இந்திய கடற்படைக்கு இலங்கையைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து ரூ. 300 கோடிக்கு 80 அதிவேக படகுகள் வாங்கப்படவுள்ளன. மும்பையில்
கடல் மார்க்கமாக ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து Sagar
Prahari Bal என்ற புதிய கடலோர கண்காணிப்புப் பிரிவை கடற்படை
உருவாக்கியுள்ளது.
இந்தப் படைக்குத் தான் இலங்கையிடம் அதிவேக
படகுகள் வாங்கப்படவுள்ளன. இலங்கையைச் சேர்ந்த SOLAS Marine என்ற
நிறுவனத்துக்கு இதற்காக ரூ. 300 கோடி ஆர்டரை இந்தியா தந்துள்ளது. 3
வாரங்களுக்கு முன் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த 3
ஆண்டுகளில் 80 படகுகளையும் இந்த நிறுவனம் கடற்படையிடம் வழங்கும்.
ஜூன்
மாதத்தில் இதற்காக சர்வதேச டெண்டர்கள் கோரப்பட்டு இலங்கையின் SOLAS
Marine நிறுவனத்தை கடற்படை தேர்வு செய்தது. இதற்கு முன் Sagar Prahari Bal
பிரிவுக்கு பிரான்சிடமிருந்து அதிவேகப் படகுகள் வாங்கப்பட்டன என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment