2012 புத்தாண்டிற்குரிய கிரகம் புதன்... மக்கள் விட்டுக் கொடுத்து இணக்கத்துடன் நடந்து கொள்வர். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். உணவு, ஜவுளி உற்பத்தி அமோகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். வேலையில்லா திண்டாட்டம் ஓரளவு குறையும். புதிய வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இரும்பு, கட்டுமானப் பொருட்கள், பெட்ரோல் விலை கடுமையாக உயரும். ராணுவம் நவீனப்படுத்தப்படும். புதிய ஏவுகணைகள் தயாரிக்கப்படும். பருவமழை நன்றாகப் பெய்யும். மழையின் கடுமையால் சேதம் ஏற்படும். கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. தண்ணீர் சுத்த குறைவால் வியாதி தலைதூக்கும். புது வியாதிகளால் மக்கள் சிரமத்திற்குள்ளாவர். டாக்டர்கள் மருத்துவத்தில் புதிய சாதனை படைப்பர். அரிசி, தானியம், எண்ணெய் வித்து விளைச்சல் நன்றாக இருக்கும். இறக்குமதி அதிகரிக்கும். வாசனைப் பொருட்களின் விலை உயரும்.
பெண் குழந்தைகள் அதிகமாகப் பிறக்கும்.பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க விழிப்புணர்வு கொள்வர். அரசியலில் பெண்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். புதிய பெண் தலைவர்கள் உருவாவர். மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இணக்க நிலை இருக்காது. அரசியல்வாதிகள் நேர்மையைப் பின்பற்றும் கட்டாய சூழல் உருவாகும். பதவி பயம் இருக்கும். இலவச திட்டங்களால் மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி அதிகரிக்கும். 2012 புத்தாண்டிற்குரிய கிரகம் புதன். அவர் வழிபட்ட புண்ணியத்தலம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு வந்த சம்பந்தர் இயற்றிய இந்த பதிகத்தைப் பாடுவோர் நூறாண்டு காலம் செல்வவளத்துடன் வாழ்வர்.
2. வைதிகத்தின் வழி ஒழுகாத அக் கைதவம் உடைக் கார் அமண் தேரரை எய்தி, வாது செயத் திருவுள்ளமே? கைதிகழ் தரு மாமணி கண்டனே, ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
3. மறை வழக்கம் இலாத மாபாவிகள் பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை முறிய வாது செயத் திருவுள்ளமே? மறி உலாம் கையில் மா மழுவாளனே, ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
4. அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக் கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும் செறுத்து, வாது செயத் திருவுள்ளமே? முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
5. அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த, வாது செயத் திருவுள்ளமே? வெந்தநீறு அது அணியும் விகிர்தனே. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
6. வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை ஓட்டி வாது செயத் திருவுள்ளமே? காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
7. அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் விழல் அது என்னும் அருகர் திறத்திறம் கழல, வாது செயத் திருவுள்ளமே? தழல் இலங்கு திருவுடைச் சைவனே. ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
8. நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற காற்றுக்கொள்ளவும் நில்லா அமணரைத் தேற்றி, வாது செயத் திருவுள்ளமே? ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய், ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
9. நீலமேனி அமணர் திறத்து நின் சீலம் வாது செயத் திருவுள்ளமே? மாலும் நான்முகனும் காண்பு அரியதோர் கோலம் மேனியது ஆகிய குன்றமே, ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
10. அன்று முப்புரம் செற்ற அழக நின் துன்று பொற்கழல் பேணா அருகரைத் தென்ற வாது செயத் திருவுள்ளமே? கன்று சாக்கியர் காணாத் தலைவனே, ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.
11. கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட, மாடக் காழிச் சம்பந்தன், மதித்த இப் பாடல் வல்லவர், பாக்கிய வாளரே.