|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 August, 2011

தமிழகத்தின் கடன் 1,18,610 கோடி மூன்று மாதத்தில் 17,261 கோடி ரூபாய் உயர்வு!


தமிழக அரசின் கடன் தொகை, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 610 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் மட்டும், 17 ஆயிரத்து 261 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது, தமிழக அரசின் கடன் தொகை, ஒரு லட்சத்து 1,349 கோடி ரூபாயாக இருந்தது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்று மாதங்களில், இத்தொகை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 610 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது, அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் மட்டும், 17 ஆயிரத்து 261 கோடி ரூபாய் கடன் தொகை உயர்ந்துள்ளது. இதற்கு, பல்வேறு இலவசத் திட்டங்கள் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, தற்போது 16 ஆயிரத்து 881 கோடி ரூபாயாக உள்ளது. இது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 2.90 சதவீதமாக உள்ளது. அரசின் புதிய நலத்திட்டங்களால், கூடுதலாக, 8,900 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக வணிக வரி, மாநில ஆயத்தீர்வை, முத்திரைத்தாள், பத்திரப் பதிவுக் கட்டணம் ஆகியவற்றின் மூலம், 3,618 கோடி ரூபாய் வருவாய் திரட்ட உள்ளது.

வருங்காலத்தில் நல்ல பொருளாதார வளர்ச்சி காரணமாக, கூடுதல் வருவாய் ஆதாரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இத்தகைய கடன்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று, பட்ஜெட்டில் அரசு தெரிவித்துள்ளது. அரசின் தற்போதைய கடன் சுமை, 20.39 சதவீதம். இது, 13வது நிதிக்குழு நிர்ணயித்துள்ள, 24.50 விழுக்காட்டை விட குறைவு.

நடப்பாண்டில் வருவாய்-செலவினம் குறித்த புள்ளி விவரங்கள் வருமாறு:
வகை வருவாய்/செலவு ரூபாய் கோடியில்:

மொத்த வருவாய் 85,685
மொத்த செலவு 85,511
வருவாய் உபரி 173.87
நிதிப் பற்றாக்குறை 16,881
அரசின் மொத்த கடன் 1,18,610

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...