|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 August, 2011

உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது!

உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரை வைத்துள்ள துபாயின் புர்ஜ் கலிபாவை மிஞ்சும் வகையில், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 1000 மீட்டர் உயரத்தில், 160 மாடிகளுடன் கூடிய மகா பிரமாண்டமான கட்டிடம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது உலகிலேயே உயரமான கட்டிடம் என அழைக்கப்படுவது புர்ஜ் கலிபர் தான். மொத்தம் 822 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில், ஹோட்டல்கள், ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுப் போக்கு தளங்கள் என எண்ணற்ற வசதிகள் உள்ளன.

ஆனால், ஜெட்டாவில் தற்போது திட்டமிடப்பட்டுள்ள கட்டிடம் 1000 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். இதற்காக 2 சதுர மைல் பரப்பளவு இடம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கிங்டம் டவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை கட்டப் போவதாக, 2008ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் ஏற்பட்ட பொருளாதார சரிவு கட்டிடப் பணிகளுக்கு தடையாக அமைந்தது.

உலகப் பொருளாதாரம் சீ்ரடைந்துள்ள நிலையில், சிக்காகோ கட்டிடக் கலை நிபுணர் ஆபிரியன் ஸ்மித் மற்றும் கோர்டன் கில் ஆகியோரின் வடிவமைப்பில் வரும் 2016ம் ஆண்டிற்குள் கிங்டம் டவர் பணிகள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்திற்குள், பிரபல ஹோட்டல்கள், குடியிருப்புகள், சொகுசு அறைகள், அலுவலகங்கள் ஆகியவை அமையும் எனத் தெரிகிறது. கட்டிடத்தின் மொத்த கட்டுமான செலவாக, 20 பில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.முன்னதாக, இந்த கட்டிடத்தின் பணிகள் சவுதி அரேபியாவில் கட்டுமானப் பணிகளில் நிபுணரான இறந்த தீவிரவாதியான பின்லாடனின் நிறுவனமான சவுதி பின்லாடன் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி அஜீத்!

என் அப்பா அம்மாவுக்குப் பிறகு நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான், என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.

தனது மங்காத்தா படம் வெளிவரும் இந்த தருணத்தில் தொடர்ந்து நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார் அஜீத்.

இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்...

''பாலா, கௌதம் மேனன், விஷ்ணுவர்தன்னு தொடர்ந்து உங்களுக்கு இயக்குநர்களோட மோதல் இருந்துகிட்டே இருக்கே?'' ''நான் எப்பவுமே டைமை நம்புறவன். டைம் சரியா இருந்தா, எல்லாமே சரியா நடக்கும். அந்த நேரத்துல சில காரணங்களால் எங்களால் சேர்ந்து வொர்க் பண்ண முடியலை. மற்றபடி எங்களுக்குள் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால்... நிச்சயம் நடிப்பேன்!''

''ஏன் ரசிகர் மன்றங்களைக் கலைத்தீர்கள்?'' ''இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!''

''ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?'' ''கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால், என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான். அவர்கிட்ட என்ன பேசினேன்னு வெளில சொல்றது நாகரிகமா இருக்காது. ரஜினி சார் எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் என் விருப்பம்!''

''ஆட்சி மாற்றம் பற்றி..?'' ''என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்காச் செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது ரெகுலரான விஷயம்தானே? நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னு டைய சொந்த அரசியல் கருத்து களை வெளிப்படையாச் சொல்ல முடியாது. அப்புறம் என்னை 'இவங்க ஆள், அவங்க ஆள்’னு முத்திரைகுத்திடு வாங்க!''  -இவ்வாறு கூறியுள்ளார் அஜீத்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் மன்னர் சங்கிலியன் சிலை கையில் இருந்த வாள் அகற்றம்!

இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலையில் இருந்த வீரவாளை அகற்றியுள்ளது இலங்கை அரசு. இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலை யாழ்ப்பாணத்தில் நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. வீரவாளை உயர்த்தி பிடித்தப்படி சங்கிலியன் குதிரையில் பாய்ந்து செல்வது போன்று அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

இறுதிக்கட்டப் போருக்கு பிறகு தமிழர்கள் வாழும் வடக்கு, மற்றும் கிழக்கு பகுதிகள் சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள மன்னர் சங்கிலியன் சிலை அகற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தற்போது அந்த சிலையை அதே இடத்தில் வைத்துள்ளனர்.

இதை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார். ஆனால், சங்கிலியனின் சிலையின் வலது கையில் விண்ணை நோக்கி உயர்த்தி பிடித்து இருந்த வீரவாள் இல்லை. அதை இலங்கை அரசு அகற்றியுள்ளது.

மேலும் அவரது வலது கை மடக்கி வைக்கப்பட்ட நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்கிலிய மன்னன் சரணடைவது போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை. இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கிலியன் கையில் இருந்த வீரவாளைக் கண்டு பயந்த இலங்கை ராணுவம், சிங்கள அரசியல்வாதிகள், மந்திரிகள், யாழ்ப்பாண நகரபிதா, வட மாகாண அரசாங்க அதிபர், அமைச்சர் டக்ளஸ், அந்த வீரவாளை எடுத்து விட்டு புதிய சங்கிலியன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்கிறார்கள்.விடுதலை என்பது தமிழரின் ரத்தத்தோடு சேர்ந்தது, அந்த வாளை எடுத்து விட்டால், தமிழர்கள் சுதந்திரம், விடுதலைப் பாதையை மறந்து விடுவார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும்.

கடந்த தேர்தலில் பல இன்னலுக்கு இடையேயும் திருக்கோவிலில் இருந்து வல்வெட்டித்துறை வரை தமிழன் என்று கூறிக்கொண்டு தமிழ் இனத்தின் அழிவுக்கு துணையாக இருந்த டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்களை தூக்கி எறிந்து விட்டு, அவர்களுடன் இருந்த சிங்கள அரசியல்வாதிகளையும் தூக்கி எறிந்து விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எமது மக்கள் வாக்களித்து இருந்தார்கள். அந்த வாக்களிப்பு தமிழ் மக்கள் இன்றும் தமிழரின் வாழ்வு தமிழ் மக்களின் கையில் என்று வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள்.

விடுதலைதான் தமிழ் மக்கள் அமைதியாக சுதந்திரமாக வாழ ஒரே முடிவு என்று சிந்தித்து அவர்கள் வாழ்கிறார்கள். இன்று சங்கிலியன் வாளை அப்புறப்படுத்தலாம், பண்டாரவன்னியன் நினைவுச் சின்னத்தை அப்புறப்படுத்தலாம், எமது மாவீரர் உறங்கும் நினைவாலயங்கள் மேல் ராணுவ முகாம் அமைக்கலாம்,

சிங்கள ராணுவ அகங்கார வெற்றிச்சின்னங்களைக் கட்டலாம், புத்த விகாரைகள் கட்டலாம், ஆனால் அந்த கல்லறைகள் ஒவ்வொரு தாயின் வீரக்கண்ணீரும், மாவீரரின் வீர ரத்தமும் சிந்திய மண், தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக காலம் காலமாக விடுதலைக்கு செய்த தியாகம், அவர்கள் உறங்கு நிலையில் இருந்து எழுந்து வரும்போது தமிழீழம் பிறக்கும். சங்கிலியன் சிலையில் வாளை அகற்றியது சிங்களவன் தமிழ் மேல் இருக்கும் பயத்தைதான் காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

உலகின் டாப் 10 பயங்கர தாக்குதல்கள்-மும்பை தீவிரவாத தாக்குதலும் இடம் பிடித்தது!

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உட்பட உலகில் நடந்த முக்கியமான 10 தீவிரவாத தாக்குதல்களை கொண்ட பட்டியல் ஒன்றை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.

கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி, 10 பேர் அடங்கிய தீவிரவாதிகள் கும்பல் மும்பை மீது தாக்குதல் நடத்தியது. மும்பையின் முக்கிய பகுதியில் நடந்த இத்தாக்குதலில், மருத்துவமனை, ரயில் நிலையம், பஸ் நிலையம், ஹோட்டல் என பல இடங்களில் 166 பேர் பலியாகினர். இதில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் பிடிபட்டான்.

இந்த சம்பவத்தை, உலகில் நடந்த 10 முக்கிய தீவிரவாத தாக்குதல்கள் அடங்கிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ மையமான பென்டகன் தயாரித்துள்ள இந்த பட்டியலில், மும்பை தாக்குதலுக்கு பின், தீவிரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை அதிநவீனமாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் துவங்கிய பின்னர் அதை எதிர்க் கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் வீண். முன் எச்சரிக்கையும், ஒருங்கிணைப்பு செயல்பாடும் பாதுகாப்பை அதிகரிக்கிறது என அந்த அந்த பட்டியல் எச்சரிக்கை விடுக்கிறது.

பென்டகனின் இந்த பட்டியலில், 2007ல் ஈராக்கில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல், 2001ல் அமெரிக்காவில் நடந்த ஆந்ராக்ஸ் தாக்குதல், 2007ல் நடந்த போர்ட் டிக்ஸ் தாக்குதல், 1995ல் நடந்த டோக்கியோ சுரங்கப் பாதை சரேய்ன் தாக்குதல் ஆகிய சம்பவங்களும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேடப்படும் குற்றவாளியான டக்ளஸை கைது செய்யாதது ஏன்?- மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதியான டக்ளஸ் தேவானந்தா இந்தியா வந்தபோது ஏன் கைது செய்யவில்லை என்று மத்திய அரசை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

சென்னையில் கடந்த 1986ம் ஆண்டு தங்கியிருந்த டக்ளஸ், நவம்பர் 1ம் தேதி சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தின்போது நான்கு பேர் காயமடந்தனர். இதில் கைதான டக்ளஸ் பி்ன்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், 1988ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பத்து வயது சிறுவன் ஒருவனைக் கடத்திய டக்ளஸ் ரூ. 7 லட்சம் பணம் கேட்டுமிரட்டினார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார்.

பிறகு 1989ம் ஆண்டு அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் இலங்கைக்கு ஓடி விட்டார். இதையடுத்து அவரை சென்னை கோர்ட் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்தப் பின்னணியில் கடந்த ஆண்டு டெல்லி வந்த ராஜபக்சேவுடன் சேர்ந்து டக்ளஸும் இந்தியா வந்தார். அவருக்கு மத்திய அரசு ராஜ வரவேற்பு அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங், டக்ளஸை வரவேற்று கை குலுக்கி மகிழ்ச்சியுடன் பேசினார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

மேலும் தேடப்படும் குற்றவாளியுடன் எப்படி பிரதமர் இப்படி விருந்துபசாரம் செய்து பாராட்டிப் பேசலாம் என்று மீடியாக்கள் கேள்வி கேட்டன.

இந்த நிலையில், டக்ளஸை நாடு கடத்தக் கோரி தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டெல்லிக்கு வந்தபோது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்த வார ராசி பலன் (5-8-2011 முதல் 11-8-2011 வரை)

மேஷம்:
பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் எளிதில் வெற்றிகரமாக முடியும். மனம் உற்சாகமாக இருக்கும். பண வரவு சீராக இருக்கும். சிலருக்கு வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டு.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

ரிஷபம்:
பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் கவனமாக இருக்கவும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடையக்கூடும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு.

மிதுனம்:
பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது.

பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. வீண் பேச்சைக் குறைக்கவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும்.

கடகம்:

பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். யாருக்கும் கடன் வாங்கிக் கொடுக்கவோ, வாக்கு கொடுக்கவோ வேண்டாம்.

பெண்களுக்கு: கணவரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வது நலம். ஆடை, ஆபரணம் வாங்கும் எண்ணத்தை தள்ளிப்போடவும். வேலை பார்ப்போருக்கு: பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பண வரவுக்கு குறைவிருக்காது. கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மம்:
பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக முடியும். மனதில் புது தெம்பு பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதாரம் படிப்படியாக முன்னேறும். வீண் செலவுகளைக் குறைக்கவும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். பண வரவு நன்றாக இருக்கும். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

கன்னி:
பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மனம் தெளிவாக இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை. கன்னிப் பெண்கள் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். சுப நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

துலாம்;
பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். கணவருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுப செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். குடும்பத்தாரிடம் பாராட்டு பெறக்கூடும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்:
பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசு வழியில் நன்மை உண்டு. பொருளாதாரம் மேம்படும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கடன் தொல்லைகள் தீரும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.

தனுசு: 
பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைத் தாண்டி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து மகிழ்விக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். பண வரவுக்கு குறைவிருக்காது. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

மகரம்:
பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்படச் செய்து முடிப்பீர்கள். ஆற்றல் அதிகரிக்கும். வருமானம் பல வழிகளில் வரும். மனதில் புது தெம்பு பிறக்கும். தெய்வ வழிபாடு செய்ய வெளியூர் செல்லக்கூடும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தாரிடம் பாராட்டு பெறக்கூடும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். மனம் அமைதியாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

கும்பம்:
பொது: நிம்மதியான வாரம். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சிலருக்கு வீடு அல்லது மனை வாங்கும் யோகம் உண்டு.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைக்கவும். எதிலும் நிதானம் தேவை.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்படச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்கும்.

மீனம்:
பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் சிறப்பாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. உடல் நலம் மேம்படும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். மனக் கவலைகள் மாறும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். உங்களைப் பற்றிய ரகசியங்களை அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கூற வேண்டாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 சதவீதமாக குறைவு !

குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், கடந்த 5 ஆண்டுகளில், கணிசமாகக் குறைந்துள்ளது. ஐ.நா., துணை அமைப்பான, "யுனிசெப்,' கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், 40 சதவீத பெண்களே, 6 மாதங்கள் வரை, தாய்ப் பால் கொடுக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆறு மாதங்கள் வரை, துணை உணவு இல்லாமல், தாய்ப் பால் மட்டுமே கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை, 20 சதவீதம் தான் என்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. "பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப் பால் சிறந்த மருந்து; தாய்ப் பால் கொடுப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அறிவுத் திறன் மேம்படுகிறது. இதனால், பிறந்த ஒரு மணி நேரத்துக்குள், தாய்ப் பால் கொடுப்பதால் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம், 20 சதவீதம் வரை குறைகிறது' என, பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தாய்ப் பால் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை, பெண்களிடம், குறிப்பாகக் கர்ப்பிணி பெண்களிடம் வலியுறுத்த, ஆகஸ்ட் முதல் வாரத்தை, தாய்ப் பால் வாரமாக கொண்டாட, ஐ.நா., சபை வேண்டுகோள் விடுத்தது. அன்று முதல், ஒவ்வொரு ஆண்டும், இந்தியா உள்ளிட்ட, 120 நாடுகளில், ஆகஸ்ட் முதல் வாரம், தாய்ப் பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப் பால் கொடுக்க வலியுறுத்தி, இந்த வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் பயனாக, தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், படிப்படியாக அதிகரித்தது. 1998ம் ஆண்டில் 50 சதவீதமாகவும், 2005ல் 55 சதவீதமாகவும் உயர்ந்தது. ஆனால், கடந்த ஆண்டு, "யுனிசெப்' நடத்திய ஆய்வில், தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், 40 சதவீதமாகக் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயச்சந்திரன், இது குறித்து கூறும்போது, ""வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, கூட்டுக் குடும்பம் குறைந்து, தனிக் குடும்பங்கள் பெருகி வருவது ஆகியவையே, தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம் குறைந்ததற்கு முக்கியக் காரணம். ஆறு மாதங்கள் வரை தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதால் தான், அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை, முதல்வர் ஜெயலலிதா 6 மாதமாக உயர்த்தியுள்ளார் ,'' என்றார்.

அரசு குழந்தைகள் மருத்துவமனை கூடுதல் பேராசிரியர் ரமா சந்திரமோகன் கூறியதாவது: பெரும்பாலான பெண்கள், முதல் 3 மாதங்களுக்கு, தாய்ப் பால் கொடுப்பதை நிறுத்துவது கிடையாது. ஆனால், பிறந்த வீட்டிலிருந்து கணவன் வீட்டுக்குச் சென்றதும் வீட்டு வேலைகள், கணவரை கவனிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால், தாய்ப் பால் கொடுக்க நேரம் குறைந்து விடுகிறது. தாய்ப் பால் கொடுப்பதற்கு மாமியார், கணவரின் ஆதரவு அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்கள், பல மணி நேரம் பால் கொடுக்காமல் இருப்பதால், பால் சுரப்பு குறைந்து விடும். இதனால் நாளடைவில் பால் கொடுப்பதும் நின்றுவிடும். அரசு ஊழியர்களைப் போன்று, தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், 6 மாதங்கள், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் ஸ்ரீகலா கூறியதாவது: குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாது என, எந்தத் தாயும் நினைப்பதில்லை. ஆனால், அவர்களுக்கு சரியாக வழிகாட்டுவதில்லை. குழந்தை பிறந்த முதல், 3 நாள்கள் மிக முக்கியம். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில், பால் கொடுக்க வேண்டும். துவக்கத்தில் பால் அதிகம் சுரக்காது. இதனால், பல பெண்கள், குழந்தைக்குப் பால் போதாது என நினைத்து, புட்டிப் பாலை நாடுகின்றனர். துவக்கத்தில் பால் குறைவாக சுரந்தாலும் தொடர்ந்து கொடுக்கும்போது பால் சுரப்பது அதிகரிக்கும்.

உலக ஹிரோஷிமா தினம்!

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக., 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இதன் நினைவுநாள், ஒவ்வொரு ஆண்டும் ஆக.6ம் தேதி (இன்று) "உலக ஹிரோஷிமா தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தின் போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது, அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இத்தாக்குதல்களால் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

அணுகுண்டின் ஆரம்பம் : “லிட்டில் பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த "பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது, அப்பகுதியில் 4 சதுர மைல் அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3 லட்சத்து 50 ஆயிரம். ஏறத்தாழ 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் இறந்தனர். கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். (இதன் பாதிப்பு இன்றும் தொடர்கிறது) குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார் (அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா இதனை செய்தது எனவும் கூறப்படுகிறது). இதன் பிறகே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது, உலக நாடுகளுக்கு தெரியவந்தது.

மீண்டும் தாக்குதல் : மூன்று நாட்கள் கழித்து ஆக., 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது "பேட்மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இந்த தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. இதையடுத்து 6 நாட்கள் கழித்து, 1945 ஆக., 15ம் தேதி ஜப்பான் சரணடைவதாக ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. போரில் அணுஆயுதம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதலும், கடைசியாகவும் அமைந்தது. அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த 2 நகரங்களும், அந்த சுவடே தெரியாத அளவுக்கு தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்தது, அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

சன் குழும கேபிள் 'டிவி'நிறுவனங்களில் ரெய்டு !


இதே நாள்...


  • ஹிரோஷிமா அணுகுண்டு தாக்கு‌தல் நினைவு தினம்
  •  ஜமைக்கா விடுதலை தினம்(1962)
  •  பொலீவியா விடுதலை தினம்(1825)
  •  கியூபா புரட்சி தினம்(1960)
  •  உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ் லீ வெளியிட்டார்(1991)
  • தமிழகத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்!


    தமிழகத்தில் புதிதாக 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் துவக்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. தமிழக அரசு கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் தற்போது 62 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. நடப்புக் கல்வியாண்டில் மேலும் 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 2 சீருடைகளும், ஒரு செட் காலணியும் இலவசமாக வழங்கப்படும்.

    உயர்தொழில்நுட்பங்களில் இளைஞர்களைப் பயிற்றுவிக்க, தனியார் பங்கேற்புடன் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி மையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு !

    கடந்த 5 வாரங்களுக்கு பிறகு இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.44.79 ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் யூரோவின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும், இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காணப்படும் கடுமையான சரிவும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததற்கு முக்கிய காரணம் னெ சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  

    டாஸ்மாக்கில் எதிர்பார்க்கும் வருவாய் - ரூ.1,78,10,00,00,000....???

    டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம், ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரியாக, இந்த ஆண்டு, 17 ஆயிரத்து, 810 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். மத்திய அரசு அனுமதித்துள்ள தொகையை விட குறைவான தொகையே தமிழக அரசு கடனாக பெற உள்ளது,'' என, நிதித்துறை செயலர் சண்முகம் தெரிவித்தார்.

    தமிழக அரசின் பட்ஜெட் குறித்து, நிதித்துறைச் செயலர் சண்முகம் மற்றும் நிதித்துறை அதிகாரிகள், நிருபர்களிடம் கூறியதாவது: திருத்தப்பட்ட வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில், வருவாய் வரவுகள், 85 ஆயிரத்து, 685 கோடி ரூபாயாகவும், வருவாய் செலவுகள், 85 ஆயிரத்து, 511 கோடி ரூபாயாகவும் இருக்கும். வருவாய் பற்றாக்குறை நீங்கி, 173 கோடி ரூபாய் உபரி வருவாய் இருக்கும். நிதிப் பற்றாக்குறை, 16 ஆயிரத்து, 880 கோடி ரூபாயாக இருக்கும். இந்த பட்ஜெட்டில், பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 8,900 கோடி ரூபாய் செலவாகும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை பொறுத்தவரை, ஏற்கனவே உள்ள திட்டத்துக்காக, 150 கோடி ரூபாயும், அதை நிறுத்தியதால், அடுத்த திட்டம் துவங்கும் வரை இடைக்கால செலவுக்காக, 100 கோடி ரூபாயும், புதிய திட்டத்தை செயல்படுத்த, 150 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பின், அதன் பிரிமியத் தொகையை பொறுத்து, நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். தமிழக அரசுக்கு இந்த ஆண்டு இறுதியில், ஒட்டுமொத்த கடன், 1 லட்சத்து, 18 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும். தாமதமின்றி கடன் திருப்பிச் செலுத்துதல், வட்டி செலுத்துதல் போன்றவற்றை, தமிழகம் சரியாக செய்து வருகிறது. இந்தியாவிலேயே குறைந்த கடன் பெற்றுள்ள மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. "டாஸ்மாக்' மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை மூலம் இந்த ஆண்டு, 10 ஆயிரத்து, 191 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கான விற்பனை வரியை பொறுத்தவரை, 7,755 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மதுபானங்கள் விற்பனை மூலம், அரசுக்கு, 17 ஆயிரத்து, 810 கோடி ரூபாய் கிடைக்கும். கடந்த ஆண்டு, 14 ஆயிரத்து, 243 கோடி கிடைத்தது.வணிகவரிகள் மூலம், கடந்த ஆண்டு, 28 ஆயிரத்து, 614 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த ஆண்டு, 37 ஆயிரத்து, 196 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. முத்திரைத்தாள் மற்றும் பதிவுகள் மூலம், கடந்த ஆண்டு, 4,650 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த ஆண்டு, 6,492 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய வரிகள் மூலம், ஓராண்டுக்கு, 5,100 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். மின்வாரியத்தை பொறுத்தவரை, 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையும், 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திரண்ட நஷ்டமும் உள்ளது. அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை நிறுத்தி, குறைந்த விலைக்கு வாங்குதல், நீண்ட காலத்துக்கான ஒப்பந்தம் செய்தல், மின் திருட்டை தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம், நஷ்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, மின்வாரியத்துக்கு, 2,196 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியில், வீடு வழங்கும் திட்டத்தில், கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்ட வீடுகளுக்கு, மீதத் தொகை வழங்கப்படும். புதிய பசுமை வீடுகள் திட்டத்தில், தகுதியுள்ளவர்கள் சேர்க்கப்படுவர். தமிழக அரசின் மொத்த வருவாயில், 46 சதவீதம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கு வழங்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மூலம் விற்பனை வரியாக தமிழக அரசுக்கு, 7,867 கோடி ரூபாய் கிடைக்கும். கடந்த ஆண்டு, 6,840 கோடி ரூபாய் கிடைத்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது !

    கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது நிறுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் லோக்சபாவில் நடந்து வருகிறது. இதில், பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "சொந்தமாக கார் வைத்திருப்பவர்களில் 15 சதவீதம் பேர், டீசல் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை நிறுத்த வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர். ஐக்கிய ஜனதா தள தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்வீனருமான சரத் யாதவ் பேசுகையில், மானிய விலை டீசலை ஆடம்பர கார்கள் வைத்திருப்பவர்களுக்கும், டெலிகாம் டவர் கம்பெனிகளுக்கும், வர்த்தக மால்களுக்கும் வழங்குவது பற்றி அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,""உங்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறோம். கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை நிறுத்திவிட்டு எந்த வகையான நடைமுறையை கடைபிடிப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்படும்,'' என்றார். மத்திய அரசு, தற்போது டீசலுக்கு லிட்டருக்கு ரூ.6.08 மானியமாக வழங்கிவருகிறது. பெட்ரோல் விலையை, சந்தைவிலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. காஸ், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை, அமைச்சர்கள் குழு முடிவு செய்தது. இழப்பை சரிக்கட்ட மானியம் வழங்கப்பட்டது. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, கடந்த ஜூன் மாதம் டீசல் மற்றும் கெரசின், காஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இந்தியாவுக்கு, 75 சதவீத கச்சா எண்ணெய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் தேவைப்படும் டீசலில், 10 சதவீதம் தொழில் துறைக்கும், 6 சதவீதம் ரயில்வேக்கும், 12 சதவீதம் விவசாயத் துறைக்கும், 15 சதவீதம் கார் உரிமையாளர்களுக்கும் போய் சேர்கிறது. இது தவிர, 8 சதவீதம் மின் சக்தி மற்றும் பஸ் போக்குவரத்திற்கு 12 சதவீதமும் பயன்படுகிறது.
    சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், இன்னும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 1.22 லட்சம் கோடி பாக்கி உள்ளது.

    லோக்சபா கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்," டீசல் விலையை நிர்ணயிப்பதை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன' என்றார்.

    மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், "" இந்தியாவில் டீசல் பயன்பாடு அதிகமாக உள்ளது. இருப்பினும் தயாரிப்பு செலவை விட குறைவாக கொடுக்கப்படுகிறது. மானிய விலையில் வழங்கப்படும் டீசலானது, லாரி மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுத்து அளிக்கப்படுகிறது. மேலும், விவசாய பயன்பாட்டிற்கும் அளிக்கப்படுகிறது. மானிய விலையில் விற்கப்படும் டீசல், பவர் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டிற்கு தவறாக உபயோக படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டீசல் விலையை, பயன்பாட்டிற்கு ஏற்ற இரட்டை விலை வைப்பதில் குழப்பம் உள்ளது. உண்மையானவர்களுக்கு மானியம், விவசாயிகள் மற்றும் போக்குவரத்து பயன்பாட்டுக்கு போய் சேரும் வகையில் அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு விரைவில் இறுதி வடிவம் கொடுக்கப்படும்,'' என்றார்.

    தமிழகத்தில் நதிகளை இணைப்பதே, அரசின் முதன்மைப் பணி தமிழகஅரசு!


    தமிழகத்தில் நதிகளை இணைப்பதே, அரசின் முதன்மைப் பணியாகக் கருதப்படுகிறது. இதனால், பாசன வசதிகளை மேம்படுத்துவது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, உள் நாட்டு நீர் போக்குவரத்து போன்ற பல பயன்கள் ஏற்படும். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். பாசன வசதிக்கு முற்றிலும் பருவ மழையை நம்பியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைப்பதை, இந்த அரசு முதன்மைப் பணியாகக் கருதுகிறது. நதிநீர் இணைப்பால், பாசன வசதிகள் மேம்படுத்துவது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, உள் நாட்டு நீர் போக்குவரத்து போன்ற பல பயன்கள் ஏற்படும். முதற்கட்டமாக, காவிரி ஆற்றை வைகை, குண்டாறு ஆறுகளுடன் இணைப்பதற்காக, காவிரி ஆற்றில் கட்டளைக் கதவணை அமைக்கும் பணி, 189 கோடி ரூபாயில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதற்காக, 2011-12ம் ஆண்டில், 93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதன் அடுத்த கட்டமாக, கட்டளைக் கதவணையை குண்டாறு ஆற்றுடன் இணைக்கும் பணியை இந்த அரசு துவங்கும். மத்திய அரசு உதவியுடன், வெள்ள மேலாண்மைப் பணியாக, இரண்டாம் கட்டத்தில் இப்பணி செய்யப்படும். முதற்கட்டமாக, கட்டளை அணைக்கட்டிலிருந்து கால்வாய் அமைத்து, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறுடன், 3,787 கோடி ரூபாய் செலவில் இணைக்கப்படும். இரண்டாவது கட்டத்தில், மணிமுத்தாறு, வைகை ஆற்றுடன் குண்டாறு, 1,379 கோடி ரூபாய் செலவில் இணைக்கப்படும். இந்த வெள்ளத்தடுப்புப் பணிகளுக்கு, 5,166 கோடி ரூபாய் மதிப்பில், விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். எனினும், மத்திய அரசின் உதவிக்காகக் காத்திருக்காமல் , மாநில அரசே இப்பணியினை உடனடியாகத் தொடங்கும். இப்பணிக்காக, 2011-12ம் ஆண்டில், 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பியாறுடன் தாமிரபரணி ஆற்றை இணைக்கும் பணி, 369 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. 2011-12ம் ஆண்டில், இப்பணிக்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. 

    தமிழகத்தின் கடன் 1,18,610 கோடி மூன்று மாதத்தில் 17,261 கோடி ரூபாய் உயர்வு!


    தமிழக அரசின் கடன் தொகை, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 610 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் மட்டும், 17 ஆயிரத்து 261 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது, தமிழக அரசின் கடன் தொகை, ஒரு லட்சத்து 1,349 கோடி ரூபாயாக இருந்தது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்று மாதங்களில், இத்தொகை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 610 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது, அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் மட்டும், 17 ஆயிரத்து 261 கோடி ரூபாய் கடன் தொகை உயர்ந்துள்ளது. இதற்கு, பல்வேறு இலவசத் திட்டங்கள் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

    தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, தற்போது 16 ஆயிரத்து 881 கோடி ரூபாயாக உள்ளது. இது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 2.90 சதவீதமாக உள்ளது. அரசின் புதிய நலத்திட்டங்களால், கூடுதலாக, 8,900 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக வணிக வரி, மாநில ஆயத்தீர்வை, முத்திரைத்தாள், பத்திரப் பதிவுக் கட்டணம் ஆகியவற்றின் மூலம், 3,618 கோடி ரூபாய் வருவாய் திரட்ட உள்ளது.

    வருங்காலத்தில் நல்ல பொருளாதார வளர்ச்சி காரணமாக, கூடுதல் வருவாய் ஆதாரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இத்தகைய கடன்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று, பட்ஜெட்டில் அரசு தெரிவித்துள்ளது. அரசின் தற்போதைய கடன் சுமை, 20.39 சதவீதம். இது, 13வது நிதிக்குழு நிர்ணயித்துள்ள, 24.50 விழுக்காட்டை விட குறைவு.

    நடப்பாண்டில் வருவாய்-செலவினம் குறித்த புள்ளி விவரங்கள் வருமாறு:
    வகை வருவாய்/செலவு ரூபாய் கோடியில்:

    மொத்த வருவாய் 85,685
    மொத்த செலவு 85,511
    வருவாய் உபரி 173.87
    நிதிப் பற்றாக்குறை 16,881
    அரசின் மொத்த கடன் 1,18,610

    இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு!


    இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, "சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம். தமிழர்கள் பிரச்னைக்கு, அரசியல் தீர்வு தான் மிகச்சிறந்த தீர்வு' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. பார்லிமென்டில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரச்னை குறித்து, அறிக்கை தாக்கல் செய்த போது, அதை முழுவதையும் படித்தார். ஆனால், நேற்று இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த அறிக்கையை, சபையில் முழுவதுமாகப் படிக்கவில்லை. மாறாக, வெறும் தாக்கல் மட்டுமே செய்யும்படி சபாநாயகர் உத்தரவிட்டதால், அதை ஏற்று தாக்கல் மட்டுமே செய்தார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை அரசாங்கத்திற்கும், அங்குள்ள தமிழர்களின் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ் பிரதிநிதிகளுடன் நடத்தும் அந்த பேச்சுவார்த்தை, மிகுந்த ஒரு கட்டமைப்புடன் நடைபெற்று வருகிறது. இது போற்றத்தக்கது. அந்த பேச்சுவார்த்தையை இந்தியா ஆதரிக்கிறது. பேச்சுவார்த்தை நல்லதொரு திசையை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதற்காக, இந்தியா அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளது. தமிழர்களின் பிரச்னைக்கு, அரசியல் தீர்வு தான் ஒரே வழி என, இந்தியா கருதுகிறது. அதைநோக்கி அமைந்த நடவடிக்கைகளை, இந்தியா எப்போதும் ஆதரித்தே வந்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலை, அறிவியல் பண்பாட்டுத் தளங்களில், மிகுந்த தொடர்பும் நட்பும் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இப்போது இந்த உறவு, நல்ல நிலையை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான, தொழில் வர்த்தக உறவுகளும் மேம்பட்டு வருகின்றன.
    இலங்கை என்பது, பயங்கரவாதத்திற்காகப் பலியான நாடு என்றுகூட சொல்லலாம். கடந்த 30 ஆண்டுகளாகவே, அங்குள்ளவர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டக்காரர்களுடன் போராடியே வந்த நாடு. போரினால் வீடிழந்து தவிக்கும் தமிழர்களுக்கு, வீடு கட்டித் தருவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது. புனரமைப்பு நடவடிக்கைகள் அனைத்தையும், இந்தியா மிகுந்த வேகத்துடன் செய்திட, ஒத்துழைப்பையும் அளித்தது. அதோடு மட்டுமல்லாது, புனரமைப்பு நடவடிக்கைகளுக்காகவே 500 கோடி ரூபாய் வரை, அந்நாட்டு அரசாங்கத்திற்கு இந்தியா வழங்கியது. இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, "சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான, புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம். தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வுதான் மிகச்சிறந்த தீர்வு. போரினால் பாதிக்கப்பட்ட, 2 லட்சத்து 90 ஆயிரம் பேர், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் திரும்பவும், அவரவர் இருப்பிடங்களிலேயே, குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி, 10 ஆயிரம் பேர் வரை மட்டுமே முகாம்களில் உள்ளனர். அவர்களும் விரைவில் மீள் குடியமர்த்தப்படுவார்கள். போர்க்குற்றங்கள் குறித்து, ஐக்கியநாடுகள் சபையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து, இந்தியாவுக்கு தெரியும். இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது குறைந்துள்ளது. சமீபகாலமாக, எந்தவொரு மீனவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை. தாக்குதல் நடத்தினால் , தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்நாட்டு அரசாங்கத்திடம், மத்திய அரசு மிகுந்த கண்டிப்புடன் கூறியுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, 104 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் உள்ளனர். இலங்கை அரசாங்கத்திடம், ஒரு இந்திய மீனவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    வளைபந்து இந்திய அணி கேப்டன் கூலி வேலை!

    வளைபந்து விளையாட்டுக்கான இந்திய அணியின் கேப்டன்; உலகக் கோப்பை போட்டியில், நாட்டுக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தவர்; இன்று தோல் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வாணியம்பாடி அருகில் உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி பத்மா. இவர்களது மகன் நாராயணசூர்யா, 33. இவருக்கு பள்ளிப் பருவத்தில் இருந்து வளைபந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். கடந்த 1990ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். எட்டாம் வகுப்பு வரை படித்த சூர்யா குடும்ப வறுமை காரணமாக, தனது கல்வியை கடந்த 93ம் ஆண்டில் நிறுத்திவிட்டார்.

    அதே ஆண்டு, வளைபந்து விளையாட்டில் சப்-ஜூனியர் பிரிவில், தேசிய அளவில் தங்க மெடல் பெற்றார். கடந்த 97ம் ஆண்டு முதல் சீனியர் பிரிவிற்காக, விளையாட துவங்கினார். 2000ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை, தமிழக அணிக்காக தங்க மெடல் பெற்று கொடுத்துள்ளார். 2006ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில், பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றார். பிறகு இந்திய அணியில் கேப்டன் பதவியை ஏற்றார்.

    கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி கேப்டன் என்ற பொறுப்புடன் விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்றார். தற்போதும் இந்திய அணி கேப்டனாக திகழ்கிறார். உலகக்கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றதற்காக, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பில், இவருக்கு எந்த அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. வறுமையில் வாடும் சூர்யா, தனது குடும்பத்தை நடத்த, வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் 140 ரூபாய்க்கு தினக்கூலி வேலை பார்த்து வருகிறார்.

    அவர் கூறியதாவது: குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக நான் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, தினக்கூலிக்கு வேலை பார்த்து வருகிறேன். சிறு வயது முதல் வளைபந்து விளையாடுவதில், எனக்கு ஆர்வம் இருந்தது. கடந்த 93ம் ஆண்டு முதல் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளேன். இரண்டு முறை உலகளவிலான போட்டிகளிலும் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளேன். தற்போது, இந்திய அணியின் கேப்டனாகவும் உள்ளேன். இந்த விளையாட்டிற்கு கல்விதுறையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தாலும், கிரிக்கெட், டென்னிஸ் போல மதிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு நாராயணசூர்யா கூறினார்.

    அங்கீகாரம் கிடைக்குமா? : வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் விளையாட, பலரிடம் கையேந்தி ஸ்பான்சர் வாங்கி விளையாட வேண்டிய நிலையில்தான் தற்போதும் இவர் உள்ளார். பல பதக்கங்களை இவர் பெற்றாலும், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மெடல்களும், பதக்கங்களும், சான்றிதழ்களுமே கிடைத்துள்ளன.

    நாராயணசூர்யா கூறியதாவது: உலக கோப்பை போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளேன். அதற்கு பத்து லட்சம் ரூபாய் அரசு சார்பில் அளிப்பதாக கூறினர். வளைபந்து சங்கத்தின் மூலம், அதற்காக விண்ணப்பித்துள்ளேன். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. இந்த வளைபந்து விளையாட்டில் உலகளவில் பெருமை தேடிக்கொடுத்தாலும் இன்றளவில் நான் வறுமையில் வாடி வருகிறேன். எனவே, புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு எனக்கும், இந்த விளையாட்டிற்கும் உரிய அங்கீகாரம் தரவேண்டும். மேலும், எனக்கு அரசு பணி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு நாராயணசூர்யா கூறுகிறார்.

    நாராயணசூர்யாவின் மனைவி ரதிபிரியாவும் வளைபந்து வீராங்கனைதான். அவரும் தேசிய அளவிலான, தெற்காசிய போட்டிகளில் விளையாடி வருகிறார். எனவே, வளை பந்து விளையாட்டு இந்திய அணியின் கவுரவம் காப்பாற்றப்பட வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

    மன்னிப்பு கோரியது ஆஸி., ரேடியோ!

    இந்தியாவையும், கங்கை நதியையும் இழிவுபடுத்திய ஆஸ்திரேலிய வானொலி நிலையம், மன்னிப்புக் கேட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த "டுடே எப்.எம்.,' என்ற வானொலி நிலையத்தில் சமீபத்தில் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சியில், தொகுப்பாளர் கைல் சேண்டிலேண்ட்ஸ் என்பவர், இந்தியா ஒரு மலக் குழி, கங்கை நதி ஒரு சாக்கடை என, இழிவாக விமர்சித்திருந்தார். இதனால், ஆஸ்திரேலிய இந்தியர்கள் கவுன்சில், குறிப்பிட்ட வானொலி நிலையமும், தொகுப்பாளரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, அந்த வானொலி நிலையத்தின் மன்னிப்பு அறிக்கையை, கவுன்சில் தலைவர் யது சிங் வெளியிட்டார். அதில்,"நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் இந்தியர்களை நேசிப்பவன். கங்கை நதி மாசுபட்டுள்ளதைக் குறிக்கும் விதத்தில்தான் நான் அதை சாக்கடை என்று சொன்னேன். அதேநேரம் அது புனித நதியாக மதிக்கப்படுவது எனக்குத் தெரியாது' என, கைல் சேண்டிலேண்ட் தெரிவித்திருந்தார். வானொலி நிலையமும் அதே கடிதத்தில் மன்னிப்புக் கோரியுள்ளது.

    சிங்கார சென்னை முதல்வர் தீவிரம்!

    மாநில தலைநகர் சென்னையை பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மற்றும் தூய்மையான நகரமாக மாற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் ஒருபகுதியாக, முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டர் மூலம் சென்னை நகரை ஆய்வு செய்தார். நகரில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை யாருக்கும் பாதிப்பில்லாமல் எவ்வாறு அகற்றுவது மற்றும் நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து பின் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதே நாள்...


  • விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயார்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது(1884)
  •  மரைனர் 7, செவ்வாய் கோளிற்கு மிக அருகில் சென்றது(1969)
  •  17 மாத தேடுதலுக்கு பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார்(1962)
  •  சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம்(1930)
  •  ஹோண்டா நிறுவன ஸ்தாபகர் சொயிச்சீரோ ஹோண்டா இறந்த தினம்(1991)
  • LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...