|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 October, 2011

ஆன்லைனில் இந்திய தூதரகத்தில் பதிவு செய்க சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள் !


சவூதி அரேபியாவுக்கான புதிய இந்திய தூதராக பதவியேற்ற ஹமீத் அலி ராவ் அவர்களுக்கு சவூதி வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த 20ம் தேதி வரவேற்பு விழா நடத்தப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியில் தூதுரக அதிகாரிகள், 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர். ப்போது பேசிய ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. இம்தியாஸ் கூறியதாவது,சவூதி அரேபியாவில் 21 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள். அவர்கள் ஏஜென்சிகளால் ஏமாற்றப்படுகிறார்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். பெரும்பாலன நேரங்களில் அவர்களின் நிறுவனத்தினரினாலேயே ஏமாற்றப்படுகிறார்கள், அவர்களுக்கு தூதரகம் உரிய உதவிகள் செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் நோக்கில் இந்திய தூதரகத்தின் சமுதாய நலப்பிரிவில் கூடுதல் ஆட்களை பணியமர்த்த வேண்டும்.சவூதி அரேபியாவில் இந்திய தூதுரகத்தின் சார்பில் நடக்கும் பள்ளிகளின் வருட வாடகை சுமார் 20 முதல் 25 மில்லியனாக உள்ளது. ஒவ்வொரு முறை ஒப்பந்தம் முடியும் பொழுதும் கட்டிட உரிமையாளர்கள் உயர்த்தும் வாடகையால் பள்ளிகளின் நிர்வாகம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றது. எனவே, தூதர் அவர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் சமுதாய ஆர்வலர்களையும் சேர்த்து ஒரு குழு அமைத்து அரசாங்க கடனுதவியுடன் முதல் கட்டமாக மூன்று முக்கிய பிராந்தியங்களிலும் நமக்குச் சொந்தமான பள்ளிக் கட்டிடத்தை கட்டுவதற்கு ஆவண செய்ய வேண்டும்.சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று அவர்களின் பிள்ளைகளின் மேல்படிப்பு. பிள்ளைகளின் படிப்பு காரணமாக ஆண்கள் இங்கு வேலை செய்வதும், குடும்பம் இந்தியாவில் தனித்து இருப்பதுமாக அவதியுற நேர்கிறது. இதனை மனதில் கொண்டு தூதர் அவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு இந்தியக் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் சவூதி அரேபியாவில் மேல்படிப்பு படிப்பதற்குண்டான கல்லூரிகள் தொடங்க ஆவண செய்ய வேண்டும் என்றார்.மேலும் பலரும் கோரிக்கைகளுடன் தூதுவரை வாழ்த்தினார்கள். இதற்கு ஏற்புரை வழங்கிய இந்திய தூதர் ஹமீத் அலி ராவ் அனைவரின் கோரிக்கைகளையும் உரிய முறையில் பரிசீலிப்பதாக வாக்குறுதியளித்தார்.மேலும், சவூதி அரேபியாவில் வாழும் இந்தியர்கள் தங்களை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளும்படியும் அதற்காக தூதரகம் http://www.indianembassy.org.sa என்ற இணையதளத்தில் வசதிகள் செய்துள்ளதாகவும் அறிவித்தார்.மேலும் அவர் கூறும்பொழுது இந்தியா-சவூதி இருவழி வர்த்தகம் கடந்த வருடம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டதாகவும், கடந்த 15 வருடங்களாக இந்தியாவின் எண்ணெய்த் தேவையை 20 சதவீதம் சவூதி அரேபியா பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார். சவூதி அரேபியாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 4 பில்லியன் டாலராக உள்ளதாகவும், இந்தியா சவூதி அரேபியாவின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பதாக தெரிவித்த அவர் இந்தியர்களின் முதலீடு 2 பில்லியன் டாலராக உள்ளது என்றும் தெரிவித்தார்.இந்தியர்களின் கண்ணியமும், கடின உழைப்பும், சட்டத்தை மதிக்கும் தன்மையும் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் மதிப்பை பெற்றுத் தந்துள்ளது என்றும் கூறினார்.நிகழ்ச்சியின் இறுதியில் தூதர் அவர்கள் அங்கு கூடியிருந்த அனைத்து இந்தியர்களையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டது இந்தியர்களின் மனதில் மக்களுக்காக அமர்த்தப்பட்ட தூதுவர் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது.

நடிகை ப்ரிடா பிண்டோவுக்கு விளம்பரப்படத்தில் நடிகக்க ரூ.35 கோடி!


இளம் நடிகையான ப்ரிடா பிண்டோ ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகையாக உருவாகி உள்ளார். இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சர்வதேச பேஷன் நிறுவனத்தின் விளம்பர மாடலாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்காக அவருக்கு 7 மில்லியன் டாலர்கள் தொகை தரப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது ரூ.35 கோடியாகும். இரண்டாண்டுக்கு அவர் அந்நிறுவனத்தின் விளம்பர மாடலாக இருப்பார். விளம்பரத்திற்காக அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகை எனும் சிறப்பை இதன் மூலம் ப்ரிடா பெறுகிறார். அவரது மேலாளரும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்

இனியாவது திராவிடக் கட்சிகள் காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைக்குமா!

நாங்கள் இல்லாவிட்டால் ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது, எதையும் செய்ய முடியாது என்று வாய் கிழியப் பேசி வந்த காங்கிரஸாருக்கு இப்போது உள்ளாட்சித் தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம். காமராஜரோடு காங்கிரஸ் கரையறி விட்டது என்பதை மக்கள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர் தேர்தல் முடிவு மூலம்.

தமிழகத்தில் ஓசியிலேயே உடம்பேற்றி வந்த ஒரே கட்சி எது என்றால் அது காங்கிரஸ்தான் என்பதை கருவில் இருக்கும் சிசு கூட கரெக்டாக சொல்லி விடும். ஆனால் இதை காங்கிரஸார் மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மாறாக, நாங்கள் யாருடன் இருக்கிறோமோ அவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் ஆதரவு தரும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி வருவார்கள்.

ஆனால் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாகி விட்டது தமிழக காங்கிரஸின் நிலை. ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பிடிக்கத் திராணியில்லாத கட்சியாக கிழிந்த வேட்டி போல காட்சி தருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது இதுவரை நடந்திராத ஒன்று என்றே கூறலாம். காரணம், திமுக அல்லது அதிமுக என யாருடைய முதுகிலாவது ஏறி, ஓசி சவாரி செய்வதுதான் அந்தக் கட்சிக்கு வசதியானதாக இருந்தது. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கதர்ச் சட்டை கசங்காமல் பாலிட்டிக்ஸ் செய்து பழக்கப்பட்டவர்கள் காங்கிரஸார் (காங்கிரஸார் என்று இங்கு நாம் கூறுவது தலைவர்களை -தொண்டர்களை அல்ல).

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி, கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்று கூறிக் கூறியே வேண்டிய சீட்களைப் பெற்று ஓசி பலத்தில் ஊறுகாய் போட்டு வந்தவர்கள் இவர்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில், திமுகவிடம், 2ஜி விவகாரத்தைக் காட்டிக் காட்டியே சீட் கறந்த காங்கிரஸின் பிடிவாதப் பேரத்தைப் பார்த்து மாற்றுக் கட்சியினரும் கூட கொந்தளித்துப் போனார்கள். இப்படி நீ சோறு கொடு, நீ குழம்பு கொடு, நான் உட்கார்ந்து சாப்பிடுகிறேன் கதையாக படு சோம்பேறித்தனமாக அரசியல் செய்துவந்த காங்கிரஸ் இன்று உள்ளாட்சித் தேர்தலில் தலை முதல் பாதம் வரை படு அடியை வாங்கி பம்மிப் போய்க் கிடக்கிறது.

இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம் என்பதைமக்கள் காட்டி விட்டார்கள். பத்து மாநகராட்சிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட 2வது இடத்தைப் பிடிக்கவில்லை. பல இடங்களில் 3வது இடத்தைக் கூடப் பி்டிக்கவில்லை. மொத்தமே 17 கவுன்சிலர்கள்தான் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளனர். அதை விடக் கேவலமாக கொடிகாத்த குமரனைத் தந்த திருப்பூரில் ஒரு கவுன்சிலர் கூட காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. இது நிஜமான காங்கிரஸாருக்கு பெரும் வேதனை தரும் செய்தியாகும். காங்கிரஸுக்கென்று ஒரு தொண்டர் வட்டம் உள்ள மதுரையிலும் முட்டைதான். சேலத்திலும் ஒன்றும் இல்லை.

அதே போல 125 நகராட்சிகளில் தேர்தல் நடந்த 124 நகராட்சிகளில் ஒரு இடத்தில் கூட தலைவர் பதவியைப் பிடிக்கவில்லை காங்கிரஸ். காங்கிரஸின் பாரம்பரியப் பகுதிகளான ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் கூட அந்தக் கட்சியால் தனித்து வெல்ல முடியாமல் போனது கேவலத்திலும் படு கேவலமாகும். சரி பேரூராட்சியிலாவது ஏதாவது பெயருமா என்று பார்த்தால் மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி கிடைத்துள்ளது. இப்படி எங்குமே காங்கிரஸுக்கு சிறப்பு கிடைக்கவில்லை. மாறாக போன இடங்களில் எல்லாம் மக்களிடமிருந்து பட்டை நாமம்தான் கிடைத்துள்ளது.

வாழ்ந்தால் வாழை மரம் போல வாழ வேண்டும் என்பார்கள். வாழை மரத்தில்தான் அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படும். ஆனால் காங்கிரஸோ, பார்த்தீனியம் செடி போலத்தான் இத்தனை நாளாக இருந்துள்ளது. அதாவது மற்ற கட்சிகளின் பலத்தைப் பெற்று இது வாழ்ந்து வந்துள்ளது. இந்த கட்சியால் எந்தக் கட்சிக்கும் உண்மையில் லாபம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கூட காங்கிரஸார் உண்மையில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதை காங்கிரஸாரே ஒத்துக் கொள்வார்கள். இந்தத் தேர்தலின் மூ்லம் திராவிடக் கட்சிகளான திமுகவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி கிடைத்துள்ள முக்கியப் பாடம் என்னவென்றால் -இத்தனை காலமாக, அடிப்படையே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான இடம் கொடுத்து வி்ட்டோம் என்பதுதான்.

தமிழர்கள் பாடுபட்டபோதெல்லாம், பரிதவித்த போதெல்லாம், துடித்து துவண்டபோதெல்லாம், உயிரை இழந்து உருக்குலைந்து போனபோதெல்லாம் உதவாமல் போனதுதான் காங்கிரஸின் கை. தமிழகத்திலும் கூட தமிழகத்தின் எந்தப் பிரச்சினைக்கும் காங்கிரஸ் உதவிக்கு வந்ததில்லை. மாறாக தமிழகத்தின் பிரச்சினைகளிலெல்லாம் நழுவிப் போனது அல்லது இரட்டை வேடம் போட்டு ஏமாற்றியது. தமிழகத்தின் நதி நீர்ப் பிரச்சினையாகட்டும், வேறு எந்தப் பிரச்சினையாகட்டும் காங்கிரஸ் உதவியது என்பது வரலாற்றிலேயே கிடையாது. கூட்டணி சேர வேண்டும், கூட்டாஞ்சோறு ஆக்கி நாம் மட்டும் நாம் மட்டும் நன்றாக சாப்பிட வேண்டும். இதுதான் காங்கிரஸின் ஒரே குறிக்கோளாக இருந்தது.

இந்தப் படு தோல்வி இப்படியே நின்று விடக் கூடாது. பொறுப்பான, தமிழகத்திற்கு உதவக் கூடிய தமிழர்களுக்கு உறுதுணையான உண்மையான அரசியல் கட்சியாக காங்கிரஸ் மீண்டும் மாறும் வரை மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும். இதுதாம்ப்பா காங்கிரஸ் என்பதை மக்கள் காட்டி விட்டார்கள். இனியாவது திராவிடக் கட்சிகள் விழிப்புடன் இருந்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...