேலாண்மை அவசியம்!


    கேட் தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. முதலில் உங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவில் இருந்து பதிலை துவக்குங்கள், அதற்கு முன் கேள்வியை நன்கு படித்து பாருங்கள் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி மையங்கள் வழங்கும் ஏம்.பி.ஏ. படிப்பில் சேர நடத்தப்படும் இந்த காமன் அட்மிஷன் டெஸ்ட் (கேட்) அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. 3,000 மாணவ சேர்க்கை இடங்களுக்காக சுமார் 2,05,000 மாணவர்கள் கேட் தேர்வை எழுத உள்ளனர். புதிய தேர்வு முறையில் 2 தேர்வுகள் நடத்தப்படும். முதல் தேர்வில் குவான்டிடேட்டிவ் அபிலிடி மற்றும் டேட்டா இன்டர்பிரிடேஷன் பகுதிகள் அடங்கியிருக்கும். இரண்டாவது தேர்வில் வெர்பல் அபிலிடி மற்றும் லாஜிகல் ரீசனிங் பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இந்த தேர்வுகளில், ஒவ்வொரு பகுதிக்கும் என தனித்தனியாக நேரம் ஒதுக்கப்படும். அதாவது ஒரு தேர்வுக்கு 140 நிமிடங்கள் வழங்கப்படும். இதில் ஒரு பகுதிக்கு பதில்களை எழுதி முடிக்க 70 நிமிடம், அடுத்த பகுதிக்கு 70 நிமிடம் என பிரித்து வழங்கப்படும்.

    இதுவரை, மொத்தமாக 1.35 நிமிட நேரம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிடும், ஒன்றை எளிதாக முடிக்கும் மாணவர், அடுத்த பகுதிக்குச் சென்று அதிக நேரம் ஒதுக்கி அதை முடிக்க இயலும். ஆனால் தற்போதைய முறையில், ஒவ்வொரு பகுதிக்கும் என தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால், அனைத்து பாடப்பிரிவிலும் மாணவர்கள் திறமையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. ஒரு வேளை முதலில் நீங்கள் எடுக்கும் பகுதியை 70 நிமிடங்களுக்குள் முடித்துவிட்டாலும், அடுத்த பகுதியை எழுத முடியாது, 70 நிமிடம் முடிந்த பிறகே அடுத்த பகுதியை எழுதத் துவங்க வேண்டும். இது மாணவர்களை சற்று பாதிக்கும் விஷயமாகவே கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

    மேலும், நேர மேலாண்மை என்பதே இந்த நுழைவுத் தேர்வுக்கு அடிப்படையான ஒன்றாக அமைந்துள்ளது. உங்களுக்கு எந்த பகுதி எளிதாக வருமோ அதை முதலில் தேர்வு செய்யுங்கள். எந்த வொரு கேள்வியையும் நன்கு நிதானமாக படித்துப் பாருங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மாணவர் 2.3 நிமிடங்களை மட்டுமே செலவிட வேண்டும். அதிகபட்சமாக 2.5 நிமிடங்களில் பதிலை முடித்துவிட வேண்டும் என்று கல்வியாளர்கள் தேர்வெழுதவிருக்கும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

    ஏராளமான இணையதளங்கள், இலவச வினாத்தாள் மாதிரிகளை வெளியிட்டுள்ளன. அவற்றில் தேர்வெழுதி மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம். நேர மேலாண்மையையும் அப்போது கணக்கில் வைத்துக் கொள்ளலாம். பாடங்கள் எதுவும் மாற்றப்படவில்லை, நேரப் பங்கீடு மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நேர மேலாண்மையை கவனத்தில் கொண்டு பயிற்சி எடுத்தால் அதையும் எளிதாக செய்ய முடியும். வாழ்த்துக்கள். 

    சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வருகிற 20-ந் தேதி தொடங்கி, 23-ந் தேதி வரை!


    இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வருகிற 20-ந் தேதி தொடங்கி, 23-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. செவன்த் சேனல் கம்யூனிகேஷனும், தமிழ் திரைப்பட அகாடமியும் இணைந்து, சென்னையில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

    தொடக்க விழா 20-ந் தேதி காலை 11.30 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் நடக்கிறது. விழாவை, இயக்குநர் வசந்தபாலன் தொடங்கி வைக்கிறார். அதே தியேட்டரில், தினமும் 3 காட்சிகள் வீதம் சர்வதேச படங்கள் திரையிடப்படுகின்றன.

    அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 20 படங்கள், இந்த பட விழாவில் திரையிடப்படுகின்றன. விழாவில் ரஷ்யாவை சேர்ந்த லாரிகா டெலிகாட் என்ற பெண் இயக்குநரும் சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் குளோரியானாவும் கலந்துகொள்கிறார்கள். நிறைவு விழாவில், சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.

    கலிகாலம் 2 - தோழியை பழிவாங்க நிர்வாண படம் எடுத்த 4 பெண்கள் ஹரியானாவில்!




    தோழி ஒருவரை பழிவாங்க, அவரை நிர்வாணமாக படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் அவரது 4 தோழிகள். ஹரியானா மாநிலம், பஞ்சகுலா மாவட்டத்தில் ஒரு பெண்கள் விடுதி உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த விடுதியில் ஒரு அறையில் 2 முதல் 4 பெண்கள் தங்கி உள்ளனர். கடந்த மாதம் இங்கு தங்கியிருந்த சில பெண்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி, ஒருதரப்பை சேர்ந்த 4 பெண்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடத்தி சென்றனர்.

    காரில் காட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். முடிவாக அப்பெண்ணின் ஆடைகளை களைய செய்து, அவரது மொபைல் போனில் படம் பிடித்தனர். பல செக்ஸ் சில்மிஷங்களை செய்து கொடுமைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தை எம்.எம்.எஸ். மெசேஜாக மாற்றினர். நிர்வாணமாக்கப்பட்ட அந்த பெண்ணின் மொபைல் போனில் இருந்த சேமிக்கப்பட்ட மற்ற எண்களுக்கு அந்த வீடியோவை, எம்.எம்.எஸ்சாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்த போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்கு பதிய கூட இல்லை.

    பலருக்கு அனுப்பப்பட்ட இந்த வீடியோ தற்போது ஹரியானா மாநிலம் முழுவதும் பரவி உள்ளது. இந்த சம்பவத்தினால் பெரும் அவமானம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது தேசிய பெண்கள் அமைப்புகளின் உதவியை நாடியுள்ளார். இந்த சம்பவத்திற்கு தேசிய பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கை குறித்து வழக்கு தொடுத்துள்ள வழக்கறிஞர் பங்கச் சாண்கோதீயா என்பவர் கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதியாமல் விட்டுள்ளனர்.

    ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி படம் எடுத்து, மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் சைபர் கிரைம் குற்றமாகும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருங்காலங்களில் இதுபோன்ற சைபர் குற்றங்கள் அதிகரிக்கும், என்றார்.

    ஹோஸ்னி முபாரக் மகன்கள் ஸ்விஸ் வங்கியில் 340 மில்லியன் டாலர் பதுக்கியுள்ளதாக!


    முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மகன்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் 340 மில்லியன் டாலர் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்று அவர்களது சொத்துக்கள் குறித்து விசாரித்து வரும் குழுவைச் சேர்ந்த ஒரு தெரிவித்துள்ளார். எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் செய்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராடி, கடந்த பிப்ரவரி மாதம் அவரை ஆட்சியில் இருந்து நீக்கினர். அந்த போராட்டத்தில் 850க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். எகிப்தில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கும் நிலையில் முபாரக் அவரது மகன்கள் கமால், ஆலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகள் எகிப்தை ஆட்சி செய்த முபாரக் மற்றும் அவரது மகன் கமால், ஆலா மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விசாரணையின் போது எகிப்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி அசீம் எல்-ஹோகரி கூறியதாவது, சுவிட்சர்லாந்தில் முபாராக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 450 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை அந்நாடு முடக்கி வைத்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் முபாரக்கின் மகன்கள் 340 மில்லியன் டாலர் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அதில் 300 மில்லியன் டாலர் ஆலாவுக்கு சொந்தமானது. இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

    மேலும் முபராக் குடும்பத்தினருக்கு சொந்தமான பணம் ஹாங்காங், ஐக்கிய அரபு எமிட்ரெட்ஸ் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. முபாராக் குறித்து பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் தற்போது வெளியிட இயலாது. ஆனால் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும் என்றார்.

    அமெரிக்கா சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்!


     2 வயது குழந்தைகள் முதல் 92 வயது பெரியவர்கள் வரை பயன்படுத்துவதற்கு ஏதுவாக விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஹபி சைக்கிள் நிறுவனம். அமெரிக்காவை சேர்ந்த ஹபி சைக்கிள் நிறுவனம் சைக்கிள் தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. அமெரிக்கா தவிர 20 நாடுகளில் தனது சைக்கிள் மாடல்களை ஹபி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், 2 வயது குழந்தைகள் முதல் 92 வயது பெரியவர்கள் பயன்படுத்தும் வகையில் விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள் மாடல்களை இந்தியாவிவல் அறிமுகம் செய்துள்ளது ஹபி நிறுவனம். ஆக்ஷன் பைக்ஸ் நிறுவனத்தை தனது அதிகாரப்பூர்வ மொத்த விற்பனையாளராக நியமித்துள்ள ஹபி நிறுவனம் 15 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

     இதுகுறி்த்து ஆக்ஷன் பைக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் அக்ஷய் கபூர் கூறியதாவது: "ஹபி சைக்கிள்கள் தரத்திற்கு புகழ்பெற்றவை. இதேபோன்று, அவற்றின் விஷேசமான வடிவமைப்பும் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும். தற்போது 15 சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். ரூ.5,000 முதல் ரூ.14,500 விலையில் இவை விற்பனை செய்யப்படும். மேலும், நாடு முழுவதும் விற்பனை செய்வதற்கான சில்லறை வணிகர்கள் மற்றும் டீலர்களை நியமிக்கும் பணிகளை துவங்கியுள்ளோம்," என்றார்.

    கலிகாலம் இன்று...!


    முன்னெல்லாம் ஆண்கள் தன்னை காதலிக்காத பெண்ணை தேடி சென்று ஆசிட் விசும் கலாச்சாரம் இப்பொழுது பெண்கள் ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை என இந்த பெண் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தல்பிர் கவுர். இவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெயதீஷ்குமாரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஜெகதீஷ்குமார்û மற்றொரு பெண்ணை மணக்க முடிவு செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த காதலி தல்பிர்கவுர், ஜெகதீஷ்குமார் வீட்டிற்குச் சென்றார். தீடீரென அவர் மீது ஆசிட்டை வீசினார். இதில், ஜெகதீஷ்குமார்ன் முக்கிய உறுப்புகள் வெந்து விட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்தியப் பணவீக்கத்தை உயர்த்தும் சீனா!


    இந்தியாவுக்கான ஏற்றுமதிப் பொருள்களின் விலையை சீனா அதிகரித்துவிட்டதுதான் இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உயரக் காரணம் என பொருளாதார கொள்கை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்திய உற்பத்தி துறைக்கு தேவையான பொருட்களில் 25 சதவீதம் சீனாவிலிருந்தே இறக்குமதியாகிறது. மேலும் இந்தியாவில் விற்பனையாகும் 3ல் ஒரு பொருள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுதான். 

    இதை நன்கு உணர்ந்துள்ள சீனா, கடந்த ஆண்டு முதல் இந்தியாவுக்கான தனது ஏற்றுமதிகளின் விலையை 10 சதவீதம் வரை உயர்த்தி வந்துள்ளது. இறக்குமதி விலை அதிகரிப்பால் உள்நாட்டு தயாரிப்பிலும், நேரடி விற்பனையிலும் சீன பொருட்கள் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்துகின்றனர். 

    உணவு பணவீக்கம் அல்லாத மற்ற பொருட்கள் அடிப்படையிலான பணவீக்க உயர்வுக்கு சீனாவும் முக்கிய காரணமாக உள்ளது. அத்துடன், கடந்த 6 மாதங்களில் இந்திய ரூபாய்க்கு இணையாக சீன கரன்சி மதிப்பு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இறக்குமதி செலவு அதிகரிப்பு, தொழிலாளர் கூலி உயர்வு ஆகியவற்றால் இந்தியாவில் பொருட்கள் விலை உயர்ந்து பணவீக்க அதிகரிப்புக்கு காரணமாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டனில் நடந்த விஸ்பா டிரெட் ஸ்குவாஷ் தொடரில் இங்கிலாந்து வீராங்கனை சாரா ஜேன் பெர்ரியை வீழ்த்தி இந்தியாவின் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் சாம்பியன்!


    இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல், வாஷிங்டனில் நடந்த விஸ்பா டிரெட் ஸ்குவாஷ் தொடரில் இங்கிலாந்து வீராங்கனை சாரா ஜேன் பெர்ரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டியில் தீபிகா அபாரமாக ஆடி 11-9, 11-3, 11-7 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். போட்டி முழுவதும் தீபிகாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. ஒரு செட்டைக் கூட பறி கொடுக்காமல் அவர் வெற்றி பெற்றார். இது இந்த ஆண்டு அவர் பெறும் 2வது சாம்பியன் பட்டமாகும். 

    20 வயதான சென்னையைச் சேர்ந்த தீபிகா, கடந்த மாதம்தான், ஸ்குவாஷ் ரேங்கிங்கில், உலகின் 20 டாப் வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்தார். இந்த இடத்திற்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை தீபிகாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    10 தேமுதிக எம்.எல்.ஏக்களுடன் பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவுக்குத் தாவல்?


    தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும், பத்து கட்சி எம்.எல்.ஏக்களும் அதிமுகவுக்குத் தாவப் போவதாக ஒரு சூடான செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இவர்களை அதிமுகவுக்கு இழுக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இவர்கள் கட்சி மாறுவார்கள் என்றும் அந்த செய்தி கூறுகிறது. தமிழகத்தின் மூத்த அரசியல் வாதிகளில் ஒருவர் பண்ருட்டி ராமச்சந்திரன். எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி. ஆரம்பத்தில் திமுகவில் முக்கியப் புள்ளியாக விளங்கியவர். பின்னர் எம்ஜிஆருடன் இணைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் பாமகவில் சேர்ந்து அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் விஜயகாந்த் பக்கம் சேர்ந்து தேமுதிகவில் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 6 முறை பண்ருட்டி தொகுதியிலிருந்து உறுப்பினராக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது சென்னை ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

    விஜயகாந்த் ரசிகர் கூட்டத்தை ஒரு அரசியல் சக்தியாக மாற்றியமைத்து, திட்டமிட்டு தெளிவாக்கியதில் பண்ருட்டியாருக்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும் கூட்டணி அரசியலுக்கு தேமுதிகவை திருப்பி விட்டதிலும் பண்ருட்டியாருக்கு முக்கியப் பங்கு உண்டு. இவரது ஆலோசனையின் பேரில்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு விஜயகாந்த் வந்தார் என்று கூறப்படுகிறது.

    ஆனால் கூட்டணியை அமைத்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா சீட் கொடுப்பதில் திடீரென ஜகா வாங்கியதால் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தார் விஜயகாந்த். இதையடுத்து தனது கோபத்தை பண்ருட்டியார் மீது அவர் காட்டியதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. இதனால் மனம் உடைந்தார் பண்ருட்டியார் என்றும் கூறப்பட்டது. மேலும் பண்ருட்டியார் கேட்ட பண்ருட்டியைத் தராமல், ஆலந்தூர் தொகுதியை விஜயகாந்த் கொடுத்ததால் மேலும் அப்செட் ஆனாராம் பண்ருட்டி ராமச்சந்திரன். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலி்ல் ஜெயலலிதா தேமுதிகவை முற்றிலும் புறக்கணித்து புறம் தள்ளி விட்டதால் விஜயகாந்த் மேலும் அப்செட் ஆகி, பண்ருட்டியாரை பிரசாரத்திற்குக் கூட அழைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பண்ருட்டி ராமச்சந்திரனை உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் எங்குமே காண முடியவில்லை. மேலும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கூட அவரைக் காண முடியவில்லை. 

    இதையடுத்தே பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவுக்கு இழுக்கும் வேலைகள் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட ஒரு குழுவே இதற்காக நியமிக்கப்பட்டு அதற்கான வேலையில் இறங்கியதாம். பண்ருட்டியாரை மட்டும் அல்லாமல் சில எம்.எல்.ஏக்களையும் இழுக்க இக்குழு வேலையில் ஈடுபட்டதாம். இதன் விளைவாக தற்போது பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையி்ல 10 எம்.எல்.ஏக்களை வெற்றிகரமாக மாற்றி விட்டதாக பரபரப்புத் தகவல்கள் கூறுகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மொத்தம் 29 எம்.எல்.ஏக்கள் தேமுதிகவுக்கு உள்ளனர். இவர்களில் 10 பேர் அணி மாறி வருவதால் கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என்று கூறப்படுகிறது. ஒருவேளை இது நடந்தால் சட்டசபையில் தேமுதிக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்து விடும். திமுக எதிர்க்கட்சியாகி விடும். எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் உருவெடுப்பார்.

    இது குறித்து தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது , திமுக, அதிமுக ஆகி்ய கட்சிகளுக்கு மாற்றுக் கட்சி தேமுதிக தான். இந்த தேர்தலில் நடுநிலையான வாக்காளர்கள் ஓட்டு எல்லாம் தேமுதிகவிற்கே சென்றது. இதை எல்லாம் சகிக்க முடியாத சில அரசியல் சக்திகள் வதந்திகளை கண் காது வைத்து கதை கட்டி விடுகின்றது. பண்ருட்டியார் முதல் எல்லா சட்ட மன்ற உறுப்பினர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கேப்டன் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்துள்ளனர். தேமுதிக ஒரு எக்கு கோட்டை. இங்கு சிறு ஓட்டைக்கும் இடம் இல்லை. இது போன்ற சலசலப்புக்கு எல்லாம் தேமுதிக அஞ்சாது என்கின்றனர். 

    இதற்கிடையே பண்ருட்டியாரின் அதிருப்திக்கு மேலும் ஒரு காரணத்தைக் கூறுகின்றனர். அதாவது தனது மகனுக்கு தேமுதிகவில் முக்கிய்ப பொறுப்பு தர வேண்டும் என்று கேட்டாராம் ராமச்சந்திரன். ஆனால் அதை விஜயகாந்த் நிராகரித்து விட்டாராம். இதனால்தான் அவர் கடும் அதிருப்தி அடைந்ததாக அந்தத் தகவல் கூறுகிறது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் - இது அதிமுகவுடன் கூட்டணி அமையுமா என்று சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்ன பதில்.

    ரூ. 300 கோடிக்கு 80 அதிவேகப் படகுகளை இலங்கையிடம் வாங்கும் இந்திய கடற்படை!


    இந்திய கடற்படைக்கு இலங்கையைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து ரூ. 300 கோடிக்கு 80 அதிவேக படகுகள் வாங்கப்படவுள்ளன. மும்பையில் கடல் மார்க்கமாக ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து Sagar Prahari Bal என்ற புதிய கடலோர கண்காணிப்புப் பிரிவை கடற்படை உருவாக்கியுள்ளது.

    இந்தப் படைக்குத் தான் இலங்கையிடம் அதிவேக படகுகள் வாங்கப்படவுள்ளன. இலங்கையைச் சேர்ந்த SOLAS Marine என்ற நிறுவனத்துக்கு இதற்காக ரூ. 300 கோடி ஆர்டரை இந்தியா தந்துள்ளது. 3 வாரங்களுக்கு முன் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 80 படகுகளையும் இந்த நிறுவனம் கடற்படையிடம் வழங்கும்.

    ஜூன் மாதத்தில் இதற்காக சர்வதேச டெண்டர்கள் கோரப்பட்டு இலங்கையின் SOLAS Marine நிறுவனத்தை கடற்படை தேர்வு செய்தது. இதற்கு முன் Sagar Prahari Bal பிரிவுக்கு பிரான்சிடமிருந்து அதிவேகப் படகுகள் வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரகாஷ் ராஜின் புதிய படத்தில் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணி நடிக்கிறார்!


    பிரகாஷ் ராஜின் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பெயரே டோணி என்றுதான் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குபவரும் பிரகாஷ் ராஜ்தான். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:

    குழந்தைகள் மனநிலையை மையப்படுத்தி டோனி படம் தயாராகிறது. தேர்வுக்காக குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றனர். பெற்றோரும் அவர்களை அதிக மதிப்பெண் பெற நிர்ப்பந்திக்கின்றனர்.  குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டுவரும் கல்விமுறை நம்மிடம் இல்லை. குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது. சமூகத்துக்கு இப்படம் சில கருத்துக்களை சொல்லும். ஆகாஷ், ராதிகாஆப்தே, தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர்.

    கே.பி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். பிரபுதேவா எனக்கு நெருங்கிய நண்பர். அவர் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். ஒரு பாடல் காட்சியில் வருகிறார். இந்த வருடம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார். இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் டோணியும் கவுரவ தோற்றத்தில் தோன்றப் போகிறாராம். இதுகுறித்து பிரகாஷ்ராஜிடம் கேட்டபோது, படத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதை பின்னர் சொல்கிறேன் என்று கூறினார். ஏற்கெனவே சினிமா மற்றும் விளம்பரங்களில் தோன்றியுள்ளார் டோணி என்பது குறிப்பிடத்தக்கது.

    டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் வங்கி லாக்கர்களில் புதையல்!


    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களில் சிலரின் வங்கி லாக்கர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அவற்றை லஞ்ச ஒழிப்பு்ப போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் மீதும் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்ததாகவும், தேர்வுகளில் பல முறைகேடுகளைச் செய்ததாகவும் புகார்கள் குவிந்தன. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று 14 பேரின் வீடுகளிலும், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வீடுகளிலிருந்து கத்தை கத்தையாக பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலும் பல கோப்புகள் சிக்கின.

    வீடுகளில் நடத்திய சோதனையின்போது சில உறுப்பினர்களுக்கு வங்கிகளில் லாக்கர்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றின் சாவிகளை போலீஸார் கைப்பற்றினர். இதில் ரவி என்ற உறுப்பினரின் லாக்கர் இன்று திறந்து சோதனையிடப்பட்டது. இவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சக்தி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் லாக்கர் உள்ளது. அங்கு இன்று பிற்பகல் சென்ற அதிகாரிகள் குழு ரவி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டது. அதில் என்ன சிக்கியது என்பது தெரியவில்லை.

    மற்றவர்களின் லாக்கர்களையும் திறந்து பார்க்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆய்வுக்குப் பின்னர் இதுகுறித்த விரிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் தமிழக அரசிடம் வழங்கப்படும். அதன் பின்னர் 14 பேரையும் நேரில் வரவழைத்து விசாரித்து தேவைப்பட்டால் கைது நடவடிக்கையை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

    போட்ஸ்வானா விமானம் விபத்தில் 8 பேர் பலி


    ஆப்பிரிக்க நாடுகளின் தென் பகுதியில் உள்ள போட்ஸ்வானாவில் 12 பேர் பயணித்த குட்டி விமானம் ஒன்று நடுவானில் வெடித்து சிதறியதில் 8 பேர் பலியாகினர். ஆப்பிரிக்க நாடான போஸ்வானா நாட்டின் வடபகுதியில் உள்ள ஷாகானாகா விமான தளத்தில் இருந்து மெரீமி ஏர் என்ற நிறவனத்திற்கு சொந்தமான குட்டிவிமானம் ஒன்று அருகில் உள்ள போம்போம் தீவை நோக்கி புறப்பட்டது. இயற்கை செழிப்புமிக்க போம்போம் தீவில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க குட்டி விமானங்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    வழியில் ஓகாவான்கோ என்ற டெல்டா பகுதியில் சென்ற போது, விமானம் திடீரென நடுவானில் வெடித்து சிதறியது. இதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விமான பைலட், 3 பிரான்ஸ் பெண்கள், 2 சுவீடனை சேர்ந்த 3 பேர், இங்கிலாந்து நாட்டவர் ஒருவர் என மொத்தம் 8 பேர் இந்த விபத்தில் பலியாகினர். படுகாயத்துடன் உயிர்தப்பிய 4 பேரை, மீட்பு விமானம் மூலம் ஜோகன்ஸ்பெர்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்தில் பலியான இங்கிலாந்தை சேர்ந்த விமானி 12,000 மணிநேரங்கள் விமானத்தை இயக்கி அனுபவம் கொண்டவர் என மெரீமி ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த விபத்து குறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது, விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத வகையில் கருகி போயுள்ளன. டி.என்.ஏ. சோதனை மூலமே அவர்களை அடையாளம் காண முடியும். மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு விபத்து நடந்த இடத்திற்கு வருவது அவ்வளவு எளிதல்ல, என்றார்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...