ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
இந்தியாவில் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இரண்டாவது ஆண்டாக
இந்தியாவில் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இரண்டாவது ஆண்டாக கேரளாவே தொடர்கிறது என்று ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், கேரளாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2010ம் ஆண்டு 6.50 லட்சமாக இருந்தது. இதுவே 2011ல் 7.3 லட்சமாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா தொடர்பாக நீல்சன் நிறுவனம் நடத்திய ஆய்வில், இத்தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களை கோவா, ராஜஸ்தான், அந்தமான் தீவுகள் பிடித்துள்ளன.அதேப்போல சுற்றுலா நகரங்களிலும் கொச்சி ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ஜெய்ப்பூர், பெங்களூரூ, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment