|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 February, 2012

Watch Panam Padaithavan


Watch Panam Padaithavan Movie Online

Panam Padaithavan,Watch Panam Padaithavan Movie,Panam Padaithavan Movie Online,Panam Padaithavan film,Panam Padaithavan Movie High Quality,Panam Padaithavan Movie DVD Online,Panam Padaithavan Movie Online Live, online tamil movie, tamil movies,Panam Padaithavan HQ, free
Watch Panam Padaithavan 1965 film directed by Ramaanaaa;Starring MGR,Soukar janaki,TS Balaiya, Nagesh,Ashokan,Manohar,KR Vijaya in the lead
Source 1
Source 2
 

முதுமையை விரட்டும் ஓட்ஸ்!


உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது. நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ் தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது. 

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள் பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

வார பலன்(18-2-2012 முதல் 24-2-2012 வரை)

மேஷம் பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. உடல் நலம் மேம்படும். உடன் பிறப்புகளுடன் மனம் திறந்து பேச வேண்டாம். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் வேலை பளு குறையும். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

ரிஷபம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழக்கூடும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம் பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். வருமானம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்கத் திட்டமிடக்கூடும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கடன் தொல்லைகள் தீரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடத்து முயற்சி மேற்கொள்வீர்கள். உற்றார், உறவினர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில் சில சலுகைகள் பெறக்கூடும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

கடகம் பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். மனதில் புது தெம்பு பிறக்கும். பண வரவு நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பண வரவு உண்டு. கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. இல்லையென்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

சிம்மம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த தகவல்கள் வீடு தேடி வரும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வருமானம் வரும். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உற்றார், உறவினர்களை சந்தித்து மகிழக்கூடும். பண வரவுக்கு குறைவிருக்காது. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களை கூற வேண்டாம்.

கன்னி பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். தகுதிக்கு மீறிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பண வரவு நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். மனம் மகிழும் செய்திகள் உங்களைத் தேடி வந்து மகிழ்விக்கும். வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

துலாம் பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசு அதிகாரிகள் தேவைப்படும் நேரத்தில் உதவுவார்கள். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரி்ககும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். ஆன்மீகத்தி்ல் நாட்டம் செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் யாரிடமும் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

விருச்சிகம் பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். சேமிப்பில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். பிரச்சனைகளை சாமர்த்தியமாக தீர்ப்பீர்கள்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தனுசு பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களை அனுசரி்ததுச் செல்வீர்கள். குழந்தைகள் முன்னேற்றத்தைக் காணபார்கள்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும்.

மகரம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு மாற்ற இது உகந்த வாரம் அன்று. பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களிடம் மனம் திறந்து பேசாமல் இருப்பது நல்லது. குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

கும்பம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிரிகளின் ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். மனம் மகிழும் செய்திகளை கேட்பீர்கள். கணவருடன் அன்பாகப் பழகுவீர்கள். அதே சமயம் குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத உறவினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். மனம் உற்சாகமாக இருக்கும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படும் வகையில் நடந்து கொள்வீர்கள். எதிலும் நிதானம் தேவை.

மீனம்பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். திறமை மேம்படும். பண வரவு சீராக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நல்ல செய்தி உங்களைத் தேடி வந்து மகிழ்விக்கும். உடல் நலம் மேம்படும்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு இடமாற்றம் கிடைக்கலாம். பொறுப்புகள் மாறக்கூடும். சக ஊழியர்களைப் பற்றி யாரிடமும் விமர்சிக்க வேண்டாம்.

அமெரிக்க சதிக்கு ரணில் துணை!

 இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டுள்ள சதிக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க துணை போவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் இலங்கை அரசு நியமித்துள்ள போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக் குழு குறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் மேற்குலக நாடுகளுக்கு சாதகமான அம்சங்களே இடம்பெற்றிருந்தன.இலங்கையில் எந்த ஊடகத்திலும் வெளிவராத இந்த அறிக்கை வெளிநாட்டு ஊடகங்களில் மட்டுமே பிரசுரமாகியிருந்தது. இது எப்படி?சில நாடுகள் மார்ச் மாதம் இலங்கையைப் பலி எடுக்கும் மாதம் என்கின்றன.இத்தகைய நாடுகள்தான் வியட்னாமிலும், ஆப்கனிலும் ஈராக்கிலும் போர்க் குற்றங்கள் புரிந்தவை. இந்த நாடுகளின் சதித் திட்டங்களுக்கு ரணிலும் துணை போகிறார்.

மும்பையில் தமிழர் வசிக்கும் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வி!


மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தேல்வியை சந்தித்தனர்.மும்பை மாநகராட்சிக்கு கடந்த 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் தமிழர் அதிகம் வசித்த பகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி முதல் பல்வேறு தமிழ் அமைப்புகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தது.

இதனையடுத்து அப்பகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 13ம் தேதி பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் தாராவியில் முஸ்லீம்கள் அதிகம் வாக்காளர்களாக உள்ள ஒரு வார்டைத் தவிர மற்ற 6 வார்டுகளிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இந்தத் வார்டுகளில் சிவசேனா கூட்டணி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.இதேபோல் சயான் கோல்லிவாடாவில் 168 வட்டத்தில் போட்டியிட்ட தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வார்டில் காங்கிரஸ் தோற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. சீமானின் கனவு பலித்தது  

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கர்ணன் படம்!

சிவாஜி கணேசனின் ரசிகர்களுக்கும், பழைய காலப் படங்களின் பிரியர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, செவாலியே சிவாஜி நடித்த கர்ணன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.மார்ச் மாதம் சுமார் 50 திரையரங்குகளில் திரையிடப்பட கர்ணன் படம், அதற்காக பிரத்யேகமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒலி, ஒளிப் பதிவுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சிவாஜி (கர்ணன்), ராமாராவ் (கிருஷ்ணன்) என இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களின் நடிப்பை மீண்டும் பெரிய திரைகளில் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது. ரூபாய் 40 லட்சம் செலவில் 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்து கர்ணன் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றியுள்ளனர். இத்திரைப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ள சாந்தி சொக்கலிங்கம், கர்ணன் திரைப்படத்தை மீண்டும் பெரிய திரைகளில் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார். தமிழ் திரைப்பட வரலாற்றையே புரட்டிப் போட்ட கர்ணன் திரைப்படம், நிச்சயமாக தமிழ் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று நம்புகிறோம்.

இந்தியாவில் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இரண்டாவது ஆண்டாக

 இந்தியாவில் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இரண்டாவது ஆண்டாக கேரளாவே  தொடர்கிறது என்று ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், கேரளாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2010ம் ஆண்டு 6.50 லட்சமாக இருந்தது. இதுவே 2011ல் 7.3 லட்சமாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா தொடர்பாக நீல்சன் நிறுவனம் நடத்திய ஆய்வில், இத்தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களை கோவா, ராஜஸ்தான், அந்தமான் தீவுகள் பிடித்துள்ளன.அதேப்போல சுற்றுலா நகரங்களிலும் கொச்சி ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ஜெய்ப்பூர், பெங்களூரூ, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகின் மிகப்பெரிய குரான்...

ரஷ்யாவின் கஸன் நகரில் உள்ள கோல்ஷரிப் மசூதியில் உள்ள குரான்தான் உலகத்திலேயே மிகப்பெரிய குரான் என்று உலக கின்னஸ் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.150X200 செ.மீ. நீள அகலமுள்ள இந்த குரான் 632 பக்கங்களைக் கொண்டதாகும். இதன் எடை எவ்வளவுத் தெரியுமா 800 கிலோ.

சுதந்திர இந்திய வரலாற்றில்...



பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், எம்.பி.க்கள் குழுவினருடன் பாகிஸ்தானுக்கு வரும் 21-ந் தேதி செல்கிறார். இந்தக் குழுவினர் அங்கு 24-ந் தேதிவரை தங்கி இருப்பார்கள். இந்தக் குழுவில் ஷா நவாஸ் உசேன், பீரேந்திர பிரசாத் பைஷ்யா, இந்தர்சிங் நம்தாரி, மதன்லால் சர்மா, ஷேக் சைதுல் ஹக், தருண் விஜய் ஆகிய மக்களவை எம்.பி.க்களும், பாராளுமன்ற மக்களவை தலைமை செயலாளர் டி.கே. விஸ்வநாதனும் இடம் பெறுகின்றனர் இந்தக் குழுவினர் பாகிஸ்தானில் இருக்கும்போது, அந்த நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ராசா கிலானி, செனட் தலைவர் பரூக் ஹமீத் நாயக், பாராளுமன்ற சபாநாயகர் டாக்டர் பெமிதா மிர்சா, வெளியுறவு துறை மந்திரி ஹினா ரப்பானி ஆகியோரை சந்தித்து இரு தரப்பு உறவு பற்றி பேசுகின்றனர். இந்திய எம்.பி.க்கள் குழு ஒன்று பாகிஸ்தானுக்கு செல்வது என்பது சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Giving a push to the people-to-people contact between India and Pakistan, Lok Sabha Speaker Meira Kumar is set to visit Islamabad for a five-day visit from February 21.Top officials claim this will be the first-ever official visit by an Indian LS speaker to Pakistan's National Assembly.
The invitation from Pakistan had come in 2011 with invites for Prime Minister Manmohan Singh and UPA chief Sonia Gandhi. While the PM and Gandhi have not yet decided on their visit, Kumar's trip is aimed to forge better ties between the two parliaments and the people across the border. Both India and Pakistan currently have women speakers in their Parliament's lower house. Last year, Pakistan Speaker Fehmida Mirza had visited India and met Kumar on the sidelines of the Commonwealth Parliamentary Association meet in Trinidad and Tobago. Last month, a delegation of Indian parliamentarians had visited Pakistan on a goodwill mission.
Kumar's visit also coincides with the India-Pakistan bilateral talks getting momentum as commerce minister Anand Sharma is going to Pakistan to boost bilateral trade.

The party never stops at the Brazil Carnival.













திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில்!

Grape seed extract kills head and neck cancer cells, leaves healthy cells unharmed: Cancer cells are fast-growing cells,” Agarwal says. “Not only that, but they are necessarily fast growing. When conditions exist in which they can’t grow, they die.”

Grape seed extract creates these conditions that are unfavorable to growth. Specifically, the paper shows that grape seed extract both damages cancer cells’ DNA (via increased reactive oxygen species) and stops the pathways that allow repair (as seen by decreased levels of the DNA repair molecules Brca1 and Rad51 and DNA repair foci). “Yet we saw absolutely no toxicity to the mice, themselves,” Agarwal says. Again, the grape seed extract killed the cancer cells but not the healthy cells.
“I think the whole point is that cancer cells have a lot of defective pathways and they are very vulnerable if you target those pathways. The same is not true of healthy cells,” Agarwal says.The Agarwal Lab hopes to move in the direction of clinical trials of grape seed extract, potentially as an addition to second-line therapies that target head and neck squamous cell carcinoma that has failed a first treatment.
கொலரோடோ பல்கலையின் புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவில்தான் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆனால், இவை, மற்ற நல்ல செல்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது புற்றுநோய்க்கு அளிக்கப்படும் கீமோதெரபி உட்பட அனைத்து வகை மருத்துவ சிகிச்சை முறையிலும், புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் முறையில் நல்ல செல்களும் சேர்ந்தே அழிக்கப்படுகிறது. எனவே, நோயாளிகள், புற்றுநோயில் இருந்து விடுபட்டாலும், ஆரோக்கியமான செல்களை இழந்து பலவீனமானவராக மாறி அதனாலேயே உயிரிழப்பு நேரிட்டு விடுகிறது. எனவே, திராட்சை விதையின் மூலம் புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கொண்டு வந்தால், அதனால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கூறியுள்ளார்.


உயிரின் விலை 2000 ஒபாய்...!


திருச்சி மாவட்டம் புலிவலம் பக்கம் உள்ள குருவிகாரன்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (65). இவரது மனைவி செல்லம்மாள் (56). இவர்களது மகன் தனபால் (31). விவசாயி.தனபாலுக்கும், முசிறி தாலுகா ஏவூரை சேர்ந்த கோமதி (22) என்ற பெண்ணுக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கோமதியை நகை எதுவும் வாங்கிக்கொள்ளாமல் தனபால் திருமணம் செய்து கொண்டார். கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த கோமதியை அவரது மாமியார், மாமனார் ஆகியோர் நகை போடாமல் மருமகளாக வந்தவள் என அடிக்கடி திட்டிதீர்த்தனர். இதற்கிடையில் கோமதி கருத்தரித்து 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையும் குறை கூறிய மாமி யார் செல்லம்மாள் `ஆடி மாதம் கருத்தரித்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். 

சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது. எனவே கோமதியை அடித்து கொன்று விடு' என தனது மகன் தனபாலிடம் கூறினார். இதனை தொடர்ந்து கடந்த 21-11-2010 அன்று இரவு தனபால், தனது மனைவி கோமதியின் தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த கோமதி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.கோமதியின் உடலை யாருக்கும் தெரியாமல் வெளியே எடுத்து சென்று வயலில் போட்டு தனபால், அவரது தந்தை ராமசாமி, தாயார் செல்லம்மாள் ஆகியோர் எரித்தனர்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் தனபால் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் குற்றம் சாட்டப்பட்ட தனபால், செல்லம்மாள், ராமசாமி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் ஜெயில் தண்டனையும், தனபாலுக்கு 1000 ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனையும், செல்லம்மாள், ராமசாமி ஆகியோருக்கு தலா 500 ரூபாய் அபராதமும், அதை கட்டத்தவறினால் மேலும் தலா ஒரு மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

 ஆயுள் தண்டனையும், 1000 ம் அபராதமும் இறந்தவளுக்கு போதுமா என்ன ? சட்டங்கள் மாற்றப்படவேண்டும் இல்லை ஆயுள் தண்டனை பெறவும் 1000  ம் அபராதம் கட்டவும் மக்கள் காத்துக்கிடப்பார்கள்...  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...